இரும்புப் பெண்ணே எழுந்து வா....!
உன் தலைவன் படுத்துக் கொண்டே ஜெயித்தான்,
உனக்கும் அதே வலிமை உண்டு,
ஆனால் நோயில் படுக்கும் வயதல்ல உனக்கு!
வாரம் நகர்ந்து விட்டது, ஆனால்
உன் இரத்தத்தின் இரத்தங்கள் மருத்துவமனையை விட்டு நகருவதாக இல்லை!
கூடாது தான், இருந்தாலும்
நாளுக்கு நாள் அச்சம் அதிகரிக்கிறது...
சீக்கிரமே எழுந்து வா....!
அரசியலில் ஆயிரம் இருக்கலாம், ஆனால்
அதற்கு இது நேரமல்ல!
30 ஆண்டுகளாக ஒற்றை பெண்ணாக ஆண் அரசியல்வாதிகளைச் சமாளித்து வருகிறாயே...
உன் போல் துணிச்சல் இங்கு யாருக்குண்டு?
தமிழகத்தில் பழுத்த பழம் முதல் இளம் மொட்டு வரை உனை கண்டு அஞ்சுகிறதே...
அடக்கினாயே அவர்களை இரும்புக் கரம் கொண்டு!
சீக்கிரமே எழுந்து வா...!
உச்சநீதிமன்றம் சென்று போராடினாயே,
காவிரி இனி உனை நம்பி!
கொடுங்கோலன் ராஜபக்க்ஷேவை குற்றவாளி கூண்டில் ஏற்ற தீர்மானம் நிறைவேற்றினாயே,
அவன் எண்ண வேண்டாமா கம்பி?
தமிழ் ஈழமே தீர்வு என்றாயே,
ஈடேற வேண்டாமா அவ்வெண்ணம்?
இன்று,
தமிழகத்திற்கு நீர் தேவை,
தமிழர்களுக்கு நீ தேவை!
உனது அதிரடி நிர்வாகம் ரொம்பவே தேவை!
பிறவி குணமான பிடிவாதம் அதை விட தேவை!
இரும்புப் பெண்ணே எழுந்து வா...
சீக்கிரமே எழுந்து வா....!
