சிவப்பு மண்டலப் பகுதிகள் அல்லாத இடங்களில் முஸ்லீம் அல்லாதோரின் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இனி பழையபடி சமய வழிபாடுகளை நடத்தலாம்!
நன்றி : சிவா |
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, #MCO அமுலாக்கம் தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் நிலையிலான சிறப்புக் கூட்டத்தில், அங்கு சமய வழிபாடுகளை நடத்த அனுமதிப்பது மீதான SOP-களுக்கு ஒப்புதல் கிடைத்தது.
தற்சமயம் மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, #RMCO அமுலில் இருப்பதால், ஒவ்வொரு துறையாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், தேசிய ஒற்றுமை அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
என்றாலும் அது அந்தந்த மாநில அரசுகளின் ஒப்புதலைப் பொருத்தது என அமைச்சு தெளிவுப்படுத்தியது.
கீழ்காணும் அந்த SOP-யானது தேசியப் பாதுகாப்பு மன்றம் MKN, சுகாதார அமைச்சு ஆகியவை வரைந்துள்ள வழிகாட்டி கோட்பாடுகளை பின்பற்றியது.
↪ அரசாங்கத்தால் சிவப்பு மண்டமாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் அல்லாத இடங்களில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் செயல்படலாம்.
↪ ஆனால், கூடல் இடைவெளி கண்டிப்பாகக் கடைபிடிக்கப்பட வேண்டும். அதாவது, ஒரு நேரத்தில் பக்தர்களின் எண்ணிக்கை வழிபாட்டு தலங்கள்/மண்டபங்களின் அளவில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே இருக்க வேண்டும்.
↪ பழையபடி வழிபாட்டு நேரங்களுக்குத் திரும்பலாம். ஆனால் புதிய இயல்புக்கு ஏற்ப பக்தர்கள் மத்தியில் சுயக் கட்டுப்பாடு முக்கியம்.
↪ மாநில அரசுகள் நிர்ணயித்த வழிகாட்டிகளைப் பின்பற்ற வேண்டும்.
↪ வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு வரையறை உண்டு. அதாவது இன்னமும் தடை விதிக்கப்பட்டுள்ள மத ஊர்வலங்கள், அதிகமானோரை உட்படுத்திய அல்லது கட்டுப்படுத்த சிரமான பெரிய அளவிலான ஒன்று கூடல்கள், அன்னதானம்/ விருந்துபசரிப்புகளுக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை.
↪ சுகாதார அமைச்சின் 342-ஆவது விதி, தேசிய பாதுகாப்பு மன்றம், ஊராட்சி மன்றங்கள், மாநில அரசுகளின் விதிகளுக்கு உட்பட்டது.
அமைச்சின் அறிக்கை
சமயத் தலைவர்கள், கோவில் நிர்வாகங்கள் மற்றும் பக்தர்களுக்கு அமைச்சின் சார்பில் இதனால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், புதிய வழமைக்கு ஏற்ப சுயக் கட்டுப்பாடு அவசியம். தூர இடைவெளியைக் கடைப்பிடிப்பது, சுவாசக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டோ கிருமி நாசினியிலோ சுத்தமாகக் கழுவ வேண்டும்.
3 மாதங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள அனுமதியை அனைவரும் உரிய முறையில், விதிமுறைகளைப் பின் பற்றி பயன்படுத்தி, இறைவனின் அருளைப் பெறுவோமாக !
#வியன்
No comments:
Post a Comment