அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Sunday, 21 June 2020

20 பேருக்கும் மேற்போகாமல் திருமணங்களுக்கு அனுமதி !

முஸ்லீம் அல்லாதோரின் திருமணங்கள் ஆலயங்களிலும் தேவாலயங்களிலும் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

ன்றாலும் 20 பேர் மட்டுமே அதில் பங்கேற்க முடியும்; திருமணப்  பதிவு ( Register)  நிகழ்வையும் அவ்விதிமுறை உட்படுத்தியிருக்கும்.

நன்றிSimon Shashi Photography


டமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, #MCO அமுலாக்கம் மீதான அமைச்சர் நிலையிலான சிறப்புக் கூட்டத்தில் அந்த முடிவெடுக்கப்பட்டதாக  பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

திருமணம் நடக்கும் ஆலயத்தின் அல்லது மண்டபத்தின் அளவையும் அது பொருத்தது என்றார் அவர்.

தாவது சிறிய ஆலயங்கள் என்றால் அனுமதிக்கப்பட்டதை விட எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். 


" திருமண வைபவங்களில் 20 பேருக்கும் மேல் (திருமணத் துணைப்  பதிவாளர் உட்பட) இருக்கக் கூடாது. அவ்வனுமதி, வழிபாட்டுத் தலங்களின் கொள்ளளவு மற்றும் கூடல் இடைவெளி SOP-க்கு உட்பட்டது" 

- அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி

னுமதி  வழங்கப்பட்டாலும், தேசியப் பாதுகாப்பு மன்றம் எற்கனவே வெளியிட்ட கூடல் இடைவெளி உள்ளிட்ட தர செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) கடைப்பிடிக்கப்படுவது உறுதிச் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் நினைவுறுத்தினார்.  

ஆனால், ஆனால்....

திருமண விருந்துபசரிப்புகளுக்கு ( Receptions) இன்னமும் அனுமதியில்லை என்றார் அவர்.

முன்னதாக, முஸ்லீம் அல்லாதோரின் ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் வழிபாடுகளை பழையபடி மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியது.

ஜூன் 15-ஆம் தேதி முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஆயினும், தூர இடைவெளியை உறுதிச் செய்யும் பொருட்டு வழிபாட்டுத் தலங்களின் கொள்ளவில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பக்தர்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என விதிமுறை நிர்ணயிக்கப்பட்டது.

3 மாத இடைவெளிக்குப் பிறகு ஒருவழியாக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

தனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதும் கொள்ளாததும் நம்மிடமே உள்ளது.

து எப்படியோ, தள்ளிப் போன திருமணங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

ல்லறத்தில் காலடி எடுத்து வைக்கவிருக்கும் அனைவருக்கும் ...

#வியன் தனது advance வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறான்.

#MCO #CMCO #RMCO #PKP #PKPB #PKPP #Covid19 #CoronaVirus #IsmailSabri