அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Thursday, 18 June 2020

பிரதமர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன் ? குட்டு உடைந்தது !

புத்ராஜெயாவைக் கைப்பற்றப் போவதாக சூளுரைத்த அடுத்த சில வாரங்களிலேயே நீயா நானா போட்டி மீண்டும் தலைத் தூக்க, பக்காத்தானின் அம்முயற்சி சுணக்கமடைந்திருக்கிறது.

லைவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி மீண்டும் ஆட்சிப் பீடத்தை கனவு கண்ட  அதன் ஆதரவாளர்களும் சோர்வடைந்துள்ளனர்; உள்ளபடியே சினமடைந்தும் போயிருக்கின்றனர்.

ன்பதாவது பிரதமராக யாரை முன்மொழிவது என்பதில் ஆரம்பித்த பேச்சு வார்த்தை இன்னமும் ஜவ்வாய் இழுத்துக் கொண்டிருப்பது சொந்தக் கட்சியினரை முகம் சுளிக்க வைத்திருப்பதோடு , எதிர்கட்சியினரின் நகைப்புக்கும் நடுநிலையாளர்களின் வெறுப்புக்கும் ஆளாகியிருக்கிறது. 

ட்சித் தாவலால் பெரும்பான்மை இழந்து ஏழாவது பிரதமர் பதவியைத் தூக்கிப் போட்டு விட்டு போனவர் ஒன்பதாவது பிரதமராக விரும்புகிறார்; அவரே அப்படியென்றால், எட்டாவது பிரதமர் நாற்காலியை நெருங்கி பின்பு அதனை நழுவ விட்டவர் சும்மா இருப்பாரா?  

ந்த இரு பெருந்தலைவர்களுக்கு மத்தியில் சிக்குண்டு பக்காத்தான் கூட்டணி பிளவுப்பட்டுக் கிடக்கிறது.

யாரை ஆதரிப்பது?   யாரை ஒதுக்குவது என தெரியாமல் விழி  பிதுங்கிப் போயிருக்கிறார்களாம் ( இது வெளியில் ஆனால் உள்ளே ஏறக்குறைய ஒரு முடிவோடு தான் பேசுவதாக அரசல் புரசல் )

நேற்றும் இன்றும்  கூட்டணித் தலைவர்களே பொதுவில் ஒருவரை ஒருவர் சாடி பேசி வருகின்றனர்.

டைசியில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் நிலவிய குழப்பங்களுக்கும், தாமதத்திற்கும் அன்வார் மன்னிப்பும் கேட்டு விட்டார். 

ண்மையில் உள்ளே என்ன தான் நடந்தது என்பது இப்போது வெளிச்சமாகியுள்ளது.

ம், அன்வார் பிரதமராவதை மகாதீர் விரும்பவில்லை ! 😞 

ட போங்க, இது என்றோ எங்களுக்குத் தெரியும் என்கிறீர்களா? உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் பக்காத்தான் கூட்டணி தலைவர்களுக்கு முகத்தில் அடித்தாற்போல் இப்போது தானே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டந்த வாரம் PKR தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது தான் மகாதீர் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாய் அந்த குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.

கூட்டத்தில் PH கூட்டணித் தலைவர்கள் அனைவரும் அன்வாரையே பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கின்றனர். 

ல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட மகாதீர் கடைசியில்....

" நான் 6 மாதங்களுக்கு பிரதமராக இருக்க வாய்ப்பளியுங்கள்!" எனக் கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

"இதென்ன பிரமாதம், அடுத்து special item ஒன்னு வருதுல்ல!" எனும் வடிவேலு வசனத்திற்கு ஏற்ப... 




" பிரதமராக அன்வாரை ஏற்றுக்  கொள்ள முடியாது. அவர் பல்லினக் கட்சியின் தலைவர் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை !"

னக் கூறி முடித்த போது அன்வாருக்கும் அங்கிருந்த மற்றவர்களுக்கும் அதிர்ச்சியில் முகம் எப்படி உறைந்துப் போயிருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்ய  முடிகிறதல்லவா?

ருந்தாலும், சுதாகரித்துக் கொண்ட அன்வார், நீங்கள் சொல்வது போல் 6 மாதங்களுக்குப் பிரதமராக இருந்து விட்டு என்னிடம் ஒப்படைக்கும் போது ( அவர் கொடுக்க மாட்டார் என்பது இவருக்கும் தெரியும், இருந்தாலும் ஒரு பேச்சுக்கு கேட்போமே என கேட்டு வைத்திருக்கிறார்) அப்போதும், நான் பல்லினக் கட்சித் தலைவர் தான். எனவே இரண்டுக்கும் என்ன வேறுபாடு என மகாதீரைப் பார்த்து கேட்டிருக்கிறார்.

தற்கு பெரியவர் என்ன பதிலளித்தார் ( பதிலளித்தாரா இல்லை ஏளனமாக புன்னகைத்தாரா? என்பது அங்கிருந்தவர்களைக் கேட்டால் தான் தெரியும்) என்ற விவரம் இல்லை. 

ந்த நிலையில் தான் இன்னும் ஒரு வாரத்தில் முடிவெடுப்போம் என பேசிக் கூட்டம் கலைந்திருக்கிறது.

து நடந்தது ஜூன் 9-ஆம் தேதி.

THANKS 👌 THE STAR 
ன்வாரா மகாதீரா என்று இன்று முடிவெடுத்தே ஆவது என்ற தீர்மானத்தில் ஜூன் 13-ஆம் தேதி மீண்டும் கூடியிருக்கின்றனர்.

ப்போதும் அன்வாரையே முன்மொழிந்த பக்காத்தான் உறுப்புக் கட்சித் தலைவர்கள், மகாதீர் தரப்பில் இருந்து மற்றொரு அதிர்ச்சி வைத்தியத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ம், போன வாரம் தான் 6 மாதங்கள் கொடுங்கள் எனக் கேட்ட 'பெரிசு' இம்முறை, 6 மாதங்கள் போதாது, 12 மாதங்கள் வேண்டும் என அசால்டாக அணுகுண்டையே வீசியிருக்கிறார்.

ஜீப் விட்டுச் சென்ற பிரச்னைகளை மட்டுமல்ல, தற்போது முகிதின் யாசின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட பிரச்னைகளையும் தீர்க்க ஓராண்டு தேவைப்படுவதாகக் கூறினாராம்.

தற்கு அன்வார் என்ன reaction கொடுத்தார் என்பது தெரியவில்லை (உண்மையிலேயே பாவம்யா மனுசன், எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாருல்ல !)

னால், பக்காத்தான் நட்புக் கட்சியான WARISAN தலைவர் டத்தோ ஸ்ரீ Shafie Apdal, அதெல்லாம் முடியாது. 12 மாதங்கள் என்பது மிக நீண்ட காலம், 6 மாதங்கள் என்பதை வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம் என்றிருக்கிறார்.

அதற்கும் மகாதீர் மசியவில்லையாம் 😠

பெரியவர் தனது பிடிவாதத்தில் இறங்கி வருவதாகத் தெரியவில்லை என்பதை உணர்ந்த ( இப்போது தான் உணர்ந்தீர்களா? ") பக்காத்தான் தலைவர்கள் அன்வாரே பிரதமர் வேட்பாளர் என்ற பழைய நிலைப்பாட்டுக்குப் போனார்கள்.

THANKS 👉 DIARI MAKLUMAT
கூட்டம் கலைந்தவுடன் ஜூன் 16-ஆம் தேதி முடிவெடுக்கலாம் என இணக்கம் கண்ட நிலையில், அன்றையத் தேதியில் அன்வார் சரவாக்கிற்குச் செல்ல வேண்டியிருந்ததால் திட்டமிட்டப்படி கூட்டம் நடக்கவில்லை.
க, இதனால் சொல்ல வருவது என்னவென்றால் , அன்வாருக்குப் பதிலாக வேறு யாரோ பிரதமர் வேட்பாளராக முடிவு செய்யப்பட்டிருப்பதாக, நம்பந்தகுந்த வட்டாரம், தகாத வட்டாரம் எனக் கூறிக் கொண்டு யாராவது சுற்றினால், அது உண்மையாகி விடாது; அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
பிரதமர் வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் மகாதீர் பெயரை முன்மொழிந்ததே மகாதீர் தான். அதற்கு Shafie ஆதரவு கொடுத்தார். அவ்வளவு தான்!
இறுதி முடிவு எதும் எட்டப்படவில்லை என்பதே உண்மை.
நாளை ஜூன் 19-ஆம் தேதி PKR கட்சியின் உச்சமன்றம் தனது மாதாந்திர கூட்டத்தை நடத்தும். அதன் போது பிரதமர் வேட்பாளர் குறித்த கட்சியின் நிலைப்பாடு இறுதிச் செய்யப்படும்....
தையெல்லாம் சொல்வது #வியன் அல்ல.
மேற்கண்ட அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துக் கொண்ட PKR பொதுச் செயலாளரும், PH Plus  கூட்டணியின் தலைமைச் செயலாளருமான டத்தோ ஸ்ரீ SAIFUDDIN NASUTION ISMAIL 
க்கட்டுரையை இதோடு முடித்து விடுகிறேன்.... மேற்கொண்டு எதனையும் சொல்ல விரும்பவில்லை. ஜீரணிக்க நேரம் வேண்டும்....

போகிற போக்கில் நீங்கள் கீழே கருத்துகளை வைத்து விட்டுப் போங்கள். மயக்கம் தெளிந்தப் பிறகு நான் படித்து, மீண்டும் மயக்க நிலைக்குச் சென்று விடுகிறேன்!

No comments: