அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Monday, 22 June 2020

மகாதீரை நம்ப முடியாது - அன்வார் !


" அவன் ஏன் அரசன் இல்லை? ஏன்? "

#பாகுபலி படத்தில் காலக்கேயாவைக் கொன்ற தன் மகன் பல்வாள்தேவனை ஒதுக்கி விட்டு தம்பி மகன் அமரேந்திர பாகுபலியை அரசனாக்கிய ராஜமாதா சிவகாமி தேவியிடம் பிங்கலத் தேவர் நாசர் எதிர்த்து பேசும் வசனம் இது.

அது போல "என்ன, அடுத்தப் பிரதமரும் மகாதீரா? ஏன் நானில்லை? "
என்பதை  முதன் முறையாக பகிர்ந்துக் கொண்டிருக்கிறார், பக்காத்தான் கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

நேற்றிரவு Facebook வாயிலாக தனது ஆதரவாளர்களிடம் நேரலையாக பேசிய போது, அந்த முன்னாள் துணைப் பிரதமர் ஒரு வகையில் தனது 'ஆதங்கத்தைக்' கொட்டித் தீர்த்தார். 

ஒன்பதாவது பிரதமர் வேட்பாளராக மீண்டும் மகாதீரையே நிறுத்துவதா? அதெல்லாம் முடியாது! எங்கள் தேர்வு எங்கள் தலைவரே ! என்ற ரீதியில் PKR மத்திய செயலவை உறுப்பினர்களும் , நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது தெரிந்ததே.

உடனே, கூட்டணிக் கட்சிகளான #DAP-யும் #AMANAH-வும் வரிந்துக் கட்டிக் கொண்டு யாரிடம் கதை விடுகிறீர்கள்? பழைய மீட்டிங் கோப்புகளை எடுத்துப் பாருங்கள், நீங்கள் பேசி ஒப்புக் கொண்டது என்ன என்பது தெரியும் என அறிக்கையில் சூட்டைக் கிளப்பி விட்டனர்.

என்னடா இது? ஏதோ ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்கள் என்றுப் பார்த்தால் இப்படி இவர்களுக்குள்ளேயே வெளிப்படையாக அடித்துக் கொள்கிறார்களே என , பொது மக்கள் மட்டுமல்ல, PH, மன்னிக்கவும் இப்போது PH Plus-சாம் :-) - கூட்டணியினரே எரிச்சலடையத் தொடங்கினர்.

இதை சூட்டோடு சூடாக கட்டுத் தொடராக வியனும் அளவான காரத்தோடு கொடுத்திருந்தான் 😜

இந்த நிலையில் தான், War-ருக்குத் தயாரான அன்WAR விரிவான விளக்கத்தோடு வந்திருக்கிறார்.

யார் அடுத்தப் பிரதமர் என்ற சர்ச்சை வெடிக்கும் முன், கூட்டணி கட்சிகள் முதலில் தமதுப் பெயரைத் தான் முன்மொழிந்ததாகவும், ஆனால் அதற்கு மகாதீர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அன்வார் சொன்னார்.

மூன்றாவது முறையாக பிரதமராகியே தீருவேன் என மகாதீர் நினைத்திருக்கலாம் என்றார் அவர்.

( இருக்கலாம், காரணம் என்னவென்றால், 2 முறை பிரதமராகி யாரும் செய்யாத சாதனையை மகாதீர் செய்து விட்டார்; ஆனால் மகாதீரை தினமும் Facebook-கில் Trol-லில் விட்டு Likes-சுகளையும் Share-களையும் அள்ளி வரும் மற்றொரு முன்னாள் ஆன நஜீப், திடீர் தேர்தல் வந்தால் பிரதராகி விட்டால், தனது சாதனையை சமன் செய்து விடுவாரோ என்ன மகாதீர் பயந்திருக்கலாம் !)

சரி கதைக்கு வருவோம்... மகாதீரையே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்ற நிலைபாட்டுக்கு ஆதரவாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

" நான் சும்மே இருப்பேனா? 24 ஆண்டுகள் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து தேய் தேய் என தேய்த்து விட்டீர். இப்போதாவது அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்தால் என்ன? அது நாம் ஏற்கனவே பேசி முடிவெடுத்தது தானே? " என அன்வார் நேரடியாகக் கேட்டிருக்கிறார். ( அவர் கேட்ட தொனி எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை)

ஏறக்குறைய எல்லாருமே எதிர் கருத்தை வைத்தார்கள், ஆனால் பிடிவாதத்திற்கு பெயர் போன மகா தீரர் இறங்கி வரவே இல்லை. ( அழாதீங்க அன்வார், உங்க நெலமை புரிது ) 

ஒருவேளை பக்காத்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர் என்பது உள்ளிட்ட நாட்டு நடப்புகளை Tazkirah Anwar என்ற Facebook நேரலையில் பேசினார்.

மகாதீர் தன்னைத் தானே முன்மொழிந்த விவகாரத்தின் பின்னணியில் ஏதோ இருக்கிறதே என்ற சந்தேகம் எங்களுக்கு! ஒருவேளை அது நடந்தால், அதற்கென்று சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

மகாதீர் விரும்பியதைப் போலவே அவரை 6 மாதங்களுக்கு பிரதமராக நீடிக்க விட்டால், கண்டிப்பாக Black n White உடன்பாடு வேண்டும். இல்லையென்றால் பழையபடி வாக்குறுதி காற்றில பறந்தே போய் விடும். ஆக, இந்த இடத்தில் ஒரு வித சந்தேகம் உண்டு.

மகாதீர் யாரென்று எங்களுக்குத் தெரியாதா? அவரை 100 விழுக்காடு எல்லாம் நம்பி விட முடியாது (அனுபவம் பேசுதோ?)

" உடன்பாட்டுக்கு ஒப்புக் கொண்டு கையெடுத்திட்டால் பேச்சு, இல்லையென்றால் அரசாங்கத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்" அது வரைக்கும் போயிருக்கிறது  விவாதம் (Wow, Not Bad)

மகாதீரை மீண்டும் பிரதமராக கொண்டு வருவது இந்தக் காலக்கட்டத்திற்கு சரியான தேர்வாக இருக்காது.( அதாகப்பட்டது, நாட்டுக்கு நல்லதில்ல அப்டிங்குறீங்க?) 😅

கொரோனா சீற்றம் தணிந்த பிறகு மீட்சிக்கு அதிக வேலை இருக்கிறது; அந்த நேரத்தில் 6 மாதத்தற்கு ஒருவர் பிரதமர், அதன் பிறகு இன்னொருவர் என்ற கதையெல்லாம் வேலைக்கு ஆகாது என அன்வார் சுட்டிக் காட்டினார்.

"நாம் கருத்து வேறுபடுகிறோம்; என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றேன்.அரசுத் துறைகள், நீதி பரிபாலனத் துறை, ஊடக சுதந்திரம், ஊழல் ஒழிப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் திருத்தங்கள் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. வேண்டியவருக்கு 'அளவா' வேண்டாதவருக்கு அல்வா என்ற கதையெல்லம் கிடையாது. அதையெல்லாம் ஒழிக்க வேண்டும். எனவே தான் அந்த 6 மாத கணக்கை, நான் ஆதரிக்கவில்லை!" 

இதையெல்லாம் விட, அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும், அப்புறம் பார்க்கலாம் அவரை சித்தப்பா என்றழைப்பதை! என்பதற்கொப்ப மகாதீருக்கே மக்களவையில் இன்னும் பெரும்பான்மைக் கிடைக்கவில்லை ( வெளியில் கூறிக் கொண்டாலும் எதுவும் உறுதியாகவில்லை)

ஒரு சிலர் போகிறப் போக்கில் கூறிக் கொள்கிறார்கள், மகாதீருக்கு பெரும்பான்மை இருப்பதாக ! ஆனால் இன்று வரை அது உறுதியாகவில்லையே? (ஏதோ 24 மணி நேரமும் சட்டைப் பாக்கெட்டிலேயே 112 பேரின் ஆதரவு கையெழுத்துகளை வைத்திருப்பது போல் பெரியவரும் பேசுவார்) 😏

நாங்கள் (PKR) ஆதரவு தந்தால் அவருக்கு பெரும்பான்மை கிடைத்து விடும் எங்கிறார்கள், அது அவர்களின் கருத்து.

இப்படியெல்லாம் கூறுவதால் பக்காத்தானுக்கு தாம் ஏதோ துரோகம் இழைத்து விட்டதாக அர்த்தமாகாது; நாங்கள் துரோகிகள் அல்லர் என்கிறார் அன்வார் தெளிவாக.

அதே சமயம் , பிரதமர் வேட்பாளர் தேர்வு சர்ச்சையால் பக்காத்தான் உடைந்து விட்டது என்ற பேச்சுக்கும் இடமில்லை. இது போன்ற சர்ச்சைகள் எங்களுக்கொன்றும் புதிதல்ல. மக்கள் கூட்டணியாக (Pakatan Rakyat) இருந்த போதே எவ்வளவோ பார்த்தவர்கள் நாங்கள் என்றார்.

ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன், மக்களைச் சந்திக்காமல் ஆட்சியில் அமர்ந்த #PerikatanNasional கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டுமென்றால், மகாதீருடனும், #WARISAN கட்சியுடனும் இணங்கிப் போகத்தான் வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

தனிப்பட்ட ஆசைகளை எல்லாம் மீறி, பொதுத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் எல்லாருடைய விருப்பம், போராட்டம் என முடித்தார், 73 வயது அன்வார்.

#வியன் 

No comments: