அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Saturday, 13 June 2020

MCO Magic : வெளி வந்த ஓவியத் திறமை !

டமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, #MCO தொடங்கியதில்  இருந்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் பொழுதுப் போக தங்களுக்குப் பிடித்தவற்றை செய்து வந்தார்கள். 

ள்ளிப் பருவத்தோடு நின்று விட்ட, அல்லது வேலைப் பளுவால் மறந்துப் போன பல அம்சங்கள் நமக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தன. 

பெரும்பாலோர் சமையல் கட்டில் ஆவர்த்தனம் செய்ததை நமது முந்தையப் பதிவுகளில் பார்த்தோம். இம்முறை தங்களின் ஓவியத் திறமையை வெளியுலகிற்குக் காட்டியவர்களைக் காண்போம்...  


வினோத்குமார் ராமகிருஷ்ணன்

நெகிரி செம்பிலான், பகாவ் வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ்ப் பள்ளி  ஆசிரியர் வினோத்குமார் ராமகிருஷ்ணன்.  வினோத், MRSM பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த இளைஞருக்குள்ளும் ஓர் ஓவியன் ஒளிந்திருக்கிறான் என்பது அவரின் நட்பு வட்டாரங்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் பொதுவில் தெரிய இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO  உதவியிருக்கிறது.

இவ்வளவு நாளும் friend list-டில் இருந்த போதும், இவரின் MCO ஓவிங்கள் தான் இந்த இளைஞரின் திறமை மீது #வியன் தனது கவனத்தைத் திருப்ப காரணம்.



மண்டாலா ஓவியம் ( காலச்சக்கர ஓவியம் என்றும் அழைக்கிறார்கள் ) இவரின் முதன்மைத் தேர்வாக இருக்கின்றது. மண்டாலா ஓவியம் வரையும் போது , அது மனதுக்கு அமைதியைக்  கொடுக்கும்; மன உளைச்சலில் இருந்தால் கூட, நமது முழு கவனமும் ஓவியத்தில் இருக்கும் என்கிறார்,  தமிழ் மொழி தேசிய முதன்மைப் பயிற்றூநராகவும் உள்ள வினோத். Modern Arts- களையும் இவர் விட்டு வைப்பதில்லை. அவற்றையும் அவ்வப்போது ஒரு கை பார்த்து விடுகிறார். 
















ந்த ஓவியக் கலை MCO காலத்தில் நேரத்தை நல்ல பயனுள்ள வழியில் கழிக்க தமக்குப் பெரிதும் உதவியிருப்பதாகக் கூறிய போது வினோத்தின் குரலில் ஒரு திருப்தி வெளிப்பட்டது. 

வெறும் ஆசிரியர் - ஓவியர் என நினைத்தால் மனிதர் கவிஞர் - எழுத்தாளர் என மற்றொரு பக்கமும் வெளுத்து வாங்குகிறார்.

லைச்சாரல் என்ற குழுமத்தில் ஒரு படைப்பாளராக இருப்பவர், தனது   கவிதைகளையும் எழுத்துகளையும் புத்தகங்களாகவும் வெளிட்டிருக்கிறார்.

காதல் - நட்பு என வழக்கமான அம்சங்களைத் தொடாமல், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களைப் பற்றி தனது எழுத்தின்  மூலம் பேசுகிறார்.

திருநங்கைகள், கைப்பெண்கள், சிசுக்கலைப்பு உள்ளிட்ட விஷயங்களைத் தொட்டு, தனக்கென ஒரு இரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் வினோத், இந்த MOC காலத்தில் மற்றவர் அதிகம் தொடாத முக்கிய அம்சத்தைத் தொட்டு எழுதி வருகிறாராம். ( அப்படைப்பைக் காண வியனும் ஆவலாக இருக்கிறான் வினோத் ) 

ரிங்க,  ஆசிரியரே, முடிந்தால் நேரம் கிடைக்கும் போது மாணவர்களிடத்திலும் உங்களுக்குத் தெரிந்த ஓவியக் கலையைக் கற்றுக்  கொடுக்கலாமே...

MCO காலத்து பொக்கிஷமாக மட்டுமே இருந்து விடாமல், தொடர்ந்து கைவண்ணத்தைக் காட்டுங்கள்.....



சரண்யா மணிராஜூ

சிலாங்கூர் பூச்சோங்கில் வசிக்கும் சரண்யா இயல்பாகவே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர். பள்ளி நாட்களிலேயே ஓவியம் வரைதல், கோலமிடுதல் என தன்னை பிசியாக வைத்திருப்பவர், SPM முடித்து தற்போது ஆறாம் படிவ நுழைவுக்காகக் காத்திருக்கும் போது MCO காலத்தை விட்டு வைப்பாரா?

உடனே ஆக்ஷனில் இறங்கி விட்டார்.

காகவி பாரதியார் தொடங்கி, மகாத்மா காந்தியடிகள்,  கொரோனா வரை மனதில் நினைத்ததை ஓவியமாகத் தீட்டி விட்டார். பயிற்சிகள் அவரை முழுமையாக்கட்டும்.


வெறும் ஓவியத்தோடு நிறுத்தி விட்டார் என்றால் இல்லை. மினி வீடுகளைக்  கட்டி தனது 'கட்டடக் கலையைக்' காட்டி பெற்றோரையும் உடன் பிறப்புகளையும் மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்து விட்டார். 

ரவேற்பறை என்ன,மையலறை என்ன, குளியல் அறை என்ன, டுக்கும் அறை என்ன ...? யப்பப்பா... !

தேவையற்ற அட்டைப் பெட்டி, வண்ணத் தாட்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, எங்கெங்கு என்ன பொருட்கள் இருக்குமோ அவற்றை அவ்வளவு நுணுக்கமாகப் பார்த்து பார்த்து கனவு 'வீட்டை' இல்லை இல்லை பங்களாவையே கட்டி விட்டார்.  


சரண்யா கட்டிய கனவு பங்களா 



வரின் திறமையைக் கண்ட சக தோழியரும் நட்பு வட்டமும் அவ்வப்போது பிறந்த நாள் பரிசுக் கூடைகளை செய்து கொடுக்க ஆர்டர் கொடுத்தும் வருகின்றனர். நம்பிக்கை வைத்து தம்மை தேடி வரும் ஆர்டர்களை அவர் கவனுமுடன் நேர்த்தியாகக் கையாள்கிறார். 

சரண்யா கைப்பட செய்த பிறந்தாள் பரிசுக் கூடைகள் / அன்பளிப்புகள்

தொழில்முறையாக இல்லா விட்டாலும், ஏறக்குறைய கடைகளில் வாங்கும் திருப்தி நமக்கு. 

லாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை நடத்திய Varma Art Challenge போட்டியில் பங்குப் பெற்று இரண்டாம் பரிசையும் வென்றிருக்கின்றார். 


ந்த அளவாயினும் இது போன்ற அங்கீகாரங்கள் ஊக்கமூட்டும் என்பதில் ஐயமில்லை. படிவம் 6 , பிறகு பல்கலைக் கழகம் என போய் விட்டாலும், கையில் இருக்கும் திறமையை விட்டு விடக் கூடாது சரண்யா...

வாய்ப்புக் கிடைத்தால் ஓவியக் கலையை முறையாகக் கற்றுத் தேர்ந்து, இன்னும் ஏராளமான, மேலும் தரமான படைப்புகளைத் தர முடியும்.

ல்லாருக்கும் அத்தகையச் சந்தர்ப்பங்கள் அமைந்து  விடாது அல்லவா...!



விக்னேஸ்வரி பாலன்


சொந்த ஊர் பேராக், குவால கூராவ். தற்சமயம் சிலாங்கூர், செலாயாங்கில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் விக்னேஸ்வரி, சிறு வயதில் இருந்தே தனக்கு வர்ணங்கள் என்றால் பிரியம் என்கிறார். 

ர்ணங்களால்  மூளை செல்லுகளை active ஆக்க முடிவதோடு நமது படைப்பாற்றலையும் பெருக்க முடியும்  என்பது இவரின் அசாத்திய நம்பிக்கை. 

டிப்படையில் அறிவியல் துறை மாணவி தான் என்றாலும், கலையின் மீது  கொண்ட ஆர்வத்தால் Graphic Design-னில் மேற்கல்வி  பயில வழி செய்ததாக சொன்னார்.

னது சீன நண்பர்களுடன்பழகிய போது வண்ணக்கோல் ஓவியம் அல்லது எண்ணெய் வெளிர் வரைதல் எனப்படும் #OilPastelDrawing மீது இவருக்கு காதல் வந்ததாம். 

ன்றாலும் வேலைச் சூழலில் தனது சிந்தனையில் உதித்தவற்றை செயல்வடிவம் ஆக்க முடியாமல் போனதாம். எனவே, இந்த MCO காலத்தில் அதனைச் செயலாற்றியிருக்கிறார். 

தொடக்கத்தில் தெய்வப் படங்களை செதுக்க ஆரம்பித்திருக்கிறார். MCO-வால் தம்மைப் போலவே KL-லில் முடங்கிய தமது  மூத்த சகோதரி கமலி பாலன் கொடுத்த ஊக்கம் மற்றும் ஆலோசணையின் பேரில், பொழுதுப் போக்காக இருப்பதை ஏன் ஆர்டர்களாக எடுத்து செய்யக் கூடாது என்ற திடமான நம்பிக்கையில்  வரிசையாக வரைந்துத் தள்ள தைரியம் எடுத்தார்.

MCO-வின் ஐந்தாவது வாரம் தொடங்கி, ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு தமது கைவண்ணத்தைக் காட்டியுள்ளார்.

அவை இதோ உங்கள் பார்வைக்காக:

ஒரு மாலை பொழுது

தாயின் மடியில்

என் பிள்ளை(யார்)

ஒளியாக உமைபாலன்

 மரகதப் பாண்டுரங்கன்

 மலைமகன் மாருதி

தெய்வத் திருமகள்

குழலூதும் கண்ணா!

அபிராமி ஆதிசேஷன் அணைப்பில்


கக் கடைசியாக,  இந்தியா, கேரளாவில் வெடி வைக்கப்பட்ட பழத்தைத் தின்று பரிதாபமாக செத்துப் போன கர்ப்பினி யானைக்காக அவர் வரைந்த ஓவியம் வியனின் நெஞ்சைத் தொட்டு விட்டது. நெஞ்சைப் பிழியும் வகையில் அமைந்திட்ட அச்சம்பவத்தை ஒற்றை வரியில் சொன்னது போல் அவரின் கை வண்ணம் அமைந்திருந்தது.


வியத்தில் இவரின் திறமை மெருகேற மெருகேற ஆர்டர்களும் வீடு தேடி வரும் என நம்பலாம். நிச்சயம் வியன் அதில் முதல் ஆளாக இருப்பான் 👌

ம் பிள்ளைகளிடத்தில் ( நம்மிடமும் தான் 😋 ) எத்தனையோ திறமைகள் ஒளிந்துக் கிடக்கின்றன. அவற்றை வெளிக் கொணருவோம். அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் தருவோம்.

MCO காலத்து கைவண்ணம் ;  உங்களுக்குச் சிறந்த எதிர்காலம் திண்ணம் !

ழக்கம் போல வாழ்த்துவதோடு நின்று விடாமல், உங்களின் எதிர்கால வெற்றியை நேரில் பார்க்கவும் #வியன் விரும்புகிறான் !

- முற்றும் 


3 comments:

Kamily Bv said...

Nandri Osama. Inthe mathiri uukkuvipugal ilainyargalukku unthuthalaage irukkindrana. Ninggalum endrendrun nalamodu iruke vendugiren.

Unknown said...

MCO காலக்கட்டம் பலருக்கு சுமையாக இருக்கும் வேளையில், எமக்கு முற்றிலும் என் திறமைகளைக் கண்டறிந்து கொள்ள கிடைக்கப் பெற்ற ஒரு அரிய வாய்ப்பு என்றுதான் நான் கருதுகிறேன். கிடைத்த இந்த அற்புதமான வாய்ப்பை நழுவ விடாமல் மென்மேலும் கலைத்துறைக்கு நான் என்னை அர்பணித்துக் ‌கொள்வேன். எம்மைப் போன்று வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு ஐயாவின் வார்த்தைகளும், பாராட்டுகளும் மேலும் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் ஈட்டி‌ கொடுக்கிறது.‌ கோடான கோடி நன்றிகள் 🙏

இப்படிக்கு, என் கலைக்கு கிடைத்த பாராட்டைக் கண்டு வியந்த‌ வண்ணமே நான், சரண்யா மணிராஜூ ❤️✨

Gowri De Great said...

அருமை சீனியர்...