அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Saturday, 20 June 2020

10 லட்சம் பேர் பாதிப்பு: பிரேசிலில் கொரோனா கோரத் தாண்டவம்!

கால்பந்தாட்ட தேசத்தில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது! 


ன்றையத் தேதிக்கு அந்த தென்னமரிக்க நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.

உலக நாடுகளில் நடமாட்டக் கட்டுப்பாடும், பொது முடக்கமும் மெல்ல தளர்த்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா சீற்றம் தணிகிறது என்றுதானே எல்லாரும் நினைத்தோம்.

ஆனால், பிரேசிலில் பதிவாகி வரும் சம்பவங்களின் எண்ணிக்கை அந்த எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின என்றால் அதிர்ச்சியாக இல்லை?

உள்ளபடியே பயமாகவும் இல்லை?  

அதே சமயம் தொடர்ந்து நான்காவது நாளாக மரண எண்ணிக்கை 1,200 பேரைத் தாண்டியுள்ளது.

இதுவரை மொத்தமாக 49 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு அங்கு பலியாகியிக்கின்றனர்.

போதியப் பரிசோதனைகள் இல்லாததால் வரும் நாட்களில் எவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

எனவே பெருந்தொற்று மெல்ல தணிகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்சயம் அமெரிக்கா மட்டுமே பிரேசிலை விட அதிகச் சம்பவங்களைப் பதிவு செய்திருக்கிறது.

பிரேசிலிய ஏழை மக்களும் பூர்வக் குடிகளும் தான் அதிகளவில் இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 



நகரவாசிகளுக்கு போதிய சுகாதார வசதிகள் இல்லாத நிலையில் பிந்தங்கிய  அவ்விரு தரப்பையும் கண்டு கொள்ளவா போகிறார்கள்?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிபர் Jair Bolsonaro காட்டிய, காட்டி வரும் மெத்தனப் போக்கு அந்நாட்டு மக்களின் கடுமையான குறைக் கூறல்களுக்கு ஆளாகி வருகிறது. 


நோய்ப் பரவலைத் தடுக்க மாநில ஆளுநர்கள் கடும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்திய போதெல்லாம் , அதனை எதிர்ப்பதும், அவர்களுடன் சண்டைப் போடுவதுமாகவே இத்தனை மாதங்களை அவர் கடத்தி விட்டார் என, சுகாதார ஆர்வலர்கள் சாடி வருகின்றனர்.

அவரின் "slow-னா slow-நா, death slow!" அணுகுமுறையால் பொறுமையிழந்த சுகாதார அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி துறந்தது குறிப்பிடத்தக்கது.


அவ்விருவருமே மருத்துவர்கள் என்பது கூடுதல் தகவல்.

பெருந்தொற்றொன்றைக் கட்டுப்படுத்துவதில் ஒரு நாட்டரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நியூ சிலாந்தும் மலேசியாவும் உதாரணம் என்றால்; எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு பிரேசில் ஓர் உதாரணம். 


அரசியல் கருத்து வேறுபாட்டை ஒதுக்கி வைத்துப் பாருங்கள்.

மற்ற நாடுகளை விட நாம் எந்தளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம்.



அரசாங்கம் ( மக்களால் தேர்ந்தெடுக்கப்படாததாகவே இருக்கட்டும்) எந்தளவுக்கு கேந்திரங்களை முடக்கி விட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது!

நாம் கொடுத்து வைத்தவர்கள் தான் !

 #வியன் !

No comments: