அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Wednesday, 3 June 2020

சட்டமன்றத்தைக் கலைத்து விடுவேன் - ஜொகூர் சுல்தான் எச்சரிக்கை!

Covid-19 பெருந்தொற்றால் சற்று ஓய்ந்திருந்த அரசியல் சூறாவளி மீண்டும் வீசத் தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுத் தேர்தல் வழி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், இரகசிய அரசியல் நகர்வுகளால் பிப்ரவரி கடைசியில் கவிழ்ந்து, மார்ச் 1-ஆம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றதும் அரசியல் சித்து விளையாட்டுகள் முடிவுக்கு வந்து விட்டன என்று தான் எல்லாரும் எதிர்பார்த்தார்கள்.
னால், கடந்த ஒரு வாரமாக அது மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் BERSATU  கட்சியின் உட்பூசல் வீதிக்கு வந்து விட்ட நிலையில், மத்திய அரசே வீழும் அளவுக்கு இன்னொரு கட்சித் தாவல் நடைபெறவிருப்பதாக வதந்திகள் கிளம்பியிருக்கின்றன.

பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை மீட்டுக் கொண்டு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்காத்தானுக்கு ஆதரவளிக்கப் போவதாகவும், 22 மாதங்களிலேயே ஆட்சியை இழந்த அக்கூட்டணி வசம் இப்போது 129 MP-கள் இருப்பதாகவும் தான் பேச்சு. 

ந்த நிலையில் தான், பதவிக்கு வந்து இன்னும் 3 மாதம் கூட ஆகாத ஜொகூர் மாநில PN அரசு கவிழலாம் என்று வதந்தி பரவியுள்ளது. கூட்டணித் தாவிய பெர்சாத்து MLA-கள் அம்னோவின் ஆதிக்கத்தால் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் பக்காத்தானுக்கே திரும்பலாம் எனவும் பேச்சு நிலவுகிறது.

கொரோனா வைரசால் ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ள நிலையில் மீண்டும் தேவையற்ற அரசியல் சர்ச்சைகளா என பொது மக்களும் கொதித்து தான் போயிருக்கின்றனர்.

ரி, பூனைக்கு யார் மணி கட்டுவது என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், மேன்மைத் தங்கிய ஜொகூர் சுல்தான் கடும் தொனியில் அதனைக் கச்சிதமாக செய்திருக்கிறார்.   

பெருந்தொற்றால் மக்கள் அல்லல் படும் இந்நேரத்தில் பதவி போராட்டமா? என் மாநில அமைதியை சீர்குலைப்பதா? என அவர் சினமடைந்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டால், உடனடியாக சட்டமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு வழி விடுவேன்  என தனது அதிகாரப்பூர்வ  முகநூல் பக்கத்தில் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


புதிய அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்கள் கையில் கொடுப்பேன் என்றும், கட்சிக்கோ, சொந்த நலன்களுக்கோ பாடுபடுபவர்கள் அல்ல; மாறாக உண்மையிலேயே மக்களுக்கு சேவையாற்ற வருபவர்களையே மக்கள் அப்போது தேர்ந்தெடுப்பார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் சுல்தான் கூறியுள்ளார்.

க்கள்  மனதில் உள்ளதைப் புரிந்து கொண்டவராக சரியான நேரத்தில் சுல்தான் விடுத்துள்ள இவ்வெச்சரிக்கையானது, மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடத்தில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் உரக்க எதிரொலிக்கும்,   என 
#சிந்தித்தவேளை  எதிர்ப்பார்க்கிறது. 


க்கள் கொடுத்தத் தீர்ப்பை சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அடமானம் வைத்து நேரத்திற்கு நேரம் நிறம் மாறும் சில அரசியல்வாதிகளுக்கும் இவ்வெச்சரிக்கை போய் சேரட்டும், அவர்கள் எவ்வளவு பெரிய 'அப்பாடக்கராக' இருந்தாலும்.....

#வியன் #மலேசியா #அரசியல் #கொரோனா #கொரோனாவைரஸ் #Covid19

No comments: