அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Sunday, 28 June 2020

சின்னத்திரையையும் சிறைப்பிடிப்பாரா ஷாமளன் ?


ன்னங்க வியன், சின்னத்திரை, சிறைனு விடுகதை போடுறீங்கனு கேட்குறீங்களா?

கேட்கனும், கேட்டு தான் ஆகோனும்!   

பின்னே,  எங்களூர் பாகுபலி " என் வீட்டுத் தோட்டத்தில்" புகழ் கார்த்திக் ஷாமளன் சின்னத்திரையில் வெள்ளோட்டம் காண்கிறாரே, அதை எப்படிச் சொல்ல?

ஆம், #EVT மூலம் திரையரங்குகளை அதிர வைத்தவர், தற்போது சின்னத்திரையில் கால் பதிக்கிறார்.

அதுவும் சும்மா இல்லீங்கோ, வேற மாதிரி!

நம் உள்ளூர் தொலைக்காட்சிக்கு சற்றே அந்நியமான அமானுஷ்ய சக்தியைக் கதையாக களம் அமைத்து 'கள்வனைக் கண்டுப்பிடி' என  கைப்படத் தந்திருக்கிறார்.

"அட, ஏதோ, பேய் பிசாசோ இருக்குமோ"னு நினைத்து விடாதீர்கள் .

இது கார்த்திக் ஷாமளன்! அவர் வெயிட் தெரியும்ல.....

ஒரு 'தரமான செய்கை' 💥காத்திருக்கிறது என்பதை கண்டிப்பாக குறைந்தபட்ச உத்தரவாதமாக #வியன் கொடுப்பான்.

அவரின் முந்தையப் படங்களை, குறிப்பாக EVT-யை ( 6 முறை தியேட்டரில் பார்த்தவனாக்கும்)  " நான் பார்ப்பது தமிழ்ப்  படம் தானா? என ஆச்சரியத்தில் திரையங்கின் நாற்காலி நுனி சீட்டில் அமர்ந்து வியந்தவன் என்ற முறையில் அந்த உத்தரவாத்தைத் தாராளமாக தருவான் வியன்.

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் கண்டு களிக்கும் விதமாக , ஜூலை 1 முதல்

"கள்வனைக் கண்டுப்பிடி''  நாடி வருகிறது. 



லிங்கேஸ்வரன் மணியம் ( இந்த மனுஷன் காட்டுல, அண்மைய காலமா மழை அடியோ, அடினு அடிச்சு ஊத்துத்துப்பா! திறமைக்கு தீனி போடும் வாய்ப்புகள் வந்து குவிவது, தூரமாக நின்றுப் பார்க்கும் நண்பனுக்கு மகிழ்ச்சியே)  பாஷினி சிவகுமார், மகேஸ் விகடகவி, கே.எஸ்.மணியம் ( Heavyweight Champion ஐயாவும் உண்டு), காந்தீபன் @பென் ஜி, ராஜ் கணேஷ், ரவின் ராவ், சந்திரன், சங்கபாலன், ஆர்.மோகன ராஜ் ( EVT சகோ), கெ.பி.தி(பி.ஏ) ராமசந்தரன், சுபாஷினி அசோகன், ரேன்னி மார்ட்டின், சாய் கோகிலா என சீனியர் - ஜூனியர் கலவையில் நட்சத்திர பட்டாளமே உண்டு.

தையைச் சுருக்கமாகச் சொல்லி ஆவலைத் தூண்டி விட ஆசைதான். ஆனால், பொறவு சுவாரஸ்யம் இல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது அல்லவா? எனவே, முதல் நாள் ஒளிபரப்பு ஆகும் போது, தொலைக்காட்சி முன் குடும்ப சகிதமாக ஆஜராகி விடுங்கள். ஐடியா வந்து விடும் ( ஏன், சித்திக்கு மட்டும் தான் காத்திருப்பீர்களா என்ன? 😁 ) 



திங்கள் முதல் வெள்ளி வரை, ஜூலை 1 முதல் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் HD-யில் (231), Astro Go On Demand -டில் ' கள்வனைக் கண்டுபிடி' தொடரை கண்டு மகிழுங்கள். மேல் விவரங்களுக்கு, ஆஸ்ட்ரோவின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை வலம் வாருங்கள். 

ண்மைய காலமாக அதுவும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, #MCO காலத்தில், சமூக வலைத்தலப் பயனர்களே பாராட்டும் வண்ணம் உள்ளூர் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து  ஒளியேறி வருகின்றன. ரசிகர்களின் மனம் கவர்ந்த உள்ளூர் திரைப்படங்கள் ஒரு பக்கம் தனி ஆவர்த்தனம் செய்ய, ஆய்வு நிகழ்ச்சிகள், உள்ளுர் தொடர் நாடகங்கள் என மற்றொரு பக்கம் பட்டையைக் கிளப்பிக்  கொண்டிருக்கின்றன.

ன்னவாக இருக்கும் என்று பார்த்தால், " இதென்ன பிரமாதம்? இனி அடுத்தடுத்து இன்னும் பல புத்தம் புதிய உள்ளூர் நிகழ்ச்சிகள் வரிசைப் பிடித்து வீடு தேடி வரும்" என wanted-டாக வந்து நின்றார் அந்த மனிதர். அட நம்ம பையன் - குப்பு என்கிற குப்புசாமி சந்திரகாஸ். விண்மீன் அலைவரிசை உள்ளடக்கத் தலைவராக உன்னை ( நான் உரிமையோடு கூப்பிடுவேன்) பார்க்கும் போது, உள்ளத்தில் பூரிப்புடா!  

ந்த அதிரடி மாற்றங்கள் வரவேற்கத்தக்க வகையில் உள்ளன. வியன் அடிக்கடி சொல்வது போல 'தரமானதைக் கொடுத்தால், தைரியமாக தம்ஸ் ஆப் தருவான் தங்கமான ரசிகன்.'

சரியாக 9 மணிக்கு "கள்வனைக் கண்டுப்பிடி',
வீட்டில் channel-லை மாற்றினால் உருண்டு விழுந்தாவது முரண்டுப் பிடி !

இப்புதியத் தொடக்கம் அடக்கமாக இல்லாமல் அட்டகாசமாக ஆளட்டும், பார்ப்போர் மனதை வெல்லட்டும் எனக் கூறி " விஷான் மீது இனி கவனத்தைத் திருப்புகிறான்  #வியன்!  

1 comment:

Unknown said...

வாழ்த்துகள் கார்த்திக் ஷாமளன்....!