2 முறை பதவியில் இருந்தது போதும்!
மூன்றாவது முறை என்ற பேச்சுக்கே இடமில்லை என மகாதீருக்கு எதிரான தனது திட்டவட்ட நிலைப்பாட்டை அன்வார் மறு உறுதிபடுத்தியுள்ளார்.
மலேசியாவுக்கும் மலேசியர்களுக்கும் ஒரு புதியத் தொடக்கம் தேவை!
[Ahmad Yusni/EPA] |
Channel News Asia நெறியாளர் Melissa Goh-வுடனான சிறப்பு நேர்காணலில் அன்வார் அதனைத் தெரிவித்தார்.
ஒருவேளை நீங்கள் பிரதமரானால், மகாதீருடன் ஒத்துழைக்கத் தயார என கேட்கப் பட்டதற்கு, தாம் தயார் என அன்வார் சொன்னார்.
மறைந்த சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் Lee Kuan Yew, பிரதமர் பதவியில் இருந்து விலகியதும், அவருக்கு அடுத்து வந்தவரின் அரசாங்கத்தில் முதலில் மூத்த அமைச்சராகவும் பின்னர் மதியுரை அமைச்சராகவும் அப்பெருந்தலைவர் நியமிக்கப்பட்டதைப் போன்று, மகாதீருக்கு புதிய role கொடுக்கப்படலாம் என அன்வார் கோடி காட்டினார்.
ஆனால், இதெல்லாம் பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் அரசைக் கவிழ்த்து, போதிய பெரும்பான்மையுடன் தமது தலைமையில் ஆட்சி அமைந்தால் மட்டுமே சாத்தியம் என்பது அன்வாருக்குப் புரியாமல் இல்லை.
என்றாலும், முகிதின் ஆட்சியை அகற்றும் முன்னரே, நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் விடப்படும் சாத்தியத்தை அன்வாரும் மறுக்கவில்லை.
நன்றிங்க 'மக்கள் தலைவரே'!
நீங்கள் சொன்னதால், நானும் சொல்லி வைக்கிறேன்... கோபித்துக் கொள்ளாதீர்கள்! ( உயிர் தொண்டர்கள் கோபித்துக் கொள்வார்களே)
ஆண்டு இறுதியிலேயே நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் வந்தாலோ, அல்லது 3 ஆண்டுகள் கழித்து வந்தாலோ, அதற்கு முன்னதாக புதியதோர் அரசு அமைய வாய்ப்பே இல்லை!
ஏற்கனவே ஓர் அரசு கவிழ்ந்து வரலாறு காணாத அரசியல் நெருக்கடியை மலேசியர்கள் சந்தித்து விட்டார்கள்.
கொரோனா பெருந்தொற்றை கூட நாங்கள் 'தில்'லாக எதிர்கொள்வோம் போலிருக்கிறது ; ஆனால் எங்கள் நாட்டு அரசியல்வாதிகளைச் சமாளிப்பது இருக்கிறதே... அப்பப்பா......!
ஆட்சியைக் கவிழ்க்க பெரியவராலும் முடியாது; உங்களிடமும் போதிய இடம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒருவேளை அப்படியே இருந்து தொலைத்தாலும், வாருங்கள், வந்து ஆட்சி அமையுங்கள் என்று பன்னீர் தெளித்து இப்போதைக்கு உங்களை வரவேற்க 'அங்கு' ஆளில்லை. ( அது உங்களுக்கே தெரியும் அன்வார் )
நான் என்ன சொல்கிறேன் என்றால்....
ஆட்சி போனது போனது தான்! அடுத்து இன்னொரு தேர்தலைச் சந்திக்காமல் புதிய அரசு அமையாது.
கட்சித் தாவல் தடைச் சட்டம் என்று ஒன்று இயற்றப்படாத வரை, எந்தப் பக்கத்தையும் எங்களால் நம்ப முடியாது.
யார் எங்கு தாவுவார்கள் என்று கணிக்க முடியாது.
தேர்தல் வரை எதிர்கட்சித் தலைவராக நீடிக்கும் வழியைப் பாருங்கள்.
மதியுரை 'சதியுரை' அமைச்சர் பதவியெல்லாம் அப்புறம் இருக்கட்டும்....
#வியன் வியக்கிறான்!
No comments:
Post a Comment