அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Tuesday, 16 June 2020

மகாதீர்- அன்வார் இணை முடிவானதாமே?

டந்த வாரம் " என்னதான் நடக்கிறது பக்காத்தானில்? என்ற தலைப்பில் கட்டுரை போட்டிருந்தேன்.
என்னதான் நடந்தது, நடந்து முடிந்திருக்கிறது என்பதை தற்போது Free Malaysia Today நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது. 
அதாவது முடிந்த வாரத்தில் பக்காத்தான் தலைவர்கள் தங்கும் விடுதியொன்றில் சந்திப்பு நடத்தி, அந்தப் படம் கூட வெளியாகியிருந்தது அல்லவா...? அதில் எடுக்கப்பட்ட முடிவு என்ன என்பது அரசல் புரசலாக வெளியாகியுள்ளது.
வாரக் கணக்கில் நீடித்த இழுபறிக்குப் பிறகு மகாதீரையே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

துணைப் பிரதமராக இம்முறை அன்வாரை நிறுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாம்.  
ஆனால், கடந்த சில வாரங்களாக பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் கூறி வந்தது போல், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற நாடாளுமன்றத்தில் அவர்களுக்குப் போதிய இடங்கள் இருப்பது இன்னமும் கேள்விக் குறியாகவே இருப்பதாக, அவ்வட்டாரங்கள் FMT-யிடம் கூறியுள்ளன.
கடந்த வாரம் PKR  கட்சித் தலைமையகத்தில் அவ்விரு பெருந்தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் சந்தித்துப் பேசியப் பிறகு குறைந்தது 2 தடவை KL-லில் தங்கும்  விடுதிகளில் கூட்டணித் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு நடந்ததாம்.
ஒரு வார காலத்தில் பிரதமர் வேட்பாளர் யாரென்பது அறிவிக்கப்படலாம் என்பதற்கு முன்னோட்டமாகவே அச்சந்திப்புகள் நடைபெற்றதாக அறியப்படுகிறது.
புத்ராஜெயாவிலும் சில மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தப் பிறகு எப்படியாவது மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திட வேண்டும் என பக்காத்தான் படாத பாடு படுகிறது. 
அம்முயற்சிக்கு, போதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ( 222 பேரில் குறைந்தபட்சம் 112 MP-கள் வேண்டும்) தங்கள் வசம் இருப்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பக்காத்தானுக்கு உண்டு. 
அதுவே பெரும் சவால் என்ற நிலையில், மேலும் தலைவலியாக இங்கிருந்து MP-களும் சட்டமன்ற உறுப்பினர்களுமாக எதிர் முகாமுக்கு தாவி வருகின்றனர். 
ஆனால் அந்த அண்மையச் சந்திப்புகளில் சர்ச்சைகளும் வெடிக்காமல் இல்லை. 
மீண்டும் மகாதீரா என அன்வாரின் உயிர் தொண்டர்கள் கொதிக்காமல் இல்லை. அதற்கான காரணமும் புரிந்துக் கொள்ளக் கூடியதே!
ஆம், 22 மாத பக்காத்தான் ஆட்சிக் காலத்தில் அன்வாரிடம் பதவியை ஓப்படைப்பதை இழுத்தடித்து, வாக்குறுதிகளை மகாதீர் காற்றில் பறக்க விட்டதை அவர்களால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.
அதற்கு பதிலடியாக வேறு சில பரிந்துரைகளும்  முன்வைக்கப்பட்டனவாம். 
அதாகப்பட்டது, அன்வார் பிரதமராகவும், மகாதீரின் மகன் முக்ரிஸ் துணைப் பிரதமராகவும் முன்மொழியப்படுவது என்பதாகும்.
அப்பரிந்துரை மகாதீர் தரப்பில் பெரும் இழுக்காகப் பார்க்கப்பட்டதாம். மகாதீரின் கணக்கில் தனது மகனின் அரசியல் எதிர்காலம் குறித்து பேரம் இதுவரை வந்ததே இல்லையாம். 
ஆக, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மகாதீரை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். 
ஆனால், வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் மகாதீர் இம்முறை கைப்பட உடன்பாட்டில்  கையெழுத்திட வேண்டுமாம். ( வாக்குறுதி காற்றில் பறந்து போன கதையெல்லாம் வந்து வந்து போகுமல்லவா?) 😊
ஒரு வேளை தங்கள் கைக்கு மீண்டும் 'ஆட்சி மாறினால்' இவ்வாண்டு இறுதி வரை மகாதீர் பிரதமர் பதவியில் இருப்பார் என்றும், அதன் பிறகு அன்வாரிடம் அவர் அதனை ஒப்படைப்பார் என்றும் பத்திரத்தில் எழுதப்பட்டிருக்குமாம். 
ஆனால் இந்த அரசல் புரசல் செய்திகள் குறித்து FMT கேட்ட போது PH முக்கியப் புள்ளி ஒருவர் கருத்துரைக்க மறுத்து விட்டாராம். " பின்னர் அறிவிக்கப்பட்டும்" என சிம்பிளாக முடித்துக் கொண்டாராம்.
மகாதீரே பிரதமர் வேட்பாளர் என்பதை DAP சற்று எச்சரிக்கையுடனே ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. DAP-யை பொருத்தவரை, மகாதீருக்கோ அல்லது அன்வாருக்கோ ஆட்சி அமைக்கப்பட தேவைப்படும் இடங்கள் இருக்கின்றன என்பதில் இன்னமும் நம்பிக்கை இல்லையாம்.  
ஆனால்...ஆனால், பக்காத்தானின் 'முகமாக' மகாதீர் இருக்கும் பட்சத்தில் அது சாத்தியம் என்பதை அக்கூட்டணி தலைவர்கள் நம்புகிறார்களாம். 
தற்போது PKR, DAP, AMANAH ஆகிய 3 கட்சிகளை உட்படுத்திய பக்காத்தானுக்கு மகாதீர் தரப்பு BERSATU கட்சியின் 5 MP-கள் ஆதரவு உண்டு. அது போக, சபா, WARISAN கட்சியும் நட்புக் கட்சியாக இருக்கிறது.  
ஆனால் இவர்கள் எல்லாம் மனது வைத்தால் மட்டுமே ஆட்சியெல்லாம்  மாறி விடாது. அது அவர்களுக்கே தெரியாமல் இல்லை. என்றாலும் முயற்சி செய்துப் பார்க்கிறார்கள்.
#வியன் பார்வையில், ஆட்சியமைக்க முயற்சிப்பதில் தவறேதும் இல்லை, ஜனநாயகத்தில் அது அனுமதிக்கப்பட்ட ஒன்றே! ஆனால்  அரசியலுக்கு அடிப்படையே 'நம்பர் விளையாட்டு' தான். 112 MP-கள் இல்லாத வரை புத்ராஜெயாவை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.  
அதுவும், பிரதமர் முகிதின் யாசின் அரசாங்கம் , குறிப்பாக முகிதின் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வரும் வேளையில், ஆட்சி மாற்றம் என்பது பகீரதப் பிரயத்தனம். 
அதில் வெற்றிப் பெற மீண்டும் மகாதீர்-அன்வார் இணையே சரியான தேர்வு என பக்காத்தான் முடிவெடுத்தால், மக்கள் அதனை எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்பதும் இங்கு முக்கியம்.
அதுவரை, வழக்கம் போல #வியன் வாழ்த்தி விடைபெறுகிறது, ஆனால் இம்முறை கொஞ்சம் எச்சரிக்கையுடன்....

No comments: