படுபாவிங்க கண்ணுலயா
படனும்?
தின்னுமானு, அன்னமா
அன்னாசியை தந்தான் எவனோ,
அது திண்ணமா நம்புனது,
யார் பெத்த மவனோ?
ஆசையா வாயில வெச்சது,
அடுத்த கணமே வெடிச்சது!
மரண வலியை சொல்ல
வாய் இல்லை, இருந்தாலும் பங்கஜம் வருங்கால தாயில்ல..!
அதான் நம்புனவன மட்டுமல்ல,
அந்த வழியா தும்புனவன கூட விட்டுருச்சு,
வலி போக வழி தேடி
போன பங்கஜம், ஆத்துலயே நின்னுடுச்சு!
கும்கி வந்தும்
பயனில்ல, காரணம் தோழியிடம் உயிரில்ல!
வெளிய தூக்குன
வனத்துறைக்கு மனசுல கணம்,
வயித்துக்குள்ள வாண்டு இருக்கக் கண்டு, கூடவே சினம்!
என்ன பாவம் செஞ்சதந்த
குட்டி, இன்னிக்கு அழுவுதே பட்டித் தொட்டி!
இத்தன நாளா கெத்தா
நின்ன நானே அழுவுறேன்,
படுபாவிங்களுக்காக
மேலே வந்து உன் காலை கழுவுறேன்!
வெடி வெச்சவன்,
வாயில வெடிச்சிரிப்பு,
அவனை வருத்த நெனக்காத
உன் மனசு, எனக்கு மெய்சிலிர்ப்பு!
வலியில சொல்ல முடியாம
தேம்புன...
பங்கஜம், எங்கள
போயா நீ நம்புன ?
சொல்லு பங்கஜம்,
எங்கள போயா நீ நம்புன ?
#சிந்தித்தவேளை
#வியன் #மனிதம் #கேரளா #யானை #மிருகவதை
1 comment:
மனிதன் எத்தனை கொடூரமானவன்..!!!
Post a Comment