அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Sunday, 21 June 2020

"யாரென்று தெரிகிறதா... இவள் தீ என்று புரிகிறதா!"

ன்று கேட்கும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாமல் 
அழகுச் சிலையாகக் காட்சியளிப்பவர் வேறு யாருமல்ல, நம் வலையொளி பிரபலம் பவித்ரா தான் (அட நம்ம சுகு பவித்ராங்க) 

படம்: Instagram Razzi Musa 

டைநிலை மலேசியர் தொடங்கி நாட்டு 
பிரதமரே பார்த்து வியந்து பாராட்டிய இந்த இளம் தம்பதியர் You Tube-பில்  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக 'மெருகேறி' வருவதுடன் நம்மையெல்லாம் வியக்க வைக்கின்றனர்.

கோழி வறுவல் முதல் #RendangAyam வரை தினமும் YouTube-பில் தனது எளிமையான சுவையான  சமையலுடன், வளமான மலாய் மொழியில் வலம் வரும் பவித்ரா, இன்று காலை முதல் மீண்டும் சமூக வலைத்தளங்களை வலம் வருகின்றார்.

ம்முறை சமையலால் அல்ல, தான் பங்கேற்ற #Photoshoot படங்கள் வெளியானதால்...

பேராக், சுங்கை சிப்புட்டில் உள்ள அவரது புதிய வீட்டில் இந்த Photoshoot நடந்துள்ளது. அதனை நடத்தியது Pinography; ஓளிப்பதிவாளர் Nabil Hussin என தெரிகிறது.

பிரபல முக ஒப்பனைக் கலைஞர் Razzi  Musa ஒப்பனையில் பவித்ரா ஜொலிக்கிறார்.  Styling செய்தது  Zulherizal Studio .

வர் அணிந்திருந்த உடைகளுக்குச் சொந்தக்காரர் - ஆடை வடிவமைப்பில் அனைத்துலக அளவில் 'நாட்டின் பெருமை' என வர்ணிக்கப்படும் நமது டத்தோ Bernard Chandran அவர்கள். பிறகு சொல்லவா வேண்டும். 😍

ந்த வெளித்தோற்றத்தால் மட்டுமல்ல ஏறகனவே தனது எளிமையாலும், உள்ளத்தாலும், விடாமுயற்சியாலும் மலேசியர்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்ட இந்த அழகுதேவதையின் photoshoot  படங்கள் எப்போது அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள், வியனும் தான் ! 😗 


YouTube-பில் சமையல் சாம்ராஜ்யம் செய்து வருபவர் இனி பல சஞ்சிகைகளின்  அட்டைப் படங்களை அலங்கரிக்கவிருக்கிறார். 

                         

ண்மையில் தான் பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் சுகு பவி தம்பதியுடன் வீடியோ காணொளி வழி உரையாடினார்.

தன் போது அவர்களின் சமையல் ஆர்வத்தையும், எளிமையையும் விடாமுயற்சியையும் பாராட்டிய பிரதமர், தமக்கு எப்போது ஆட்டிறைச்சி பிரியாணியை செய்து தரப் போகிறீர்கள் என்றும் கேட்டு ஆச்சரியப்படுத்தினார். 

முகிதினின் நேரடி உத்தரவின் பேரில் ஏற்கனவே அவர்களுக்கு சமையல் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பிரதமர் துறை அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கலாம். 

கொரோனா சீற்றம் தணிந்து, பிரதமரே சுகு பவி வீட்டுக்குக் நேரடி விஜயம் செய்தாலும் சரி, அல்லது பிரதமரின் வீட்டுக்கு அவர்கள சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டாலும் சரி, பவித்ராவின் ஆட்டிறைச்சி பிரியாணியையும், கோழி வறுவலையும் பிரதமர் ஒரு 'வெட்டு வெட்டுவது' நிச்சயம்.


து உண்மையிலேயே சுகு பவித்ரா ஆண்டு தான் போங்க! 

#வியன் வியக்கிறான் ! 


#SuguPavi #SuguPavithra #SungaiSiput #சுகுபவி #சுகுபவித்ரா #பவித்ரா #Viral

No comments: