அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Wednesday, 24 June 2020

முகக்கவசமா? சிறைவாசமா? : பிரேசில் அதிபருக்கு நீதிமன்றம் கொட்டு!


பிரேசிலிய அதிபர் #JairBolsonaro -வை தேடி சர்ச்சைகள் வருகின்றனவா அல்லது அவற்றை இவரே தேடிப் போகிறாரா என யோசிக்க வைக்கிறது.

இந்த கொரோனா பெருந்தொன்று காலத்தில் அந்தக் கால்பந்து தேசத்தின் அதிபர் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

பல சமயம் 'தவளை தன் வாயாலே கெடும்' என்பதற்கொப்ப எதையாவது பேசி மாட்டிக் கொள்கிறார். 

'ஆடே வந்து பிரியாணி ஆவுறேங்'குற கதையாக எதிர்கட்சிகள் தன்னை வறுத்து எடுக்க இவரே point-டுகளை எடுத்து தருகிறார்.

அந்த அளவுக்கு பேர் 'போன ' அதிபராக வலம் வரும் இவருக்கு, கொரோனா பரவலைத் தடுக்க வக்கில்லை, வாய் மட்டும் மீட்டர் கணக்காய் நீளுகிறதே என்ற அவப்பெயரும் தொற்றிக் கொண்டு விட்டது.

இவரின் தொல்லைத் தாங்காமல் 'ஆளை விடுங்கப்பா சாமி' என மருத்துவர்களான சுகாதார அமைச்சர்கள் இருவர் அடுத்தடுத்து ராஜினாமா செய்து போய் விட்டனர்.

சுகாதார அதிகாரிகளின் பேச்சை இவர் கேட்பதே இல்லை; கொரொனாவுக்கு எதிரான போராட்டம் வாழ்வா சாவா என போய்க் கொண்டிருந்தால், சம்பந்தமே இல்லாமல், லீக் கால்பந்தாட்டங்களைத் தொடர வேண்டும் எனக் கூறி செமத்தையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இப்படி எல்லாரிடமும் அசிங்கப்பட்டும் Bolsonaro அடங்கவில்லை.

இப்போது நீதிமன்றமே கொட்டு விட்டிருக்கிறது.

"நீங்கள் இந்த நாட்டுக்கு அதிபராக இருந்து விட்டுப் போங்கள். அதைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் பொது வெளியில் செல்லும் போது, சுவாசக் கவசத்தை அணிந்துச் செல்லுங்கள்! நீங்களோ நானோ, சட்டத்தை மிஞ்சி இங்கு எவரும் இல்லை ! அதிபராக இருந்து கொண்டு, நோய் பரவ நீங்களே காரணமாக இருந்து விடாதீர்கள் "

"Mask போடாம இன்னொரு தடவை மட்டும் இந்த ஏரியாவுல உன்னை நான் பார்த்தேனு வெச்சுக்கோயேன், அவ்ளோதான் முடிஞ்ச!" என வடிவேலு பாணியில் Bolsonaro-வுக்கு நீதிபதி கொட்டு விட்டார்; தினசரி 2 ஆயிரம் reais அல்லது 310 பவுண்ட் தண்டம் கட்ட வேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளார்.
தலைநகர் பிராசிலியாவில் எதிர்ப்பு போராட்டங்கள், கடை வீதிகள், ஏன்.. மிதக்கும் barbecue அங்காடிகளில் , சுவாசக் கவசத்தை அணியாமலும், அப்படியே அணிந்தாலும், சரியான முறையில் அது இருப்பதை உறுதிச் செய்யாமலும் விமர்சனங்களுக்கு ஆளானார்.

மீடியாக்கள் கிழித்துத் தொங்க விட்டும் மனிதர் திருந்தவில்லை.

பிரேசிலில் கொரோனா மரண எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. 

#வியன் நல்ல கூத்துக்கார ஆளயா நீர்!

No comments: