பூசி மொழுகாமல் அப்படி ஒரே போடாய் போட்டிருக்கிறார், நமது ஆள்பலத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ M. Saravanan
No Means No ! அனைத்துத் தொழில் துறைகளிலும் ஆண்டு இறுதி வரை புதிதாக அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பு எதுவும் கிடையாது.
உள்நாட்டினருக்கே அதில் முன்னுரிமை வழங்கப்படும் என நச்சென சொல்லி விட்டார்.
வெளிநாட்டவர்கள் சுற்றுப் பயணிகளாக வேண்டுமானால் வந்து விட்டு போகலாம் என ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான அவர் சொன்னார்.
நாட்டில் இப்போது தோராயமாக 20 லட்சம் பதிவுப் பெற்ற அந்நியத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்ற தகவலையும் வெளியிட்டார்.
எனவே, வேலைச் சந்தையில் வெளிநாட்டினரையே நம்பியிருக்கும் கலாச்சாரத்தை அரசு கலைய விரும்புகிறது.
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல, மலேசியர்களுக்கு வேலை கிடைத்தது போலவும் ஆகும் என்றார் அவர்.
அந்நடவடிக்கையானது உள்ளூர் மக்களுக்கு நன்மையைக் கொண்டு வருகிறதா என்பது ஆண்டு இறுதியில் தெரிய வரும்.
அதன் போது விதிமுறை மதிப்பீடு செய்யப்பட்டு அடுத்தக் கட்டம் என்ன என்பது முடிவாகும்.
வேலைத் தேடுவோர், குறிப்பாக நடப்புச் சூழலில் தாங்கள் விரும்பிய வேலைக்கே போவோம் என அடம் பிடிப்பது விவேகம் அல்ல எனவும் சரவணவன் ஆலோசணைக் கூறினார்.
உங்கள் தகுதிக்கு நீங்கள் விரும்பிய வேலைகள் உடனே கிடைத்து விடும் என சொல்லி விட முடியாது. #Choosy-யாக இருப்பதை தற்சமயத்திற்காவது கை விடுங்கள் என்றார் அவர்.
அமைச்சர் சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்!
இந்த #MCO காலக் கட்டத்தில் எத்தனைப் பேர் வேலை இழந்திருக்கிறார்கள்? இப்போது போய், "நீ போ, நீ வா!" என வேலைகளை ஒதுக்கிக் கொண்டிருப்பது உத்தமம் அல்ல.
ஏதோ #வியன் சொல்கிறான்!
#MCO #RMCO #PKP #PKPB #Covid19 #Corona
No comments:
Post a Comment