அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Monday, 8 June 2020

8-வது பிரதமரின் வித்தியாசமான முதல் 100 நாட்கள் !


ரலாறு காணாத அரசியல் நெருக்கடிக்குப் பிறகு மார்ச் முதல் தேதி மலேசியாவின் எட்டாவது பிரதமர் ஆனவர் தான் ஸ்ரீ முகிதின் யாசின். பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருப்பதாக தாம் நம்புவதாகக் கூறி அதற்கு முதல் நாள் தான் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அவரைப் பிரதமராக நியமித்தார். ஆனால், முகிதினின் நியமனமும் பதவியேற்பும் அவ்வளவு எளிதாக அமைந்திடவில்லை. காரணம் வேறொன்றும் இல்லை. 'துரோகி' என்ற முத்திரை தான்! ஏன்? 


ம், மலேசிய வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெறும் வகையில் அமைந்த 2018 பொதுத் தேர்தலில் அப்போதைய எதிர்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தில் போட்டியிட்டு, அரசியல் சுனாமியால் வெற்றிப் பெற்றவர் முகிதின். முன்னாள் துணைப் பிரதமர் என்ற வகையிலும் அரசியலிலும் அரசாங்கத்திலும் பழுத்த அனுபவம் பெற்றவர் என்ற முறையிலும் பிரதமர் துணைப் பிரதமர் பதவிகளுக்கு அடுத்து மூன்றாவது சக்தி வாய்ந்த பதவியான உள்துறை அமைச்சர் ஆனவர்.

க்காத்தான் கட்சிகளிடையே காணப்பட்ட இணக்கத்தின் படி தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எட்டாவது பிரதமராக பதவியேற்கும் போது, துணைப் பிரதமராக முகிதின் பதவியேற்பார் என்பதும் உறுதியாக நம்பப்பட்டது. அந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தார்.

னால், இவையெல்லாம் பிப்ரவரி மத்தி வரை தான். அதன் பிறகு அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களால் ஆளுங்கட்சி மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாடே ஆடி தான் போனது.

Sheraton நகர்வின் மூலம் எதிர்கட்சிகளுடன் கைக்கோர்த்து அரசியல் வட்டாரங்களில் ஒரு நில அதிர்வையே ஏற்படுத்தி விட்டார் முகிதின். அதுவரை மகாதீர், அன்வார், வான் அசிசா ஆகியோருக்கு அடுத்த நிலையிலேயே வலம் வந்த முகிதின் பிப்ரவரி 21-ஆம் தேதிக்குப் பிறகு முன் வரிசைக்கு வர, நண்பர்களே ஆச்சரியப்பட்டு விட்டனர். 


ளுங்கட்சி கூட்டணியில் இருந்து விலகல், மக்களால் தோற்கடிக்கப்பட்ட முந்தைய ஆளுங்கட்சிகளுடன் கைக்கோர்ப்பு என சர்ச்சைக்கு மேல் சர்ச்சை. கடைசியில் அவரே எதிர்பாராமல் எட்டாவது பிரதமராகி விட்டார். ஆட்சிக் கவிழ முகிதின் மற்றும் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலியே காரணம் எனக் கூறி பக்காத்தான் ஆதரவாளர்களும், மக்களில் ஒரு சாராரும் அவ்விருவரையும் துரோகிகளாகச் சித்தரித்து வில்லன் நிலைக்கு கொண்டு போய் விட்டனர்.

முகிதினுக்கு எதிராக #NotMYPM என்ற hashtag-களையும் உருவாக்கி trending செய்தனர், இன்றும் செய்து வருகின்றனர்.

ப்படி, முந்தைய 7 பிரதமர்களும் சந்திக்காத ஒரு இக்கட்டான சூழ்நிலையில், முகிதின் எட்டாவது பிரதமராகி இன்றோடு 100 நாட்கள் நிறைவடைந்தும் விட்டன. இந்த 100 நாட்களும் அவருக்கு எப்படி போயின? 


முகிதின் பிரதமரான சமயத்தில் தான் கொரோனா வைரஸ் கிருமியின் சீற்றம் நாட்டில் வேகமெடுத்தது. அவரின் முழு கவனமும் அதன் பக்கமே திரும்பியது. ஏற்கனவே துணைப் பிரதமராக இருந்து எல்லா அமைச்சுகளின் செயல்பாடுகளையும் நேரடியாக கவனித்த அனுபவம் இருப்பதால், அவர் இம்முறை அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. 
   
சுகாதார அதிகாரிகளுடன் அடுத்தடுத்தச் சந்திப்புகள் தொடங்கி உத்தரவுகளும் பறந்தன. எல்லாரும் சுழன்று வேலை செய்யத் தொடங்கினர். அரசியல் நெருக்கடி லேசாக மறைந்து அனைவரின் கவனமும் கொரோனா மீது திரும்பியது.

ந்த நிலையில் தான் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, MCO என்ற மலேசியர்கள் சந்தித்திராத, கேட்டிராத ஒன்றை தைரியமுடன் அறிமுகப்படுத்தினார். மக்கள் முனுமுனுத்தாலும் , கொரோனா தொற்று சங்கிலியை அறுக்க அது அவசியமென்பதை தொலைக்காட்சியில் தோன்றி புரிய வைத்தார். 



" நீங்கள் விரும்பிய பிரதமராக நான் வரவில்லை. எந்த பிரதமரும் சந்திக்காத வகையில், அரசியல் பொருளாதாரம் சுகாதாரம் ஆகிய 3 நெருக்கடிகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். என் அரசாங்கம் மக்களாகிய நீங்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கம் அல்ல தான்! ஆனால், இது மக்களுக்கான அரசாங்கம், மக்கள் நலன் காக்கும் அரசாங்கம். எல்லா இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் அரசாங்கம். எனவே, நாட்டை வரலாறு காணாத நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியை என் அரசு தீவிரப்படுத்தும்"  

கொரோனா வைரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய பரிவுமிக்க உதவி திட்டத்தை அறிவித்து உரையாற்றிய போது முகிதின் கூறிய வார்த்தைகள் தான் அவை.

ந்த ஓர் உரை தான்.... அவர் மீதான மக்களின் கண்ணோட்டத்தின் மீது மாற்றத்தை உருவாக்கியது என்று சொன்னால் மிகையில்லை. அதுவரை அவரை துரோகி என வர்ணித்தவர்களில் பலர் அன்றே சமூக வலைத்தலங்களில் அவரைப் புகழத் தொடங்கினர். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்து நாட்டு மக்களுக்கு அவர் உரரையாற்ற வரும் போதெல்லாம், பொறுமையாகக்  காத்திருந்து அவரின் முழு உரையையும் கேட்கும் அளவுக்குக் மாறிப் போயினர். 

வரின் பேச்சுகள், ஒரு தந்தையை போலிருக்கிறது என பலரும் கூற ஆரம்பித்தனர். அவரை 'Abah' என அழைக்கவும் தொடங்கி விட்டனர்.  

க்களுக்கு பணத்தை வாரி இறைத்து விட்டார், அதனால் தான் இந்த மனமாற்றம் என 'அம்புகள்' பாயாமலும் இல்லை ; மக்கள் அல்லல் படும் நேரத்தில் ஒரு பிரதமர் என்ன செய்ய வேண்டுமோ அதைத் தான் செய்திருக்கிறார் என பதில் வாதமும் வராமல் இல்லை.

தற்கிடையில் சற்று ஓய்ந்திருந்த அரசியல் சர்ச்சைகள் மீண்டும் வெடிக்கத் தொடங்கின. முகிதினை விரட்டியே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்ட மகாதீர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரை சென்று விட்டார். ஆனால், அது விவாதத்திற்குத் தான் வரவில்லை. 

கொரோனா வைரஸை காரணம் காட்டி, என்றும் இல்லாத அளவுக்கு நாடாளுமன்றக் கூட்டத் தொடர், ஒரு நாள் கூட்டமாக மாறிப் போனதே அதற்குக்  காரணம். என்ன தான் காரணம் கூறினாலும், 2 வாரங்கள் கூட கூடாத மக்களவைக் கூட்டத்தை எதிர்கட்சிகள் சாடாமல் இல்லை. மக்களில் சிலரும் விமர்ச்சிக்க தான் செய்தன, செய்கின்றனர்.

தே சமயம் சொந்த கட்சியில் உட்பூசல். அதுவும் மகாதீர் என்ற பெருந்தலைவருடன் நேரடி மோதல். இணை நிறுவனரான மகாதீரின் கட்சி உறுப்பினர் பதவி போகும் அளவுக்கு அது போய் விட்டது.

ப்படி, எந்த பிரதமரும் சந்திக்காத வித்தியாசமான முதல் 100 நாட்களைத் தான் முகிதின் சந்தித்திருக்கிறார். உங்களுக்கு அவரைப் பிடிக்கிறதோ இல்லையோ, கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டை மிகச் சரியாக வழி நடத்தி வந்திருக்கின்றார் என்ற கருத்து நிலவுகிறது. நடுநிலையாளர்களின் கருத்தும் பொதுவில் அவ்வாறே இருக்கிறது. 


#சிந்தித்தவேளை -யின் கருத்தும் அதுவாகவே இருக்கின்றது. ஆனால், முந்தைய ஆட்சிக் கவிழ்வதில் அவராற்றிய பங்கும், தேர்தலில் மக்களால் வீழ்த்தப்பட்ட கட்சிகளுடனேயே மீண்டும் கூட்டு வைத்து அரசாங்கத்தை அமைத்த விதமும் தான், அவரின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் என்ற வகையில் இன்னமும் மனதில் இரணம் ஆறவில்லை. நடந்தவற்றை இன்னமும் ஏற்க மனம் மறுக்கிறது. போகட்டும்!

100 நாட்களை 'வெற்றிகரமாக' கடந்த பிரதமருக்கு ஜூலை மாத நாடாளுமன்ற அமர்வின் போது பெரிய சவால் காத்திருக்கிறது. அதில் அவர் தலைத் தப்புமா இல்லையா என்பதை பொறுத்தே அவரின் அரசியல் எதிர்காலம் அமையும்.

அதுவரை 100 நாட்களைக் கடந்தவருக்கு #வியன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.    
   

1 comment:

DC RajKumar said...

மிக சுருக்கமான தெளிவான தகவல்... என் கண்ணோட்டத்தில் முகிதின் இந்த அசாதாரண சூழலை சமாளிக்க வந்தவர்போல் இருக்கின்றது...