![]() |
Qurantine Cook-குகள் |
முந்தையப் பதிவில் Quarantine Cook-குகள் சிலரை நாம் சந்தித்தோம் அல்லவா? அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது மகிழ்ச்சி. அவர்களுக்கும் அதன் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்ததாக அழைத்துச் சொன்னார்கள். அந்த வரிசையில் இந்த முறையும் சிலரை நாம் பார்க்கவிருக்கிறோம்.
" வணக்கம், வணக்கம், வணக்கம் ரசிகர்களே... அடுத்த 3 மணி நேரங்களுக்கு உங்களை மகிழ்விக்க இதோ Shalu வந்து விட்டேன்!"
இப்படி வாரம் தோறும் சனி- ஞாயிறுகளில் ராகாவில் உங்களை மகிழ்விக்கும் குரலுக்குச் சொந்தக்காரர், கடந்த 3 மாதங்களாக தனது சமையல் கலை மூலம் முகநூலில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
Shalu-வை தொடர்ந்து கேட்பவர்கள் குறிப்பாக இந்த வசனத்தை மறந்திருக்க மாட்டார்கள்... " ஞாயித்துக் கிழமை அதுவுமா வீட்டுல என்னங்க special? நண்டுக் கறியா? வாசம் மூக்கைத் துளைக்கிதே...! "
Shalu-வை தொடர்ந்து கேட்பவர்கள் குறிப்பாக இந்த வசனத்தை மறந்திருக்க மாட்டார்கள்... " ஞாயித்துக் கிழமை அதுவுமா வீட்டுல என்னங்க special? நண்டுக் கறியா? வாசம் மூக்கைத் துளைக்கிதே...! "
ஏதோ ஓய்வாக வீட்டில் இருக்கும் நாளில் பசி mood-டை கிளப்ப பேசுகிறார்கள் என்று அவரை எளிதில் எண்ணி விடாதீர்கள், சமையல் என்று வந்து விட்டால் கையில் பிடிக்க முடியாத இரகம் தான் அவர்.


இவரைப் போன்றே வழக்கமாக மிகவும் பரபரப்பான இருக்கும் கணவர் Diccam Lourdes- க்கு இந்த MCO காலக்கட்டத்தில் இன்னும் நாக்குக்கு ருசியாக வகை வகையாக சமைத்துப் போடாமல் இருப்பாரா என்ன?
இவர் சமைக்கும் பதார்த்தங்கள் வண்ணக் கலவைகளாக காட்சியளிக்கும். அந்தப் புகைப்படங்களை அவர் முகநூலில் பதிவேற்றியது தான் தாமதம், likes-சுகள் தெறிக்கும்.
வானொலி அறிவிப்பு போக, சொந்தமாக Boutiq வைத்து நடத்தி வரும் ஷாலு தனது செல்ல மகனுக்கும் வேண்டியதை, அவன் விரும்பியதை சமைத்துக் கொடுக்கவும், அவனுடன் அதிக நேரம் செலவிடவும் இந்த MCO காலக்கட்டம் நல்லதொரு வாய்ப்பினை வழங்கியிருப்பதாகக் கூறினார்.
அடுத்து என்ன ஷாலு, உணவகத்தைத் திறந்து விட வேண்டியது தானே? கணவரிடம் சொல்லுங்கள், கண்டிப்பாக செய்வார் !
லெட்சுமி ராஜேந்திரன்
ஜொகூர் ச்சாஆவைச் சேர்ந்த லெட்சுமி, குடும்பத் தலைவர் ராஜேந்திரனுக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு சொந்தத் தொழில் செய்து வருகிறார். சாமி பொருட்கள் , தையல், பரிசம் மற்றும் திருமண ஏற்பாடுகளுக்கான பொருட்களை வியாபாரம் செய்து வந்தவர், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, MCO அறிவிக்கப்பட்டதும் சற்றே ஆடித் தான் போனார்.

வீட்டில் இருக்கும் காலக் கட்டத்தில் தனது முழு கவனத்தையும் சமையல் கட்டு பக்கம் திருப்பி விட்டார். வேலை பளு காரணமாக இதுநாள் வரை மிஸ் பண்ணிய சமையல்களை சமைத்துத் தள்ளி விட்டார்.
காலைப் பசியாறை என்ன, மதிய உணவு என்ன, தேநீர் பலகாரம் என்ன, இரவு விருந்து என்ன..... நீயே நீயா என கணவரே ஆச்சரியப்பட்டு போகும் அளவுக்கு ஜமாய்த்து விட்டார்.
வலது கரமாக மருமகள் இருக்க, கரிப்பாப்பில் தொடங்கியவர் பருப்பு வடை, உளுந்து வடை , பாசிப்பயர் கஞ்சி என variety காட்டினார். வீட்டில் இருந்தே வகுப்புகள் நடைபெறுவதால் பிசியாக காணப்படும் 2 மகள்களும் அவ்வப்போது உதவாமல் இல்லை.
நமக்கு பழகிப் போன சுருளப்பம், கேசரி, அவித்த கேக் என முதல் gear-ரில் தான் போய்க் கொண்டிருந்தார். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை Top gear-ரில் போட்டு தூக்கி Apam Balik, Cakoi, Ikan Tiga Rasa, Puding Zebra, Roti Bangali முதல் Red Velvet Cake வரை சென்று விட்டார்.
வெறும் சமையலோடு நின்று விடாமல், நேரம் கிடைக்கும் போது சிறிய அளவில் Burger ஆர்டர்களைப் பெற்று அதில் வேறு பிசியாகி விட்டார்.

சிங்கப்பூரில் இருக்கும் மகன் நாடு திரும்பியதும் இதே வேகத்தில் வகை வகையாக சமைத்து போட்டு அசத்தக் காத்திருக்கிறார் லெட்சுமி.

வியாபாரம் மீண்டும் செழிப்படைய வாழ்த்தும் அதே வேளை, சமையலையும் விட்டு விட மாட்டீர்கள் என #வியன் எதிர்பார்க்கிறது.
#MCO காலக்கட்டத்தில் facebook -கில் சமையல் புகைப்படங்களைப் பதிவேற்றி தெறிக்க விட்டவர்களில் இவரும் முக்கியமானவர்.
சிங்கப்பூரில் வேலை செய்து வந்த ஜீவராணிக்கு, இந்த கொரோனா தாண்டவத்தால் வீட்டில் இருக்கும் சூழ்நிலை.
"இருக்கட்டுமே, அதனால் சும்மா இருந்து விட முடியுமா என்ன?' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவராய் தனது கை வண்ணத்தைக் காட்ட கிளம்பி விட்டார்.
ஒவ்வொரு நாளும் சமைத்து முடித்தவுடன் ஒரு பெருமையுடன் ஆத்ம திருப்தியும் வந்து விட, அடுத்த நாள் புது ரெசிப்புடன் ரெடியாகி விடுகிறார்.


சதா சமையல் கட்டில் ஒரே அலுப்பு தான் என்றாலும், இவர் விடுவதாக இல்லை
செட்டிநாடு சிக்கன் மசாலா, Roti Jala, கொல்லு வடை, Marble Cake, Mini Chocolate Donut, Kuih Bom Bijan, Milo Popsicle, Malabar parrotta, Ghee Cone Thosai, Crab Soup, Chicken Curry Puff, புதினா தோசை, Chicken briyani with mutton dalca, chicken 65, kuih ketayap,onde onde, பீட்ருட் தோசை...ஷபா கண்ணைக் கட்டுதுல்ல ...

இவரின் இரு சிங்கக் குட்டிகளும் பாரம்பரிய அதுவும் மலாய் பலாகரங்களை விரும்பி உண்பதாகவும் ஜீவராணி சொன்னார்.
அன்புக் கணவர் பிரேம் குமார் தமது சமையலை விரும்பி உண்பதாகக் பெருமையுடன் கூறும் இவர் அதற்காகவே இன்னும் கூடுதல் மெனக்கெடல் செய்கிறார். வேலையில் பரபரப்பாக இருக்கும் கணவருக்கு இப்படி வாய்க்கு ருசியா சமைத்தால் பிடிக்காமல் போய் விடுமா என்ன?

அதற்கான இதே நீடிக்க விட போகிறது! என் நண்பன் முன்னாள் ஓட்டக்காரன். கொஞ்சம் fit-டா maintain செய்ய ஏதுவாக அவ்வப்போது கட்டுப்பாடான உணவையும் சமைத்துப் போடுங்கள் ஜீவராணி! 😊 அவரை முடிந்தால் பழைய படி ஓட்டத்திற்குத் திரும்பச் சொல்லுங்கள்.
சங்கீதா சரவணன்

Chicken Roast முதல் பல்வகை கேக்குகள் வரை பரவசப்படுத்தி விட்டார். கணவர் சரவணனுக்கும் இரு ஆண் செல்வங்களுக்கும் வகை வகையாக சமைத்து போட்டார் என்பதை விட, சமைத்தவற்றை அழகுப்படுத்தி தானும் அறிவிக்கப்படாத ஒரு chef தான் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார். மூன்றாவது கைக் குழந்தை ஆதலால், அம்மாவின் MCO-வின் சமையலை miss செய்து விட்டது.


பள்ளி நாட்களில் வேலைப் பளுவால் கிடைக்காத நேரத்தை இந்த MCO காலத்தில் வெகுவாக பயன்படுத்திக் கொண்டது நன்றாகவே தெரிகிறது.
எல்லாருக்கும் வந்து விடாது அல்லவா, அதனால் இதோடு நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமைத்து குடும்பத்தாரை மகிழ்விக்கும் அதே வேளை, இயன்றால் அதை வர்த்தகப்படுத்துவது பற்றியும் யோசிக்கலாமே சங்கீதா :-)


MCO இப்போது RMCO-வாக மாறி விட்டாலும், நீங்கள் வேலைக்குத் திரும்பி விட்டாலும், சமையலை நிறுத்தாதீர்கள். நேரம் கிடைக்கும் போதும், வசதிப்படும் போதும் கைவண்ணத்தைக் காட்டுங்கள்.
குறிப்பாக குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவுகளைத் தயாரிப்பது எப்படி என்பது பற்றி கூட நீங்கள் யோசிக்கலாம். அவற்றை முகநூலில் பகிர்ந்தால் பலரும் பயன்பெறுவார்கள்.
- Quarantine Cook-குகள் தொடரும் !
No comments:
Post a Comment