"கொரோனா கிளம்புமா, இல்ல இங்கேயே டேரா போட்டு உசுர வாங்குமா? ஏதாச்சும் பார்த்து சொல்லுங்கப்பு!" என கிளி ஜோசியரிடம் கேட்காத குறையாய் மக்கள் அலைமோதி வருகின்றனர்.
ஆனால் மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்புடன் செயல்பட வேண்டிய அரசியல்வாதிகள், அதை விட ஊருக்கும் உலகுக்கும் 'முக்கியமான' திடீர் தேர்தல் குறித்து நாள்தோறும் அறிக்கை விட்டு வருகின்றனர்.
உலகமே கொரொனா வைரஸ் பெருந்தொற்றால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இந்த நாட்டில் மட்டும் சந்தடி சாக்கில்லாமல் அரசியல் சர்ச்சைகள் புகுந்து விளையாடி வருகின்றன.
கட்சித் தாவலால் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக் கவிழ்ந்து, புதிய கூட்டணி அரசு அமைந்து 4 மாதங்கள் ஆகி, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்கள் அல்லும் பகலும் போராடி வருகின்றனர்.
ஆனால், அரசியல் அலப்பறைகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லை.
" திடீர் தேர்தலுக்கு நாங்கள் தயார் !, கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன!, தேர்தலுக்குத் தயாராகுங்கள்!, ஆண்டு இறுதியில் தேர்தல் வரலாம்!" இப்படி.....
இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்றல்ல, எல்லா பக்கமுமே அதே நிலை தான்.
போகிறப் போக்கைப் பார்த்தால் பஞ்சாயத்து முடியாது போலிருக்கிறது.
நோய்ப் பரவல் சற்று வலுவிழந்துள்ள இந்நிலையில், அரசியல் செய்திகள் மீண்டும் ஆவர்த்தனம் செய்கின்றன.
நாற்காலி ஆசை யாரை விட்டது?
எங்கு பார்த்தாலும் , (வெளியில்) கூட்டணிப் பற்றிய பேச்சும், அடுத்தப் பிரதமர் யார் என்பதிலும், ( உள்ளே) யாரை எப்போது கழற்றி விடலாம் என்பதிலும் தான் முழு வீச்சில் வேலைப் போய்க் கொண்டிருக்கிறது.
ஒரே 'கய முயா கய முயா' என போய்க் கொண்டிருக்கும் இந்த அரசியல் சர்ச்சைக் குறித்து வியன், முகநூல் பயனர்களிடம் கேட்டறிந்தது.
அவர்களில் ஏறக்குறைய அனைவருமே தேர்தல் தேவையற்றது என்ற கருத்தைத் தான் முன் வைத்திருக்கிறார்கள்.
அவர்களில் சிலரின் கருத்துகள் இதோ:

அவரவர் அவரவர் பாணியில் சொல்லி விட்டார்கள். பொதுத் தேர்தல் முடிந்தே இப்போது தான் முழுசாய் 2 ஆண்டுகளைத் தாண்டியிருக்கிறோம். அதற்குள் என்ன அவசரம்? என்பது தான் அவர்களின் கருத்தாக உள்ளது. #வியன் பார்வையிலும் இப்போதைக்கு மட்டுமல்ல ஆண்டு இறுதியில் கூட தேவையில்லை என்று தான் தெரிகிறது.
அப்படியொன்றும் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என மக்கள் யாரும் ஒற்றைக் காலில் நிற்கவில்லை. மக்களின் கவலையெல்லாம், இந்தப் பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து எப்படி மீண்டு வாழ்வாதாரத்தை சரியானப் பாதையில் நிலை நிறுத்துவது என்பது தான்!
'கொல்லைப்புறமாகவே' ஆட்சிக்கு வந்ததாக வைத்துக் கொள்வோம். இன்று அவர்கள் தான் அரசாங்கம். நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் கடப்பாடு அவர்களுக்கு உண்டு.
கடந்த 3 மாதங்களாக அதை அவர்கள் செய்து வருகிறார்கள். சாமான்ய மக்களின் கருத்தும் அதுவே. தொடர்ந்து செய்யட்டும். பெருந்தொற்றுக்குப் பிந்தைய நாட்டின் மீட்சி மிக முக்கியமானது.
மீண்டும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி நிலைத்தன்மையைப் பாதிக்கச் செய்ய வேண்டிய அவசியமும் அவசரமும் என்ன? அது போக தேர்தல் செலவு 40 கோடி ரிங்கிட்டில் போய் நிற்கும். பேசாமல் அதை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் அல்லவா?
பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய அருமை அரசியல்வாதிகளே, நீங்கள் எந்தப் பக்கமாவது இருந்து விட்டு போங்கள். எங்களுக்கு அக்கறையில்லை. மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்கின்றதா என்பது தான் இப்போதையக் கேள்வி!
எதிர்கட்சியே, தயவு செய்து ஆளுங்கட்சியை ஆள விடுங்கள்.
ஆளுங்கட்சியே, உங்களின் குறைகளைச் சுட்டிக் காட்டி அரசு நிர்வாகத்தில் Check and Balance இருப்பதை உறுதிச் செய்ய, நாடாளுமன்றம் திறந்த கையோடு எதிர்கட்சிகளுக்கு உரிய வாய்ப்பை வழங்குங்கள். ( நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம் )
தற்போது நமக்கெல்லாம் 'கடவுளாக' தெரியும் சுகாதார முன் வரிசைப் பணியாளர்களை நினைத்துப் பாருங்கள்.
நாமெல்லாம் நலமுடன் இருக்க, மாதக்கணக்கில் தங்களது குடும்பத்தாரை பிரிந்து மக்கள் பணியே மகேசன் பணி என்று அல்லும் பகலும் உழைக்கிறார்கள். 👏
நம்மையும் நாட்டையும் அவர்கள் காப்பாற்றிக் கொடுப்பார்களாம். அரசியல்வாதிகள், சந்தடி சாக்கில் புகுந்து தேர்தலை நடத்த வைத்து, அவர்கள் பாட்டுக்கு நாடாளுமன்றத்திற்குப் போய் விடுவார்களாம். நன்றாக இருக்கிறதே உங்கள் திட்டம் ! 😮
தேர்தல் பற்றிய பேச்சுக்களை மூட்டைக் கட்டி வைத்து விட்டு, போய் மக்கள் பணியாற்ற முயற்சி செய்யுங்கள்.
முடியாவிட்டால், மௌன விரதம் இருங்கள்; அதுவும் முடியாவிட்டால் தியானத்திற்கு போய் விடுங்கள்.
உங்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது!
#வியன் வெறுக்கிறான் ! 😬
No comments:
Post a Comment