அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Wednesday, 17 June 2020

Quarantine Cook-க்குள் ( பகுதி 3 )


மூன்றாவது தொடரில் சந்திக்கிறோம்.

முதலிரண்டு பகுதிகளில் வலம் வந்தவர்களின் சமையல்களைப் பார்த்து வியந்தவர்களுக்கு, இம்முறையும் 'விருந்து' காத்திருக்கிறது.

ரசியுங்கள், முடிந்தால் செய்து பாருங்கள். யாருக்குத் தெரியும், அடுத்தப் பதிவில் நீங்களும் வலம் வரலாம்.... 




"முழுசா Chef-வா மாறியிருக்கும் சாந்தியைப் பாருங்கப்பா !" 

என்று சொல்லும் அளவுக்கு இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) காலத்தில் முழு Chef-வாகவே மாறி விட்டார் சாந்திதனியார் வானொலி இசைப் பிரிவு மேலாளரான இவர் தினசரி சமையல் குறிப்புகள் , படங்கள் , வீடியோ என அசத்தி விட்டார்.

கணவர் குழந்தைகளுடன்
சாந்தி
#ApamBalik -கில் ஆரம்பித்தவர் Full Swing அடித்து Ice Cream-மை பசியாறி, அங்கிருந்து U-turn போட்டு அயல்நாட்டு Pizza வரையில் விட்டு வைக்கவில்லை. 

இடையிடையில் #KurangManisKuihLapis, ச்சவுக் ச்சவுக் #Cakoi, #OrangeButterCake, #SujiVegeCake, #KuihKuchai, #KuihSagu, பொசு பொசு பூரி, பால் சொட்டும் Bread Pudding, Dim Sum-மாக உருமாறிய Pau, பாசிப்பயர் உருண்டை என இன்னொரு ரவுண்ட் வந்து விட்டார். 

திருமணமான இந்த 9 ஆண்டுகளில் இவ்வளவு நாளும் எங்கே போனது இந்தத் திறமையெல்லாம் என கணவரே ஆச்சரியத்துடன் கேட்கிறார் என்றால்  பார்த்துக் கொள்ளுங்களேன். 

அவரின் ரொட்டி சானாயைப் பார்த்து வியந்து வீட்டில் செய்து பார்த்து புகைப்படம் போட்டு நன்றி தெரிவிக்கும் அளவுக்கு சாந்தி சமையலில் கலக்கி விட்டார்


சாந்தி, ரொட்டி சானாய் சத்தூ..... 😝
சாந்தியின் இதர MCO கை வண்ணங்கள் இதோ

Apam Balik 

Orange Butter Cake 

Cakoi 

வட்ட வட்டமாய், சீனி சொட்ட சொட்ட Doughnut

அடடே, ஐஸ் கிரீம் !

பசியாறைக்கு Sweet Bun 

Pizza Hut-டுக்கே tough கொடுக்கும் சாந்தி செய்த Pizza

பூரி, Kurang Manis Kuih Lapis, Suji Vege Cake, Pau, Bread Pudding 
அம்மா சொல்லிக் கொடுத்த கறுப்பு சீனி உளுந்து உருண்டை ரெசிப்பி

சாந்தியின் சமையல் அறையில் அவரின் இரு செல்வங்களும் அவ்வப்போது உதவியாக இருந்து, தங்கள் பங்களிப்பையும் தவறாமல் செய்திருக்கின்றனர். 

அம்மாவின் சமையலை ஒரு கை பார்த்து விடுவதோடு, நாளை என்னம்மா Item வைத்திருக்கீர்கள் என்று  கேட்டு விட்டுதான் தினமும் படுக்கவே போகிறார்களாம். 

அதனாலேயே மறுநாள் ஒரு ஐட்டத்துடன் ஆஜராகி விடுகிறார் முன்னாள் பத்திரிகை நிருபருமான சாந்தி.

அன்புத் தாயாருடன்
சாந்தியின் சமையல் அனைத்தும் MCO காலத்தில் கற்றுக் கொண்டவை என சொன்னால் ஆச்சரியமாக இல்லை? 

தனது தாயாரும் அதிகம் கற்றுக் கொடுத்திருப்பதாக Credit கொடுத்த சாந்தி, You Tube உதவிக்கும் நன்றி பாராட்டினார்.

வீட்டில் இருந்து வேளா வேளைக்கு சமைத்துப் போட்டு ஆவர்த்தனம் செய்த சாந்தி வேலைக்குத் திரும்பியதும் இந்த MCO காலத்தை ரொம்பவும் மிஸ் பண்ணுவேன் என்கிறார்.

வேலைப் பளுவால் பழையபடி முழு நேரமாக சமைலறையில் ஆஜராக முடியாது என்றாலும், இனி வாரக் கடைசிகளில் தவறாமல் புதுப்புது ரெசிப்பிக்களுடன் வலம் வரப் போவதாக உறுதி எடுத்திருக்கிறார்.

அப்படியே, செய்திப் பிரிவு பக்கம் வந்தால் அடியேனை மறந்து விடாதீர்கள் சாந்தி...... Kurang Manis Kuih Lapis, ரொட்டி சானாய் சத்தூ....! 😋



கொடி பெருமாள்   இளவரசி பெருமாள் சகோதரிகள் 

இவர்களைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை; அவர்களின் கைவண்ணமே பேசி விடும்.

-->> BUTTERFLY COOKIES <<--
அக்காவும் தங்கையும் இந்த MCO காலத்தில் சமையல் அறையை விட்டே வெளியே வரவில்லை போலும்.  

'ஆதிபராசக்தி' படத்தில் மீனவராக வரும் சுருளிராஜன் 
ஆதிபராசக்தியிடமே வெகுளியாக ஒரு வசனம் பேசுவார்....
"அடடடா, பொங்கலென்ன, பாவாசமென்ன, அதிரசமென்ன,  பலவாரமென்ன, அதையும் வந்து சாப்பிட்டுப் போயிரு ஆத்தா!" என்று.

இவர்களின் சமையல் 'சாம்ராஜ்யத்தைப்' பார்த்தால் எனக்கு அந்தக் காட்சி தான் ஞாபகத்துக்கு வருகிறது.










பணியாரம் முதல் பிரியாணி வரை, 
Candy முதல் லட்டு வரை, 
#KuihLapis முதல் #Karipap வரை, 
#RotiNan முதல் #RotiJala வரை, 
#NasiLemak முதல் #NasiAyam  வரை.... 

ஷபபபா இப்போவே கண்ணைக் கட்டுதுல்ல.... 

நானும் எழுதுகிறேன் என்பதற்காக #வியன் ஒன்றும் சும்மா 'அள்ளிவிடவில்லை!   ஆர்டர் செய்து ருசியை சுவைத்து விட்டு தான் இப்படி சுவை குன்றாமல் எழுதுகிறேன் 😁

Mango Sticky Rice
பொழுதுப் போக்காக தொடங்கியது இப்போது உபரி வருமானமாகவும் விளங்குகிறது. 

இப்போதைக்கு இவர்களின் Hot சமையல் #MangoStickyRice. நிறைய ஆர்டர்கள் வருவதாகக் கேள்விப் பட்டேன். மகிழ்ச்சி, வாழ்த்துகள்!

பூச்சோங், புக்கிட் ஜாலில் பக்கம் வந்தால் இந்த வியனை மறக்காதீர்கள் சகோதரிகளே ... 😛


- தொடரும் ....

1 comment:

Kayalarasi said...

Thank you so much anna. soon soon will received the mango sticky rice