அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Tuesday, 16 June 2020

சிகிச்சைக்காக வெளிநாடு போனாரா முகிதின்? பிரதமர் துறை மறுப்பு!

முகிதின் புற்றுநோயில்ருந்து விடுபட்டார்


பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் புற்றுநோய்க்காக வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொண்டதாக Sarawak Report வெளியிட்ட செய்தியை பிரதமர் துறை அலுவலகம் (PMO) திட்டவட்டமாக மறுத்திருக்கிறது!

தீய நோக்கத்திலான மற்றும் வடி கட்டிய பொய் என அதனைச் சாடிய PMO, கற்பனையில் செய்திகளைக் கட்டவிழ்த்து விடும் பொறுப்பற்ற நடவடிக்கையை சரவாக் ரிப்போர்ட் உடனடியாக நிறுத்திக் கொள்வது நல்லது என எச்சரித்தது. 

நோன்புப் பெருநாளுக்கு முன்பாக 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்  கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்த சமயத்தில் அதனை மீறி முகிதின் சத்தமே இல்லாமல் சிகிச்சைக்காக வெளிநாடு பயணமானதாக சரவாக் ரிப்போர்ட் கூறியிருந்தது.

PMO வெளியிட்ட மறுப்பு அறிக்கையுடன், முகிதின் தற்சமயம் முற்றாக புற்றுநோயில் இருந்து விடுபட்டிருப்பதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் உடன் இணைத்திருக்கிறது.


பிரதமர் தமது பணிகளைச் செவ்வனே ஆற்றும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பதையும் உறுதிபடுத்தியது. 
" Quarantine சமயத்தில் பிரதமர் அனைத்து உத்தரவுகளைப் பின் பற்றி வீட்டிலேயே இருந்தார். வீட்டிலிருந்தபடியே தான் Video Conferencing மூலம் அமைச்சர்களுடனான முக்கியச் சந்திப்புகளை அவர் நடத்தினார். எனவே, அவர் உத்தரவை மீறினார்; வெளிநாடு போனார் என்பதெல்லாம் கட்டுக் கதை !" 
மே 22-ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறையில் நடைபெற்ற அமைச்சரவைக்குப் பிந்தையக் கூட்டத்தில்  பங்கேற்றவர்களில்  அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டது.
டனே முகிதின் உட்பட அக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் முகிதினுக்கு அத்தொற்று இல்லை என உறுதிச்செய்யப்பட்டது.
ன்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்  கொள்ளுமாறு அவர் கேட்டுக்  கொள்ளப்பட்டார். 
புக்கிட் டாமான்சாராவில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே
முக்கிய அமைச்சர்களுடன் சந்திப்புகளை நடத்திய போது..

வெ
றுமனே கதை அளக்காமல், தாங்கள் கூறிக் கொள்வது போல் முகிதின் போனதாகக் கூறப்படும் விமானம், சிங்கப்பூர் மருத்துவமனை, சிகிச்சைப் பார்த்த மருத்துவர் யார் என்ற தகவல்களை சரவாக் ரிப்போர்ட் இருந்தால் வெளியிடட்டுமே பார்க்கலாம் எனவும் PMO சவால் விடுத்தது. 
வ்வாறு நிரூபிக்கத் தவறினால் பிரதமரின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் வெளியிட்ட பொய்ச் செய்தியே அதுவென்பதை சரவாக் ரிப்போர்ட் ஒப்புக் கொள்ள வேண்டும் என PMO  கூறியது.
2018 பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு முகிதினுக்கு கணையப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, சிங்கப்பூரின் பிரபல மருத்துவமனையொன்றில் அவர் சிகிச்சை மேற்கொண்டார். 
பழையப் படம் : 2018-ஆம் ஆண்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்த முகிதினை அப்போதையப் பிரதமர் துன் மகாதீர் சென்று நலம் விசாரித்த போது..
ல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு நாடு திரும்பிய பிறகே Pagoh நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 
மாமன்னர் முன்னிலையில் பிரதமராகப்
பதவியேற்கும் முகிதின்.
தன் பிறகு Pakatan அமைச்சரவையில் சக்தி வாய்ந்த உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய முகிதின், பிப்ரவரி வாக்கில் அக்கூட்டணியில் இருந்து விலகி, அம்னோ , பாஸ் கட்சிகளை இணைத்துக் கொண்டு #PerikatanNasional எனும் புதியக் கூட்டணி அரசை அமைத்து நாட்டின் 8-வது பிரதமர் ஆனார். 
து எப்படியோ, பிரதமர் புற்றுநோயில் இருந்து மீண்டிருக்கின்றார் என்ற செய்தியை, அரசியல் விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு வரவேற்று, அவர் தொடர்ந்து உடல் நலத்துடன் பணியாற்ற வேண்டுவோம்!
#வியன்   

No comments: