அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Saturday, 13 June 2020

என்னதான் நடக்கிறது பக்காத்தானில் ?

"றுபடியும் மொதல்ல ருந்தா ? "

ட்சியை இழந்த பக்காத்தான் கூட்டணியின் அண்மையை நிலவரங்கள் எனக்கு அந்த வடிவேலுவின் காமெடி வசனத்தை தான் நினைவுப்படுத்துகின்றன!  

புத்ராஜெயாவை மீண்டும்  கைப்பற்றப் போவதாக கடந்த சில வாரங்களாகவே ஒரு சில தலைவர்கள் - தொண்டர்கள்  வெளிப்படையாகவும் மறைமுகமாவும் பேசி  வருகின்றனர்.

டப்பு ஆட்சியைக் கவிழ்க்க கூடிய அளவுக்கு பெரும்பான்மை வந்து விட்டதாகவும், நாட்டுத் தலைவரைச் சந்திக்க அனுமதி கேட்கப் போவதாகவும், இல்லை இல்லை ... நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்காக காத்திருப்பதாகவும் செய்திகளும் வதந்திகளும் வந்த வண்ணம் உள்ளன.

ங்கள் பக்கம் 130 பேர் வரை வந்து விட்டதாகக்  கூட யாரோ புரளி கிளப்பி விட்டனர். ஆனால், தங்களிடம் 107 MP-கள் இருப்பதாக PH+ தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது twitter பக்கத்தில் தெளிவுப்படுத்தியிருந்தார்.  

ரசியலில் அதெல்லாம் சகஜம்.  ஒன்றுக்கொன்று உளவியல் ரீதியாக அப்படித் தான் மோதிக் கொள்வார்கள். அதெல்லாம் பிரச்னையே இல்லை.

ப்போது என்ன தான் பிரச்னை என்கிறீர்களா? 

விளக்குவதற்கு முன் ஒற்றை வரியில் சொல்லி விடுகிறேன். ஆம், மகாதீரா அன்வாரா ? என்ற அறிவிக்கப்படாத போர் மூலம் பக்காதான் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்பதாகவே  #வியன் கருதுகிறான். 

2018 பொதுத் தேர்தலுக்கு முன் வேண்டுமென்றால் மகாதீர்-அன்வார் கூட்டணி கூடுதல் பலமாக இருந்திருக்கலாம். ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அந்நிலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இப்போது ஏறக்குறைய இல்லாமலேயே போய் விட்டது. 

பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்படும் முயற்சியில், பக்காத்தில் 9-வது பிரதமர் யாரென்ற போட்டா போட்டி வெடித்திருப்பதாகவே தெரிகிறது. 


ப்பதவிக்கு மகாதீரே பொருத்தமானவர் என அவர் பக்கம் இருக்கும் ஒரு சாராரும், இல்லை இல்லை அன்வார் தான் அதற்குத் தகுதினாவர் என இந்த பக்கம் PKR கட்சிக்காரர்களும் பொதுவில் வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். 

ன்றை இங்கு புரிந்துக் கொள்ள வேண்டும்...

#NotMyPM , கொல்லப் புற பிரதமர், கொல்லைப் புற அரசாங்கம் என நீங்கள் என்ன தான் அசைத்துப் பார்த்தாலும் எட்டாவது பிரதமர் உங்களில் எவருக்கும் பிடி கொடுப்பதாகத் தெரியவில்லை. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையிலேயே அவரின் முதல் 100 நாட்கள் கடந்து விட்டாலும், மார்ச் ஒன்றாம் தேதி பதவியேற்ற போது அவருக்கிருந்த மக்கள் செல்வாக்கு இன்றையத் தேதிக்கு பன்மடங்கு உயர்ந்து நிற்கிறது.  

ங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, அது தான் நிதர்சனம்! உண்மைக் கசக்க தான் செய்யும்.

ப்பதிவு கூட  அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. ஆட்சி அதிகாரம் அவரிடம் இருக்கிறது. அவரை எதிர்த்து நீங்கள் அரசியல் செய்ய வேண்டுமென்றால், அவரை விட அல்லது அவருக்கு நிகராக பலம் இருக்க வேண்டும்; அதை விட உங்கள் பக்கம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது தான்!

ன்னமும் சச்சரவில் சிக்கிக் கொண்டிருந்தால், யாரை வீழ்த்த நினைக்கிறீர்களோ அவர்களே உங்களை எள்ளி நகையாட நீங்களே வழிய போய் வாய்ப்பு வழங்குகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

20 ஆண்டுகளுக்குப் பிறகும், 22 மாத ஆட்சி கவிழ்ந்த பிறகும், இன்னமும் மகாதீரா அன்வாரா என விவாதம் நடத்திக் கொண்டிருந்தால், பிறகு உங்களை யாரும் காப்பாற்ற முடியாது.

ரசியலில் விவேகம் முக்கியம் தான். ஆனால் சில நேரங்களில் வேகமும் முக்கியம். சும்மா ஜவ்வாய் இழுத்துக் கொண்டிருந்தால் சறுக்கல் தான் மிஞ்சும்!

PKR, DAP, AMANAH 3 கட்சிகளிடம் மட்டுமே 92 சீட்டுகள் இருக்கின்றன. நீங்கள் இன்னமும் வலுவான எதிர்கட்சி தான். முடிவெடுப்பது மிக எளிது. எடுத்து விட்டால், அங்கிருந்து அடுத்தக் கட்டத்திற்கு நகருவது அதை விட எளிது.

ல்லையென்றால் இடியாப்பச் சிக்கலுக்குள் சிக்கிக் கிடக்க வேண்டியது தான். 

ங்களிடம் இலட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். அதை விட இன்னமும் உங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அந்நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது அல்லவா?

நீங்கள் பாட்டுக்கு, எங்களிடம் பலம் இருக்கிறது, ஆட்சிக் கட்டில் எங்களுக்குத் தான் என்ற ரீதியில் பேசி விட்டு போய் விடுவீர்கள். அவற்றையெல்லாம் நம்பி வெளியில் பேசி விட்டு கடைசியில் அவர்கள் கதியற்று நிற்கவா? 

'தட்டுறோம், தூக்குறோம்' என்ற முடிவுக்கு வந்து விட்டால், அதை நோக்கித் தெளிவாகப் பயணிக்க வேண்டும்.

ல்லையென்றால், இதே 12 ஆண்டுகளுக்கு முன் ' எங்களுடன் 35 MP-கள் வரத் தயாராக இருக்கிறார்கள். செப்டம்பர் 16-ஆம் தேதி புத்ராஜெயாவில் புதிய ஆட்சி அமையும்!" எனக் கூறி கூறியே கொட்டாவி விட்ட நிலை தான் ஏற்படும்.

- வியன்  

No comments: