" ஆட்டிறைச்சி பிரியாணி வருமா? "
நண்பர் அல்லது பக்கத்து வீட்டுக்காரர் நம்மிடம் கேட்கலாம். அது சகஜம், ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் உங்களைப் பார்த்துக் கேட்டால் எப்படி இருக்கும்?
கேட்பது இருக்கட்டும், கனவில் கூட நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா?
ஆனால், இவருக்கு முடிந்திருக்கின்றது. நாட்டுப் பிரதமரே அவரைப் பார்த்துக் கேட்கிறார் "Bila mau belanja saya makan nasi briani kambing?" என்று!
ஆம், அவர் வேறு யாராக இருக்க முடியும், 4 மாதங்களாக மலேசியர்களின் மனம் கவர்ந்த தம்பதியராக வலம் வரும் சுகு பவித்ரா தான்.
பேச்சில், உடல் மொழியில், வாழ்க்கையில் என எல்லாமுமே எளிமையாக இருக்கும் அவ்விளம் தம்பதியரே ஆச்சரியப்படும் அந்நிகழ்வு இன்று பிற்பகலில் நடந்தேறியது.
கொரோனா வைரஸ் தாக்கத்தைச் சமாளிக்க அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் பரிவுமிக்க உதவி நிதி (BPN) பெறுநர்களுடன் பிரதமர் இன்று வீடியோ வழி உரையாடினார்.
பிரதமருடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தவர்களில் நமது செல்லத் தம்பதி சுகு-பவித்ராவும் அடங்குவர்.
BPN நிதி குறிப்பாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் தங்களின் வாழ்வாதார சுமையைக் குறைக்க பெரிதும் உதவியதாக பிரதமரிடம் கூறினர்.
தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதையில் தொடர்ந்து வெற்றி நடைப் போட அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
சுகு பவித்ரா தங்களின் சமையல் ஆர்வத்தைத் தொடர உதவுப் வகையில் தான்ஸ்ரீ முகிதின் ஏற்கனவே அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட சமையலுக்கான அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்தது நினைவிருக்கலாம்.
பேராக், சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த அவர்கள் உணவகம் திறப்பதை லட்சியமாகக் கொண்டுள்ளனர். பவித்ராவின் You Tube Channel இன்றையத் தேதிக்கு 6 லட்சத்துக்கும் அதிகமான Subscribers-களைக் கொண்டிருக்கிறது.
இவ்வேளையில், சுகு பவி தம்பதி புது வீட்டில் குடித்தனம் போயிருக்கின்றனர். புது வீட்டை கழுவி சுத்தம் செய்யும் வீடியோவை அவர்கள் பதிவேற்றியுள்ளனர்.
தோட்டத்தில் இருந்து இன்று சொந்தமாக வீடு வாங்கி போகும் அளவுக்கு அவர்களின் சுய முயற்சி உதவியிருக்கிறது.
வளர விரும்பும் அனைத்து மலேசியர்களுக்கும் தொடர்ந்து ஒரு முன்மாதிரியாக விளங்கிட #வியன் வாழ்த்துகிறான்.
#சுகு #பவித்ரா #சுகுபவித்ரா #SuguPavi #SuguPavithra #Muhyiddin #PM8 #TSMY #Covid19 #Coronavirus #PKP #PKB #PKPP #MCO #CMCO #RMCO
No comments:
Post a Comment