அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Monday, 16 July 2012

கலக்குவாரா Usain Bolt ? தடுப்பாரா Michael Phelps ?

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் London 2012 ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னமும் 10 நாட்களே எஞ்சியுள்ளன. உலகக் கிண்ணக் கால்பந்தை போலவே ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் ஒரு முறை விளையாட்டு ரசிகர்களை தொலைக்காட்சி முன் கட்டிப் போடும் மனிதநேயத் திருவிழா. 205 நாடுகள்,  15 ஆயிரம் விளையாட்டாளர்கள், 26 வகையான விளையாட்டுகள், 302 தங்கப் பதக்கங்கள்...500 கோடி மக்கள் காணப் போகும் உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழா.  ஒலிம்பிக் போட்டிகளில்  யாராவது ஒருவர் முத்திரை பதித்து விட்டு வரலாற்றில் இடம் பிடித்து விடுவார்கள்.  1896-ஆம் ஆம் ஆண்டு தொடங்கி 2008-ஆம் வரை இதுவரை நடைப்பெற்ற 28 போட்டிகளிலும் அதுதான் நடந்து வந்திருக்கின்றது. லண்டன் மண்ணிலும் அது நிச்சயம் தொடருமென்பதே பரவலான எதிர்பார்ப்பு. ஆனால் அது யாரென்பதே இப்போதையே கேள்வியாகும். இருந்த போதிலும் நினைத்தவுடனேயே கணிப்புக்கு எட்டுவது Usain Bolt, Michael Phelps ஆகிய அதிவேக வீரர்கள் இருவரும் தான். ஒருவர் தடகளத்தில் பின்னுகிறார். மற்றொருவர் நீச்சல் குளத்தை அதிர வைக்கிறார். Beijing 2008 ஒலிம்பிக்கில் நீயா நானா என்ற அளவுக்கு ஆளாளுக்குத் தங்கங்களை வாரிக் குவித்தவர். Bolt மூன்று தங்கங்களையும் Phelps எட்டு தங்கங்களையும் வென்றனர். இருவரின் அண்மைய சாதனைப் பட்டியல் இதோ.....


பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் வெற்றிக் கோட்டை எட்டுகிறார் Bolt

Usain Bolt 

Beijing 2008 ஒலிம்பிக்: 
100 மீட்டர் தங்கம் ( புதிய உலக சாதனை நேரம் 9.69 வினாடிகள்)
200 மீட்டர் தங்கம் ( புதிய உலக சாதனை நேரம் 19.30 வினாடிகள்)
4x100 மீட்டர் தங்கம் ( புதிய உலக சாதனை நேரம் 37.10 வினாடிகள்)

Berlin 2009 உலகத் திடல் தடப் போட்டி 
100 மீட்டர் தங்கம் ( புதிய உலக சாதனை நேரம் 9.58 வினாடிகள்)
200 மீட்டர் தங்கம் ( புதிய உலக சாதனை நேரம் 19.19 வினாடிகள்)

Daegu 2011 உலகத் திடல் தடப் போட்டி
4x100 மீட்டர் தங்கம் ( புதிய உலக சாதனை நேரம் 37.04 வினாடிகள்)

8 தங்கப் பதக்கங்களை மாலையாகச் சூடியுள்ள  Phelps

Michael Phelps

2004 Athens ஒலிம்பிக் :
6 தங்கம், 2 புதிய உலக சாதனைகள், 3 ஒலிம்பிக் சாதனைகள்

2008 Beijing ஒலிம்பிக் : 
8 தங்கம், 7 புதிய உலக சாதனை நேரம், 1 ஒலிம்பிக் சாதனை


பெய்ஜிங் ஒலிம்பிக்கைக் களைக்  கட்ட வைத்த இவ்விரு ஜாம்பவான்களும் அடுத்தச் சுற்றுக்கு தயாராகி விட்டனர். அண்மையப் போட்டிகளில் இருவருமே எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் யாருக்கும் தெரியும், உண்மை பலத்தை லண்டனில் வெளிப்படுத்துவதற்காக பதுங்குகிறார்கள் என்று. இம்முறை 8 தங்கப் பதக்கங்களை வெல்வது கடினமே என்பதை Phelps ஒப்புக் கொண்டு விடார். Bolt-ட்டோ இரு தங்கங்களுக்கு குறி வைத்திருக்கின்றார். ஆனால், அந்த அதிவேக ஓட்டக்காரர்  மேலுமிரு உலக சாதனை நேரங்களுடன் லண்டனை அதிரச் செய்வார் என்றே உலக மக்கள் எதிர்பார்க்கின்றனர். எது எப்படியோ இவ்விருவரால் லண்டன் ஒலிம்பிக் களைக்கட்ட போவது மட்டும் உறுதி!


No comments: