'விகாரமாக' பிறந்தது என் தவறா? |
மனிதநேயம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்பதை பறைசாற்றும் வகையில் பாகிஸ்தானில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. தனது மனைவி பத்து மாதம் சுமந்துப் பெற்ற குழந்தையை ஆனந்தப் பூரிப்புடன் கையிலெடுத்து கொஞ்ச வேண்டிய தந்தை, அதன் முகம் விகாரமாக இருப்பதாக எண்ணி கவலையுற்றானாம். குழந்தையின் முக அமைப்பு வழக்காமன குழந்தைகளை விட சற்று மாறுபட்டிருந்ததால், ஊர் கேலி செய்யும், தனக்கு அவமானம் வந்து விடுமென்று அந்த 'வெங்காயம்' புத்திசாலித்தனமாக யோசித்திருக்கின்றது. ஆனால், அடுத்து அவனெடுத்த முடிவு தான் கோரத்தின் உச்சம். மனைவிக்கு தெரியாமல் குழந்தையை எடுத்து கொண்டு அவன் போனது எங்கே தெரியுமா? பக்கத்தில் இருந்த சுடுகாட்டுக்கு! குழந்தையை உயிரோடு புதைத்த போது, அது வீறிட்டு அழ சுடுகாட்டில் காரியம் செய்யும் நபர் சுதாகரித்துக் கொண்டார். ஒரே ஓட்டத்தில் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவிக்க, அதிசமாக காவல் துறையும் ஆஜராக, தந்தை தற்போது காவலில். இதில் கூத்து என்னவென்றால், தனது தந்தையின் செயலில் அப்படி என்ன குறையை கண்டீர்கள் என்று கேட்கிறானாம், தந்தைக்கு உடந்தையாக இருந்த மூத்த மகன். இது எப்படி இருக்கு ?
1 comment:
அடப் பாவி....
Post a Comment