அடி வாங்கிய #TNB பணியாளரின் உள்ளக் குமுறல் அதுவாகத் தான் இருந்திருக்கும்!
பாவம்யா மனுஷன்... 😟😠
மீட்டர் கணக்கெழுதப் போனவருக்கா அந்த கதி?
சம்பவம் திரங்கானு, டுங்குனில் நடந்திருக்கிறது.
அக்கிழக்குக் கரை மாநிலத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது இது தான் முதன் முறை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
வீட்டொன்றுக்கு மின்சாரப் பயனீட்டு அளவைக் கணக்கெடுக்க போயிருக்கிறார் அனுவார்.
அழையா விருந்தாளியாக அங்கு வந்த ஆடவர், " எங்க வூட்டாண்ட ஏன்டா பில்லு எகிறிப் போய் கெடக்கு? இப்போவே எனக்கு உண்மை தெரிஞ்சாகனும், இல்ல இந்த இடத்தை விட்டு நகர முடியாது!" என கேட்டிருக்கிறார்.
பொது மக்களில் ஒருவர், பயனர் வேறு. ஆக கேள்விக் கேட்டவரிடம் பொறுமையாக தன்னால் முடிந்த அளவுக்கு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் அனுவார்.
ஆனால், வந்தவர், உண்மையிலேயே விளக்கம் கேட்க வந்தது போலில்லை. " நீ என்னடா சொல்றது, நான் என்னடா கேட்குறது?" என்ற ரீதியில் அனுவாரை அசால்டாக தள்ளி விட்டிருக்கிறார்.
நிலை தடுமாறி விழுந்த அனுவாருக்கு சிராய்ப்புக் காயம்.
இருந்தும் வந்தவர் அடங்கவில்லை; கீழே கிடந்த கட்டையை எடுத்து அனுவாரை சரமாரியாக 'வெளுத்து' விட்டார். 😲
நல்ல வேளையாக அச்சம்பவம் அங்கிருந்தவர்களின் கண்களில் பட, அவர்கள் பாய்ந்து வந்து தடுத்தனர்.
அனுவாருக்கு காலில் காயமும், முதுகுப் பகுதியில் வலியும் ஏற்பட, சிகிச்சைக்காக, அவரை டுங்குன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
சம்பவம் குறித்து காவல் துறையிலும் அவர் புகாரளித்திருக்கிறார்.
சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த TNB, " நீ உணர்ச்சிவசத்தை அடக்கு, கோபத்தை கட்டுப்படுத்து . அப்போ தான் உனக்கு நல்லது!"என அறிவுரை கூறியிருக்கிறது. அடுத்து சட்ட நடவடிக்கை தான் பாயும் என்றும் எச்சரித்தும் உள்ளது.
TNB பணியாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை தொடங்கியிருக்கிறது.
ஏன்பா, இதெல்லாம் அநியாயமில்ல? TNB மேல கோபம் இருந்தால் அதன் பணியாளர்கள் மீதா கை வைப்பீர்கள்? அவர்கள் என்ன செய்வார்கள்? உங்களைப் போல், என்னைப் போல் அவர்களும் தொழிலாளர்கள் தானே!
நிதானம் காப்போம்!
- நன்றி: பெர்னாமா

" மின் கட்டண உயர்வு தொடர்பில் சந்தேகம் இருப்பவர்கள், TNB கடைகளுக்குச் சென்று விளக்கம் பெறலாம். அதை விடுத்து, எங்கள் ஊழியர்கள் மீது கை வைக்கும் வேலையெல்லாம் வேண்டாம். அது குற்றச் செயலாகும்!"
ஏன்பா, இதெல்லாம் அநியாயமில்ல? TNB மேல கோபம் இருந்தால் அதன் பணியாளர்கள் மீதா கை வைப்பீர்கள்? அவர்கள் என்ன செய்வார்கள்? உங்களைப் போல், என்னைப் போல் அவர்களும் தொழிலாளர்கள் தானே!
நிதானம் காப்போம்!
- நன்றி: பெர்னாமா
No comments:
Post a Comment