அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Thursday, 9 July 2020

MCO Magic : எங்கள் வீட்டுத் தோட்டம், வெள்ளோட்டம் !

முந்தையை #MCOMagic தொடரில் ஓவியம் வரைந்து, கைவினைப் பொருட்களைச் செய்து புத்தாக்கச் சிந்தனையை வெளிப்படுத்திய இளையோரைக்  கண்டோம். 

அவர்களுக்கான வரவேற்பு கண்டு #வியன் உள்ளபடியே அகம் மகிழ்ந்தான். 

அடுத்தத் தொடரும் தயாராகத் தான் உள்ளது. ஆனால், ஒரு மாற்றத்திற்காக தோட்டம் போட்டவர்களை ஒரு வலம் வரலாமே என திடீர் யோசனை வந்தது. 

அதனை முகநூலில் பதிவிட்டது தான் தாமதம், சற்றும்  எதிர்பாராமல் வரவேற்பு தாரைத் தாரையாக வந்து விழுந்தது. இதனையும் ஒரே தொடராக முடித்துக் கொள்ளலாம் என்றால், முடியாது போலிருக்கிறது. 

ஆம், கண்டிப்பாக இன்னொரு தொடராவது வந்தே ஆகும். பரவாயில்லை, வியன் பசிக்கும் தீனி வேண்டும் அல்லவா? 😊 சரி வாருங்கள் நம் MCO தோட்டங்களைச் சுற்றிப் பார்ப்போம்....





சிலாங்கூர் கிள்ளானைச் சேர்ந்த மேனகா பாலு - குணசேகரன் தம்பதியர் வீட்டின் முன்புறத்தைத் தோட்டமாக்கி விட்டனர்.

ஏற்கனவே கொஞ்சம் ஆர்வம் இருந்திருக்கிறது இந்த ஆசிரியர் தம்பதியருக்கு.

ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமா? நேரம் வேண்டாமா? ( நல்ல கேள்வி)   

ஆக, இந்த MCO காலத்தில் வீட்டில் இருந்த போது அதனை நன்குப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனால், அதிலும் ஒரு சுவாரஷ்யமான பின்னணி உண்டு. 

இவ்வாண்டு அன்னையர் தினத்திற்கு பரிசாக என்ன வேண்டும் என அன்புக் கணவரும்  செல்லக் குழந்தைகளும் மேனகாவை கேட்டிருக்கின்றனர்.

இவரோ, 'அடிச்சான் பாரு அப்பாய்ன்பெண்ட் லெட்டரு' என்ற வடிவேலு வசனத்தைப் போல, உடனே Coffe Garden வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.

பரவாயில்லையே, ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்றெண்ணி கண்டு கொள்ளாமல் விடாமல், மனைவியின் ஆசையைப் பூர்த்திச் செய்ய மனிதர் மெனக்கெட்டிருக்கிறார் 
( great போங்க நீங்க! 👌).

நீங்கள் நினைப்பது போல் ஏதோ கடைகளில் புத்தம் புதிய சரக்குகளை வாங்கி இப்பூந்தோட்டம் அமைக்கப்படவில்லை. மாறாக பயன்படுத்திய, எளிமையானப் பொருட்களினால் ( ஆசிரியர் குடும்பம் அல்லவா..!)

பயன்படுத்தியக் கட்டையைக் கொண்டு வேலியை அமைத்து, garden நாற்காலியைக் கணவர் அமைத்திருக்கிறார். 

குழந்தைகள் பயன்படுத்தி ரிட்டையர் ஆன விளையாட்டுப் பொருட்கள், ஏற்கனவே இருந்த செடிகளின் விதைகளைக் கொண்டு மேலும் செடிகளை உருவாக்கியுள்ளார்கள்.



பூங்காவாக மாறியிருக்கும் வீட்டின் முற்றம்


டுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல், முறையாகத் திட்டமிட்டு வடிவமைக்க 2 வாரங்கள் வரை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு உழைப்பைப் போட்ட பிறகு மனதுக்கு அவ்வளவு நிறைவாக இருந்ததாக திருப்தியுடன் கூறினார் மேனகா.

இவர்களுக்கு நேரம் கிடைத்தால் கேமரன் சென்று  சுற்றி வருவார்களாம். பகாங் சொந்த ஊர் வேறு. 

கேட்கவா வேண்டும்? இயற்கை எழிலையும், பசுமையையும் கண்களுக்கு விருந்தாக்கி மகிழ்வர். 

அதே போன்றதொரு சூழ்நிலையில் தோட்டம் அமைத்தது கூடுதல் மகிழ்ச்சி.



இவர்கள் வீட்டில் பூந்தோட்டம் பூத்துக் குலுங்க, சும்மா இருப்பார்களா பக்கத்து விட்டுக் காரர்கள்? 

அவர்களும் ஆளாளுக்கு மண்வெட்டியும், செடியுமாக கிளம்பி விட்டார்கள் என சிரித்துக் கொண்டே சொல்கிறார் மேனகா.

சரி தோட்டம் போட்டீர்கள், செடி வளர்த்தீர்கள், அம்புட்டு தானே? 

இதிலென்ன இருக்கின்றது என கேட்பவர்களுக்கு.....



" குடும்ப ஒன்று கூடல் இடமாக அதனை மாற்றியிருக்கிறோம். 


எப்போது பார்த்தாலும் அதே தொலைக்காட்சி, வரவேற்பறை, உணவு மேசை என்ற சூழல் இல்லாமல், இது புதிய உற்சாகத்தைத் தருகிறது. 

ஒன்று கூடல் நடத்தலாம் என தேர்வெல்லாம் வழங்கப்படவில்லை. 

அறிவிக்கப்படாத சட்டமாகவே ஆகிப் போயிருக்கிறது. 

மாலை நேர தேநீர் விருந்தும் அங்கு தான்!" என முடித்தார் ஆசிரியை மேனகா.

வியன் வியந்தான் ! 




Ghayathri Rajahram


"எனக்கு இந்த கொச கொசனு எத பார்த்தாலும் பிடிக்காது. கண்ணு உருத்தும். அதான் பார்த்தேன், உடனே இறங்கிட்டேன்!" என தனது இரும்புப் பெண்மணி தாயாரைப் போன்றே எதையும் நேர்த்தியாக செய்யவல்ல காயத்ரி பட் பட்டென சொல்லி முடித்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் ஏறக்குறைய மையப்பகுதியில் உள்ள இவரது வீட்டின் முற்றத்தை, சத்தமே இல்லாமல் அடையாளமே தெரியாத அளவுக்கு சகோதரி மாற்றியிருக்கிறார்.

முன்னோட்டமாக சில புகைப்படங்களை முகநூலில் அவர் பதிவேற்றிய போது கூட, வியன் அறியவில்லை, ஒரு பூந்தோட்டமே தயாராகி வருகிறதென்பதை!

கேப்டன் ரொம்ப பிசி...... 😊

இது தெரியாமல் வீட்டுக்குப் போயிருந்தால், "எங்கடா இங்க இருந்த  காயத்ரி வீடு?" என்று திக்குத் தெரியாமல் நின்றிருப்பேன் போலும். 

பொழுதுப் போவது ஒரு பக்கம் இருக்க, மாற்றமாகவும் இருந்து விட்டு போகட்டுமே என்றார்.

புதியத் தோட்டத்தில் என்னவெல்லாம் நட்டு வைத்திருக்கிறார் என்று பார்த்தால் ரோஜா, துளசி, செம்பருத்தி என வரிசையாக வருகிறார்கள். 

என்னது, காயத்திரிக்கு மிகவும் பிடித்த ஆர்கிட் செடி இல்லாமல்  பூந்தோட்டமா? வாய்ப்பே இல்லீங்க என்கிறார் . ஆம், ஊதா நிற ஆர்கிட் பூத்துக் குலுங்கும் அந்த அழகு இருக்கிறதே, அதுவும் அந்தி சாயும் வேளையில்...

அடுத்தக்  கட்டமாக சூரியகாந்தி விதைகளை ஆர்டர் செய்திருக்கிறார்.

பூந்தோட்டம் போடுவதில் காயத்ரியின் வலது கரமாக வாண்டுகள் மூவரும்... 

படங்களைப் பார்த்தாலே தெரியும், சாயம் பூசுவதில் இருந்து, ஜாடிகளை அடுக்குவதில் இருந்து...அத்தனை ஆர்வம் பையன்களுக்கு.  

Kuttys in action:
வேலைனு வந்துட்டா நாங்க கத்தி ! 
பள்ளி விடுப்பு அவர்களுக்கும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. 

தோட்டமிடுதல், அலங்கரித்தல், செடி கொடிகள் வளர்த்தல் போன்றவற்றை அவர்களிட்டத்தில் பதிய வைக்க முடிந்திருக்கிறது.  

இனி பாருங்களேன் காயத்ரி, பூந்தோட்டத்தில் புதுசு புதுசாய் improvement-கள் வரும். அவற்றை நீங்கள் தேடி போக வேண்டாம். 

உங்களைத் தேடி வரும். உங்கள் செல்வங்கள் மூவரும் எப்படியெல்லாம் திறமையைக் காட்ட போகிறார்கள் என்று.... 




இதை எழுதி முடிக்கும் போது, எதையோ மறந்து விட்டாயே வியன் தன்னைத் தானே கேட்டுக்  கொண்டே இருந்தான்; பிடித்தும் விட்டான்.

இப்போது தான் ஞாபகம் வருகிறது. அன்று நர்சரியில் காருடன் பாட்டியார் Rasiah போஸ் கொடுத்தாரே! எல்லாம் இந்த பூந்தோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தானா?  😆

நர்சரி & பூச்செடிகள் தேர்விலேயே தெரிந்திருக்க வேண்டாமா, outcome எப்படி இருக்குமென்று?  தாறுமாறு, தக்காளி சோறு தான் 👌

அடுத்த முறை PJ பக்கம் வந்தால் பூந்தோட்டத்தை நிச்சயம் வியன் விசிட் அடிப்பான். 

மறக்கும் முன், தோட்டத்திற்கு பெயர் வைத்தீர்களா? சீக்கிரம் ஒரு போர்டை எடுத்து மாட்டுங்கள்..... 


தேவகி அம்மாள்  

" அம்மா always wanted to do planting.  சரி சும்மா இருக்கோமேனு இந்த MCO காலத்துல ஆரம்பிச்சது தான் இந்த தோட்டம் செடியெல்லாம் !" Puncak Alam -மைச் சேர்ந்த தேவகி அம்மாளின் மகன் Shiva ( அட, நம்ம சல்சா சிவாங்க) ஆரம்பித்தார். 

தோட்டம் போட வேண்டும். ஆனால் MCO-வால் வெளியில் போக முடியாதே. யோசித்திருக்கிறார் தேவகி அம்மாள். 

அதன் பலனாகத் தான் வீட்டில் சாப்பிட்ட பப்பாளி, தக்காளி, கத்திரிக்காய் ஆகியவற்றின் விதைகளை சமயலைறைக்குப் பின்னால் இருக்கும் மண்ணில் போட்டு வளர்த்திருக்கிறார்.

ஓரிரண்டு வாரங்களுக்குப் பிறகு விதைகள் ஓர் அளவுக்கு வளர்ந்ததும் அவற்றைக் கொண்டு போய் பக்கத்தில் உள்ள துண்டு காலி நிலத்தில் கொஞ்சம் கொஞ்சமா நட்டு வைத்திருக்கிறார். அப்படித் தான் அவரின் தோட்டம் 'வெள்ளோட்டம்' கண்டிருக்கிறது.

களத்தில் இறங்கி விட்டால், சும்மா இருந்து விடுவாரா என்ன? அம்மாவுக்கு இன்னொரு யோசனை வந்திருக்கிறது - கரும்புச் செடிகளையும் நட்டு வைத்தால் என்னவென்று!

"பொங்கலுக்கு கரும்புக் கிடப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. கிடைத்தாலும், தலை சுற்றும் அளவுக்கு விலை இருக்கும். அதற்கு பேசாமல் நாமே நட்டு வைத்தால் பொங்கலுக்கு தேடி அலைய வேண்டியதில்லையே !" என அன்பு மகனிடம் கூறியிருக்கிறார்.

தாய் சொல்லைத் தட்டாத மகனாய், நம்ம சிவா " விடுறா வண்டியை tebu தண்ணி விற்குற pakcik gerai-கு!' என போய் நின்று கையோடு கரும்பு நுனிகளை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்திருக்கிறார். 

மறுநாளே நுனிக் கரும்புகள் தோட்டத்தை அலங்கரித்து விட்டன. 
( சூப்பர் மா 👌) 

கரும்புச் சாற்றை நினைவுப்படுத்தி விட்டீர். இனி எழுத வருமா? tebu கடையை அல்லவா மனம் தேடும் ? 😜

சரி, கதைக்கு வருவோம். நடமாட்டக்  கட்டுப்பாட்டு ஆணை CMCO-வாக சற்று தளர்த்தப்பட்ட பிறகு Nursery- கள் எல்லாம் திறந்து விட்டதால் ஒரே குஷி. 

மாங்காய், சிக்கு, பலா செடிகளை வாங்கி வந்து கொடுத்திருக்கிறார். 

காவலன் Scone Boy 😚
தோட்ட வேலையில் அம்மா பிசியாகி விட, கூடவே ஒருவர் காவலுக்கு இருக்கிறார். கோடு போட்ட சட்டையோடு, அம்மாவுக்கு முன்பே அங்கு ஆஜராகி விடுகிறார் ஐயா. அம்மா மண்ணைக் கொத்த கொத்த இவர் அருகிலேயே அமர்ந்து company கொடுக்கிறார். Scone Boy  சமத்துக்குட்டிக்கும் பொழுதுப் போக வேண்டுமே! 

வீட்டின் முன்புறம் உள்ள செடிகளும் இவர் வாங்கிக் கொடுத்தவை தான்.

வாங்கிக் கொடுப்பதோடு சரியா? அப்படி குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் சிவாவை. 

மனிதர், களிமண்ணை எல்லாம் கொத்திக் கொடுத்திருக்கிறார். அம்மா உரம் போட்டு செடி வளர்த்திருக்கிறார்.

அம்மாவின் reaction எப்படி இருந்தது எனக் கேட்டதற்கு,

" ஆரம்பத்துல அவ்வளவு திருப்தினு சொல்லிட முடியாது. ஏன்னா, மழை குறைவாக பெய்ஞ்சதால செடிலாம் வெயில்ல காய்ஞ்சு போய் செத்துருச்சு. ஊதா பூவுலாம் செத்துருச்சு. உரம் வேற பத்தல.!" என சிவா கூறிய போது வியனுக்கும் சற்று சோர்வு தான்.

என்றாலும் விடவில்லையே அவர். 

Setia Alam-மில் மாட்டுப் பண்ணை ஒன்றை தேடிக் கண்டு பிடித்து போய், பெரிய மூட்டையில் சாணத்தை வாங்கி வந்து விட்டார். 

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மண்ணைக்  கொத்தி கொத்தி சாணத்தை  உரமாகப் போட்டு வந்திருக்கிறார். 

அதே சமயம், பூச்செடிகள் எல்லாம் காய்ந்து போகின்றனவே என யோசித்தவருக்கு, அப்போது தான் ஞாபகம் வந்திருக்கிறது. 

நெடுஞ்சாலைகளின் இரு மருங்கிலும் ஊதா வர்ண பூக்கள் இருக்குமே, அவை வெயிலை தாங்குமே என புரிந்தவர், nursery-யில் கேட்டு வாங்கி வந்திருக்கிறார்.

இப்போது எல்லாம் நன்றாக  வளர்ந்து வருகின்றன. அதைப்  பார்த்து அம்மாவுக்கும் மகிழ்ச்சி. அம்மா முகத்தில் புன்னகைக் கண்டு மகனாக எனக்கும் மன நிறைவு என சிவா கூறும் போது நமக்கும் தெரிகிறது அவரின் உள்ளுணர்வு.  


நிச்சயம் இதோடு நின்று விட மாட்டார். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கின்றனவாம் தேவகி அம்மாளுக்கு. 

பரவாயில்லை, ஏதோ முடிந்த வரை சிறு பூந்தோட்டமோ பழத்தோட்டமோ, உருவாக்கி வையுங்கள். இயற்கையும் விசுவாக இருப்பான் அல்லவா!,  

வியன் அந்தப் பக்கமாக வந்தால், 2 மாங்காய் பார்சல் தம்பி...



"எனக்கு இயல்பாகவே பசுமைனாலோ, காய்கறி நடனும்னாலோ ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா, சொந்தத் தொழில் செய்யுறனால நினைச்சதை செய்ய முடியல. 

இந்த MCO ஆரம்பமான நேரத்துல தான், சரி நாமும்  கொஞ்சம் காய்கறி நடுவோம்னு யோசிச்சோம். 


எங்களால வெளியே போய் விதைகளை வாங்க முடியல. நானும் எங்க வீட்டுக்காரரும் என்ன செஞ்சோம்னா..." என்று உற்சாகமாக பேசத் தொடங்கினார் நெகிரி செம்பிலான், போர்டிக்சனைச் சேர்ந்த ஜூலி

"சீரியல்ல, கட் பண்ணிட்டு தொடரும்னு போட்ட மாதிரி ஏன் வியன் நடுவுல நிறுத்துனீங்க?" னு கேட்குறீங்களா? 

ஒரு 'கிக்கு' வேண்டும் அல்லவா.... 😅

சரி, ஜூலியும் கணவரும் என்ன செய்தார்கள் என்றால் வீட்டில் இருந்த சின்ன இஞ்சித் துண்டுகளை வெட்டி  எடுத்துக் கொண்டு, பூண்டு, மல்லி, புதினா, கத்தரி விதைகள், தக்காளி என எல்லாவற்றையும் சிறு சிறு ஜாடி தொட்டில்களிலும், பெரிய UPVC பைப்புகளினுள்ளும் நட ஆரம்பித்திருக்கிறார்கள். 

" இதனோட வளர்ச்சியைப் பார்க்கறப்போ, எங்களையே அறியாம ஆர்வமும் அதிகரிச்சிடுச்சு. காலையிலேயே சீக்கிரமா எழுந்திரிச்சு, அந்த சின்ன தோட்டத்துக்கு போய் ஏதாச்சும் செஞ்சிக்கிட்டு இருப்போம்.  மாலையிலேயும் தவறாம அங்க போயிருவோம். எங்க நேரத்தை அங்க தான் அதிகமாவும் செலவிட்டோம், செலவிடுறோம் !" என்று முடிக்கும் போது எவ்வளவு திருப்தி ஜூலியின் குரலில். 

MCO பொழுதுப் போக்காக ஆரம்பித்தாலும், பாருங்களேன், இத்தம்பதியரின் தோட்டத்தில் காய்கறிகள் பூத்துக் குலுங்கத் தொடங்கி விட்டன. வெள்ளை முள்ளங்கி என்ன, Salad என்ன, குடை மிளகாய் என்ன, கடுகுக் கீரை வகைகள் என்ன.... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!

சின்னதாய் வைத்திருந்தாலும், வகை வகையாய் காய்கறிகள் வைத்திருப்பதாகவே இவர் உணருகிறார். 

இது வரைக்கும் சமையலுக்கு வெள்ளை முள்ளங்கி, கீரை வகைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.


இன்னும் நிறைய ரோஜா செடிகளை வாங்கத் தொடங்கியிருப்பதுடன், அதிகமான பூச்செடிகளை வளர்க்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

" என்னோட தோட்டம் சின்ன தோட்டமா இருந்தாலும் நிறைய கத்துக்கிட்டோம். இந்த MCO குறிப்பாக எனக்கு நிறைய கத்து கொடுத்துருக்கு. என்னோட வேலை stress எல்லாத்தையும் மறந்து இந்த செடிகளோடு இருக்கிறத ரொம்ப ரொம்ப சந்தோஷமாக நினைக்கிறேன். கடவுளுக்கு நன்றி சொல்றேன்!" என்று கூறி முடித்த போது ஜூலியின் குரலில் எதையோ சாதித்த நிறைவு வெளிப்பட்டது.

இருக்காதா, பின்னே? பசுமை விரும்பிக்கு, பச்சைக் காய்கறிகளைப் பயிரிட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்து, அவற்றுடன் பொழுதுப் போக்குவது எவ்வளவு மன நிறைவை, மன நிம்மதியைத் தருமென்று! 

சபாஷ் ஜூலி மற்றும் கணவர்! 

இன்னும் நிறைய காய்கறிகளை, வகை வகையாய் நட்டு, வீட்டு உபயோகத்திற்கு போக, மீதமிருப்பதை உபரி சுற்றத்தாருக்கோ அல்லது உபரி வருமானமாகவோ கூட ஆக்கிக் கொள்ளலாம். 




சொந்தமாகப் பயிரிட்ட காய்கறிகளை சமைத்து சாப்பிடும் போது அதுவோர் அலாதி திருப்தி தான். 

முடிக்கும் முன்பாக, உங்களின் அழகிய தமிழ் உச்சரிப்புக்கு வியன் வணங்குகிறான். 

வாழ்த்துகள்! 

👐



கவி அமுதா

சிரியையான கவி அமுதா, வியனுக்கு வேலையே வைக்கவில்லை, போங்கள்! எல்லாவற்றையும் அவரே பக்காவாக கொடுத்து விட்டார். 

திருமணம் முடிந்து ஆறு நாட்களில் MCO.. கணவருடன் தனிக் குடித்தனம். புதிய வீடு..பானை பண்டங்கள், கட்டில் மெத்தை, சோபா தவிர வீட்டில் ஒன்றும் இல்லை. அத்தியாவசிய பொருள்கள் மட்டும் வாங்கிவிட்டு, ஊரடங்கின்போது வீட்டில் தஞ்சம் அடைந்தோம்." 😢

முதல் இரு வாரங்கள் சமையலிலும் ( கணவர் சுத்த சைவம்) சமையல் கற்றுக் கொள்வதிலும் சென்றது.

அடுத்தடுத்த வாரங்களில் வீட்டில் சில மாற்றங்கள் செய்யலாம் என்றெண்ணி online shopping செய்ய துவங்கினேன்.


பொதுவாக என்னுடைய பொழுதுபோக்கு வாசிப்பதும் , செடி நடுவதும் தான்.


அப்பொழுது தான் தெரிந்தது, shoppe இல் விதை முதல் மண் வரை வாங்கலாம் என்று. அனைத்தும் வாங்கி, from scratch தோட்டம் உருவாக்கினேன்.







அடுத்து அடுக்கினார் பாருங்கள்....

பருப்புக்கீரை, வெண்டைக்காய், சுரைக்காய், கடுகுக்கீரை, குப்பைமேணி, பசலைக்கீரை, துளசி, மல்லிகைப்பூ, ஜம்பு air, கற்பூரவள்ளி, மஞ்சள், புதினா,மிளகாய், ரோஜாக்கள் .......


போதும் போதும்... ரொம்ப length-த்தா இல்ல போகுது என்று சொல்லும் அளவுக்கு பால்கனியில் ஒரு மினி காய்கறி தோட்டத்தையே உருவாக்கியிருக்கின்றனர்.


காலையில் கண் விழித்ததும் முதல் வேலை இதுதான்.


கணவரும் நானும் சேர்ந்து போட்ட தோட்டம் இந்த MCO காலத்தின் பசுமை நினைவுகளாக எப்போதும் நீடிக்கும் என்கிறார் கவி.






பார்த்தீர்களா, பால்கனியில் கனி காய்க்கிறது

"நாங்கள் அடுக்குமாடி வீட்டில் இருக்கிறோம், இதில் எங்கே போய் தோட்டம் போடுவது, செடி வளர்ப்பது?" என்று காரணம் கூறுபவர்களுக்கு மத்தியில், மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை நிரூபித்திருக்கின்றனர் கவி அமுதாவும் கணவரும்.

சபாஷ் கவி! கண்டிப்பாக பள்ளி திறந்ததும் ஒரு முறை மாணவர்களையும் அழைத்து வந்து காட்டுங்கள். அவர்களுக்கும் ஆர்வம் வரும் அல்லவா? 

கல்வி சுற்றுலா என்றால் அருங்காட்சியகத்திற்கும் மிருகக்காட்சி சாலைக்கும் மட்டும் தான் போக வேண்டுமா என்ன? 

இது கூட மிகச் சிறந்த கல்வி சுற்றுலாவாக மாணவர்களுக்கு அமையும். 

வாழ்த்துகள்! 



MCO கட்டுரைத் தொடரில் #வியன் முழுமையாகத் திருப்தி அடைந்தது இதுவே முதன் முறை! என்னமோ போங்கள், தோட்டம் போட்டு அனைவரும் வியனை 'கவிழ்த்து' விட்டீர்கள்.

எங்குப் பார்த்தாலும் பச்சை பசேலென பசுமை! பசுமை விரும்பிகள் வெளியில் சென்று தான் அதனை அனுபவிக்க வேண்டுமென்பதில்லை. 

நினைத்தால், வீட்டில் இருந்தே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.

மன நிறைவுடன் வியன் தலை வணங்குகிறான்!

#MCO #CMCO #RMCO #PKP #PKPB #PKPP #Covid19 #Corona #CoronaVirus #Lockdown #Quarantine #QurantineLife #Malaysia #மலேசியா #தோட்டம் #பசுமை #பச்சை