"அம்னோ மிகப்
பெரிய அரசியல் முடிவை எடுக்கும்!"
நஜீப்க்கு எதிராக
தீர்ப்பு வந்த கையோடு அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமிடி நீதிமன்ற வளாகத்தில் பேசிய வார்த்தை
அது.
ஓரளவு ஊகிக்க முடிந்தாலும்
அது என்னவாக இருக்கும் என மண்டையப் போட்டு குழப்பிக் கொள்ளாத குறைதான் பலருக்கு.
அந்தப் பரபரப்பே
அடங்கவில்லை, இன்று மீண்டுமொரு பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார் அந்த முன்னாள் துணைப்
பிரதமர்.
" வாழ்க்கையைப்
பகிர்ந்துக் கொள்ளவே உண்மை மனப்பான்மையும் நேர்மையும் முக்கியக் கோட்பாடாக உள்ள பட்சத்தில்,
அதிகாரப் பகிர்வுக்கு சொல்லவா வேண்டும்?"
" அவ்விரு
குணங்களும் புறக்கணிக்கப்படும் போது , எந்தவொரு பகிர்வும் மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்!"
இதுதான் அவர் பதிவேற்றிய Status-சின் மொழியாக்கம்.
அந்த பாகான் டத்தோ
MP, நீதிமன்ற தீர்ப்புடன்
தான் முடிச்சுப் போடுகிறார் என்பதை அரசியல் நோக்கர்கள் அப்போதே புரிந்துக் கொண்டிருப்பர்.
எல்லாருக்கும்
புரியும் படி சொன்னால்....
"Perikatan
Nasional கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுகிறோம்!" என்பதை தான் சுற்றி வளைத்தும்,
வளைக்காமலும் சொல்லியிருக்கிறார்.
உண்மையிலேயே அவர்
அந்த அர்த்தத்தில் தான் சொன்னார் என்றால்....
இப்பொழுது அப்படி
என்ன நடந்து விட்டது? அப்படியொரு முடிவை எடுக்க?
அரசாங்கத்தில்
இரண்டாவது மிகப் பெரிய பதவியை வகித்தவர் என்ற முறையில் அவரிடம் இதை வியன் எதிர்பார்க்கவில்லை.
குறைந்தபட்சம் பொது வெளியிலாவது எதிர்பார்க்கவில்லை.
இப்போது அவரின்
பேச்சை வைத்து பெரிய பட்டிமன்றமே நடந்துக் கொண்டிருக்கிறது.
"இப்படி இருக்குமோ?
அப்படி இருக்குமோ? மிரட்டலோ? உண்மையிலேயே வெளியாகிருவாங்களோ? ஆட்சி கவுந்துருமோ?"....
என !
ஆட்சியை அமைத்தது
நீங்கள்; MP-களின் எண்ணிக்கை அடிப்படையில் தனிப் பெரும் கட்சியும் நீங்கள்; அதற்கெல்லாம்
மேலாக, நாட்டிலேயே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்திருக்கும் அசுர பலம்
பெற்ற கட்சி நீங்கள்....
நிலைமை இவ்வாறிருக்க,
எதிர்பார்த்தது நடக்கவில்லை, அதனால் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வோம் என்ற அர்த்தம்
வரும்படியாக பேசுவது எவ்வகையில் நியாயம்? நியாயம் என்பதை விட, வீழ்ச்சியில் இருந்து
மீண்டு வரும் அல்லது மீண்டு வரத் துடிக்கும் உங்கள் கட்சியின் தோற்றத்திற்கு அது உகந்ததா?
உங்களின் உற்றத்
தோழரும் நிரந்தரத் தலைவருமான முன்னவருக்கு உயர் நீதிமன்றம் தான் தீர்ப்பு வழங்கியிருக்கிறது;
இதுவே உலகின் கடைசி நாள் அல்ல, இடிந்து போய் விழ!
இன்னும் மேல்முறையீட்டு
நீதிமன்றம், கூட்டரசு நீதிமன்றம் என வாய்ப்புகள் இருக்கின்றன.
யாருக்குத் தெரியும்,
அங்கே அவர் ஜெயிக்கலாம் அல்லவா?
இன்றைய உங்கள்
முகநூல் பதிவேற்றம் பல்வேறு ஆருடங்களுக்கு வித்திட்டிருக்கிறது. உங்கள் எதிர்ப்பாளர்களுக்கு
அல்வாவே கிடைத்து விட்டது.
நீதித் துறையில்
தலையீடா? என்ற ரீதியில் அல்லவா போகும் விவாதம்.
அதுவும் இவ்வளவு தைரியமாக ஒருவர் வெளியே
சொல்கிறார் என்றால், முன்பு ஆட்சியில் இருந்த போது இப்படித் தான் நடந்து வந்ததா என்ற
கேள்வி எழாதா?
ஒருவேளை உண்மையிலேயே
" நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக இல்லை; அதனால் வெளியேறுகிறோம்!" என்றறிவித்து
விட்டு வெளியே போனீர்கள் என்று வைத்துக் கொள்வோம், உங்கள் அரசியல் வாழ்வில் நீங்கள்
சந்திக்கும் மிகப் பெரிய சரிவாக அது இருக்கும்.....
தேசிய முன்னணி MP-களுடன் இன்று அவசர சந்திப்பு நடத்திய ஜாஹிட் |
இப்படியெல்லாம் தான் #வியன் கேட்பான், கேட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்..... 😜😜😜
அதற்கு எந்த அவசியமும் இல்லாமல் செய்து விட்டார் ஜாஹிட்.
" நீதிமன்றத் தீர்ப்பைக் கையாள்வதில் UMNO/BN மிகச் சிறந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும். அதே சமயம் BN, Muafakat Nasional, Perikatan Nasional கூட்டணிக் கட்சிகளுடனான சகோதரத்துவம் தொடர்ந்து பேணப்படும். அதிகாரப் பகிர்விலும் நட்பிலும் நேர்மை, உண்மை மனப்பான்மை தொடர்ந்து முக்கியக் கோட்பாக இருக்கும்; கட்டிக் காக்கப்படும்"
என்னடா இப்படி புஸ்வானம் ஆகிடுச்சேனு பார்க்குறேலே? பின்னே?
எல்லாம் அரசியல் சால்சால்பு தான், மக்களே!
பக்காத்தான் தலைவர்களுக்கே தெரியாமல் பிரதமர் பதவியைத் தூக்கி போட்டு விட்டு போக இவர்கள் என்ன மகா தீரரா?
பதவிக்கு வந்து இப்போது தான் ஐந்தாவது மாதத்தையே தொடப் போகிறார்கள். இதில், முதலிரண்டு மாதங்களுக்கு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு சம்பளம் இல்லை.... ஆக......
#வியன் சொல்ல வருவது என்னவென்றால், உள்ளிருப்பவர்கள் ஒன்றும் எதுவும் அறியாதவர்கள் அல்லர்.
வெளியில் தான் ஏதோ, அவரவர் கட்சித் தொண்டர்களுக்கு அவ்வப்போது இப்படி எதையாவது பேசி வைத்து விட்டுப் போவார்கள்.
மீசையை முறுக்கிக் கொண்டு வெளியே போவதை விட, ஆட்சியில் இருப்பதே இப்போதைக்கு உத்தமம்.
புரிஞ்சவன் பிஸ்தா !
#வியன் 👋
1 comment:
Hahahahahahahahahahaha...arumayana pathivu saarr... Arasiyalil nirantara nanbanum illai nirantara ethiruyum illai.
Post a Comment