அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Saturday, 11 July 2020

நாங்களும் சமைப்போம்ல !

"என்னமோ, சமையல் கட்டே உங்களுக்குத் தான் சொந்தம் மாதிரி பேசாதீங்க! இங்க யாருக்கும் பட்டா எழுதிக் கொடுக்கல. நாங்களும் சமைப்போம், சமைச்சு சாப்பிடுவோம், முகநூல்ல post-டும் பண்ணுவோம்!"

என்று சொல்லாதக் குறையாக நம் ஆண் சிங்கங்களும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் தங்களுக்கும் சமைக்க வரும் என்பதை நன்றாகவே நிரூபித்திருக்கிறார்கள்.

என்ன #வியன், பெண்களை மட்டும் தான் highlight செய்வீர்களா? எங்களைக் கண்களுக்குத் தெரியவில்லையா என சகோதரர்கள் கேட்டு விடக் கூடாது அல்லவா! 

அதனால் தான் ' நாங்களும் சமைப்போம்ல! என்ற தொடரில் சந்திக்கிறான் வியன்.




அந்த சமையல் சக்ரவர்த்திகளைக் காண்போமா...


அறிவானந்தன் மாரிமுத்து


மலேசிய இந்தியர்கள் குறிப்பாக இளைஞர்களின் வாழ்வில் முன்னேற்றமடைவதை கண்டு விட துடிக்கும் சமூக ஆர்வலர்.

அவரின் துணிச்சலைக் கண்டு வியந்தவன் வியன்... 

சமையலிலும் ஆர்வலர் என்பதை இந்த MCO காலத்தில் தான் வியன் அறிந்தான்.

ஆனால், "சும்மா இல்லீங்கோ! 

இவர் "வேற லெவல் பிரபலம்!" என்று சொல்லும் அளவுக்கு முகநூலில் நம்மவர் மட்டுமின்றி மற்ற இன சகோதரர்கள் மத்தியிலும் பிரபலமடைந்து விட்டார்.

எப்படி என்று  கேட்கிறீர்களா?

Suami Masak Apa Hari Ini ? என்றொரு முகநூல பக்கம் இந்த MCO காலத்தில் பிரபலமாகியது.

வீட்டில் இருக்கும் கணவன்மார்கள் தங்கள் கையால் என்ன சமைத்தார்கள் என்பதை படங்களுடன் பதிவேற்றி பகிர்ந்துக் கொள்ளும் தளமாகியிருந்தது.

அதில் புகுந்த நாள் முதல் அறிவானந்தனை அறியாதோர் இல்லை என்றே சொல்லி விடும்  அளவுக்கு, மனிதர் அவ்வளவு நேர்த்தியாக சமையலைக் கற்றுக்  கொடுத்து விட்டார்.

ஏதோ சமைத்துப் படங்களைப்  பதிவேற்றினோம், Likes-சுகளை வாங்கினோம் என்று அவர் இருந்து விடவில்லை.



மதுரைக்  கோழிக்  கறி
நமது சமையல்களை சமைக்கும் விதத்தை தனித்தனி படங்களாக , தெளிவாக , சுலபமான குறிப்புகளோடு தந்து அசத்தியிருக்கிறார்.

வெங்காயம் எவ்வளவு, எண்ணெய் எத்தனைக் கரண்டி, எவ்வளவு நேரத்திற்கு வேக விட வேண்டும் என்று படிப்படியாகப் பதிவிட்டிருக்கிறார்.

அவரின் இந்த அணுகுமுறைக்கு அந்தப் பக்கத்தில் உள்ள சகோதரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.

வியன் நேரம் கிடைக்கும் போது அவரின்பதிவுகளுக்குக் கீழ் வரும் கருத்துகளைப் பார்த்து வியந்துப் போனான்.



அவற்றில் சில உங்கள் பார்வைக்காக..


வெற்று விட்டார் அல்லவா? 

இவர் சமைத்தவற்றில் வெகு பிரபலமானதில் முக்கியமானவை மதுரை கோழிக் கறி , கோழி வறுவல், காரைக்குடி செட்டிநாடு மீன் கறி, கருவாட்டுக் குழம்பு!


கருவாட்டுக் குழம்பு

கோழி வறுவல்
Ikan Siakap Goreng 3 Rasa

உணகமொன்றில் makcik ஒருவர் கற்றுக்  கொடுத்ததில், You Tube பார்த்து இவரே சில மாற்றங்கள் செய்து சமைத்திருக்கிறார்.



இனி கடைக்குப் போகப் போவதில்லை, வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட போவதாகப் பதிவேற்றியிருக்கிறார். 

"இவ்வளவு இலகுவான செய்முறைதான் என தெரிந்திருந்தால் நான் எப்போதோ Chef ஆகியிருப்பேனே!" என்கிறார் சிரித்துக் கொண்டே....

வாய்க்கு ருசியாக சமைக்கும் அதே வேளை, ஆரோக்கியத்தையும்  மனிதர் மறந்து விடவில்லை.

முதன் முறையாக வீட்டில் சொந்தமாக தானே Noodles தயாரித்திருக்கிறார். 




நால்வர் சாப்பிடும்  அளவுக்கு பசியாறைக்கு அவர் தயார் செய்த மீ, மொத்தமாக 3 ரிங்கிட்டுக்கும் குறைவான செலவையே உட்படுத்தியதாகக் கூறியவர், பணத்தைச் சேமியுங்கள், ஆரோக்கியமாக இருங்கள் என்கிறார்.

சீக்கிரமே கடையைத் திறங்கப்பா..... 

வியன் வந்து ஒரு வெட்டு வெட்டுறேன்! 😛



கேசவன் ஏரா

பிரபல நடன இயக்குநர் Kesavan Era-வைத் தெரியாதவர்கள் இருக்க முடியுமா? 

தொலைக்காட்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தனது அசுர வேக நடனத்தால் பிரித்தெடுப்பவர்.

MCO காலத்தில் வீட்டில் இருந்து வேறென்ன  செய்திருப்பார், நடமாடுவதைத் தவிர? என்று குறைத்து மதிப்பிட்டால், அது பெரியத் தவறுங்கோ! 

ஆம், இனி இவரை Chef கேசவன்' என்று தைரியமாக அழைக்கலாம்! ( கொஞ்சம் ஓவரா போய்ட்டேனோ? போவோம்....யாரு கேட்கப் போறா?) :-)

நான் சமைக்கிறேன் பார்க்குறியா, பார்க்குறியா, பார்க்குறியா என சிங்கம் சூர்யா ரேஞ்சுக்கு மனிதர் இந்த MCO காலத்தில் பானை பானையாக சமைத்துத் தள்ளியிருக்கிறார்.

படங்களைப் பார்த்தாலே தெரிகிறது, எல்லாமும் சூப்பர் ரகம் என்று!

Mee Goreng-கில் தொடங்கி Yong Tau Foo, Chicken Chop, Mee Kari, Kuey Teow Goreng, Burger ( பர்கர்னா வெறும்  பர்கர் இல்ல சாமி, ஒரு பர்கர் செட்டே)

சீனக் கடைகளுக்குச் சென்றால் நாம் வழக்கமாக ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுகளையும் இவர் ரெடி பண்ணியிருக்கிறார். 

Sweet Sour Fish, Mix Vege, Fried Egg, Chili Chicken என மேசையே களைக்  கட்டி விட்டது.

Chinese Pot Rice (அதாங்க நம்ம சட்டி சோறு), அதனையும் K7 விட்டு வைக்கவில்லை என்றால் பாருங்களேன்.

ருசி மிகுதியால் போடுங்கோ போடுங்கோ என வீட்டில் கேட்க, இவர் 4 ரவுண்டு சமைத்து விட்டார்.

ஐந்தாவது  முறையும் சமைத்திருக்கிறார், ஆனால் அந்த மணல் சட்டியும்  பாவம், என்ன தான் செய்யும், உடைந்தே போய் விட்டது. ( crack விட்டுருச்சு போப்பா...)

வாழை இலையில், மசாலா தூவப்பட்டு வாட்டி எடுக்கப்பட்ட அந்த Ikan Bakar-ரை பாருங்கள். "ஏன்டா ஏன், இப்படி வகை வகையா செஞ்சு படுத்துற?" என்று நாம் கேட்பது போலில்லை? :-)

சரி சமையல் கட்டு பக்கம் டேரா போட்ட வரலாறை கேட்டால்....

" அதை ஏன் கேட்குறீங்க? ஒரு நாளா ரெண்டு நாளா, மாசம் full-வாவே நான் தான் சமைச்சேன். 3 மாசம் வூட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருந்தோம்ல, என்ன பண்றதுனு தெரியல, அதான் இறங்கிட்டேன்!" என்றார் சிரித்துக் கொண்டே.

Chinese Pot Rice ( சீன சட்டி சோறு )
" பார்த்துங்கோங்க. கலைக் கற்றுக் கொடுத்தப்  பாடம். 3 மாசமா வீட்டுல சும்மா உட்கார்ந்து என்னா பண்றதுனு தெரியல. சரி இதையாச்சும் செய்வோம்னு... நாம தான் சமையலே!".

சரி என்னவெல்லாம் சமைத்தீர்கள் என்று மீண்டும் அதே கேள்வியை வியன் போட,

" என்ன சாரே இப்டி கேட்டுட்ட, western, thai, chinese எல்லாமே masuk தான்!" 😂 

பார்த்தேன் பார்த்தேன்...படங்களை!

சரி வூட்ல என்ன சொன்னாங்கப்பா? வெளிய ஆர்டர் எதுவும்?  

"  எல்லாமே வீட்டுல சும்மா செஞ்சது தான் சார். நாம சமைக்கிற சாப்பாட்டை வீட்ல சாப்பிடுறதே பெரிய விஷயம் ( 6-7 ஜீவன் நம்பி சாப்பிடுறாங்களே) , இதுல வெளிய கொடுத்து யாருக்கும் ஏதாச்சும் ஆச்சுனா, யாரு கம்பி எண்ணுறது?" என்ற போது அவருக்கே சிரிப்புத் தாங்கவில்லை  (நல்ல கூத்துக் கார ஆளையா நீ)


Western and Chinese Mix 

Ikan Bakar, Burger Set முதல் முட்டைப் பணியாரம் வரை

Mee Kari, Mee Goreng Mamak முதல் Kebab வரை 

மனைவி நதியாவுடன்
எப்படியா இவ்வளவும்? அப்டினு கேட்டா..... 

"YouTube-ல பார்த்து பார்த்து கொஞ்சம்  கொஞ்சமா கத்துகிட்டேன் ஜி தற்போது சிலாங்கூர் ஷா ஆலாமில் வசிக்கும் K7 சொன்னார். 

"ஒன்னொன்னா try பண்ணது தான் சாரே!. மச்சான் ஒருத்தன் இருக்காரு.  ஹாட்டல், food beverage தான் செய்யுறாரு. ரெண்டு பேரும் சுப்போர் பண்ணி செஞ்சோம்" என்றார். 

இந்த 'எலும்புப் பையப் புள்ள'க்குள்ளேயும் எத்தனைத் திறமைகள் இருந்திருக்கின்றன, பாருங்களேன். 

பேச்சுக் கொடுத்ததில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. 

வியன் உண்மையிலேயே வியந்து தான் போனான். 


அதை இன்னொரு முறை சிறப்பு நேர்காணலாகவே செய்து வெளியிடுவான் வியன்.

கேசவா, சீக்கிரமே நான் வந்து பேசவா? 💗

  
விஜயன் கிருஷ்ணன்

ஜொகூர், ச்சாஆ சிற்றூரில் வசிக்கும் விஜயன் வெறும்  பொழுது போக்காக சமைக்கலாம் என தொடங்கியிருக்கிறார்.

அம்மாவிடம் இருந்து கொஞ்சமும், You Tube வாயிலாக கொஞ்சமும் சமையல்  கற்றுக் கொண்டிருக்கிறார். 


கணவர் சமைத்ததில் மனைவு ரேவதி செங்கேனிக்கு மிகவும்  பிடித்தவை கோழி வகையும், Chicken Rice-சும் என்கிறார்.

பிரியாணியை மறந்து விட்டேன். அதையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் என ரேவதி தொடந்தார்.

கணவர் சமைப்பதைப் பார்த்து ரேவதியுன் குடும்பத்தாரே மிரண்டு போயிருக்கின்றனர்.

சுருளப்பம் , Mee Hoon Goreng, Nasi Ayam, கோழி சம்பல், Udang சம்பல், பிரியாணி என , வாழை இலையில் full meal என ஒரு ரவுண்டு வந்து விட்டார்.

பொறவு, ருசியைப் பாராட்டாமல் இருந்திருப்பார்களா என்ன? 

மருமகனுக்கு ஒரே பாராட்டு மழை தான்.

மனைவிக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்றால் பாருங்களேன், நண்பனின் கைத் திறமையை!

ஆனால், சமையல்  கட்டுக்குள் நுழைவதில் என் நண்பனுக்குள்ளும் தொடக்கத்தில் சற்று தயக்கம் இருக்கவே செய்திருக்கிறது. 




( அட என்னப்பா நீ, எத்தனை hotel-களில் தலைமைச் சமையல்காரர்களாக ஆண்கள் கபடி விளையாடுகிறார்கள், நீ போய் தயங்கிக்கிட்டு, சும்மா அசத்துவியா பேசாம!)



வீட்டுக்கு வருபவர்களும் விஷயம் அறிந்து "பரவாயில்லையே, உங்க  மருமகன் நல்லா சமைக்கிறாரே, ரேகா கொடுத்து வெச்சிருக்கே!" என பாராட்டியும்  செல்கின்றனர்.

அண்ணன் கை வசம் Mee Hoon தொடங்கி சீன உணவு  வகைகள், மலாய்காரரர்களின் உணவுகள் வரை சக்கைப் போடு போடுகிறார். 

ஆனால், விருப்பம் என்று வந்து விட்டால் தமிழர்களின் உணவு வகைகள் தானாம்ல.

மன்னிதருக்குள் ஏகப்பட்ட திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. 

அவற்றில் ஒன்று தான் இந்த MCO காலத்தில் சமையல் வடிவில் வந்திருக்கின்றது என பெருமிடத்துடன் முடித்தார் ரேவதி.

விஜயன், அடுத்த  முறை ச்சாஆவுக்கு வியன் விஜயம் செய்யும் போது சாப்பாடு ரெடியாக இருக்க வேண்டும்! டீலா நோ டீலா ?



பரமசிவன் ரங்கன்


கெடா, சுங்கப் பட்டாணியைச் சேர்ந்த ஆசிரியர் சிவன், சமையலில் சூரப்புலி என்பதை வியன் ஆரம்பம் தொட்டே அறிவான். 

கோழி சம்பல் with  பயிற்றங்காய் பால் பச்சடி இவ சமைத்து வியன் சாப்பிட்டதில் favorite.

திருமணமாகி குடும்பம் குழந்தை என செட்டிலானவருக்கு, இந்த MCO காலம் மீண்டும் சமையல் கட்டிலை அவருக்கு நினைவுப்படுத்திச் சென்றிருக்கிறது.

மாநிலம் கடக்க முடியாத சூழ்நிலை நிலவிய போது, மலாக்காவில் மாமனார் வீட்டில் இருந்த சமயம், ஏறக்குறைய தினமும் விதவிதமாய் சமைத்துத் தள்ளியிருக்கிறார்.

குறிப்பாக மாலை நேர தேநீருக்கு இவர் கைப்பட செய்யாத பலகாரம் மேசையில் இல்லையென்றால், அது ஆச்சரியம் தான்!

Pan Cake-கில் இருந்து Pizza வரைப் பயணம்....










மனைவி ஷாலினியும் ஆசிரியை. அவரும் சமையலில் லேசுபட்டவர் அல்ல.  அவரின் favorite, எப்போதுமே மீன் Sweet Sour தான்.

அவரும் கணவருடன் சேர்ந்து உணவுகளோடு கேக்கெல்லாமும் செய்திருக்கிறார்.

பள்ளி தொடங்கி விட்டதால், இருவரும் சமைப்பதை நிறுத்தி விடாதீர்கள்.

வாரக்  கடைசிகளிலாவது கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு சமைத்துப் போடுங்கள்.

சீக்கிரமே SP விஜயம் செய்வான் வியன்!



Shanker Eelango 

கெடா, Gurun -னைச் சேர்ந்த ஷங்கர், சிங்கப்பூரில் வேலை செய்து  வருகிறார். 

இங்கு நமக்கு MCO என்பது  போல சிங்கப்பூரில் 'circuit breaker'  காலத்தில் இவர் சமைத்த உணவுகளைப் புகைப்படங்களை,  இவரின் facebook story -களில் பார்த்து வியந்து போய் வியனே விசிட் அடித்தான்.







ஷப்பா.... இப்போவே கண்ணைக் கட்டுதே! 

அதிலும் கேசரி என்னை வா வா என்றழைகிறது.... 😛


கண்ணைப்  பறிக்கும் வண்ணங்களில் பலவித பதார்த்தங்கள்.

கண்டிப்பாக ஷங்கரும் தன் அம்மாவிடம் தான் சமைக்கக் கற்றுக் கொண்டிருப்பார் என வியன் நினைக்கிறான்.

பார்த்தீர்களா, அம்மா உங்கள் மகனின் கை வண்ணத்தை! 👐

கடைத் திறக்கலாம், அல்லது  குறைந்தபட்சம் வீட்டில் இருந்தே ஆர்டர் எடுத்து சமைத்துக்  கொடுக்கலாம் அவரிடம் இருக்கும் திறமைக்கு!

வாழ்த்துகிறான் வியன் 💪






தங்கராஜ்  கணேசன்
மனைவியுடன் ராஜ்

பேராக், ஈப்போவைச் சேர்ந்த பொறியியலாளரான ராஜ், சமைப்பார் என்பதை கேட்டு ஒரு  கணம் ஆடித் தான் போனான வியன்! (  மன்னிக்கவும் )


திறமையைக் கண்டு நகைக்கவில்லை, இது நாள் வரை இவரை அறிந்த மட்டும், அதற்கான அறிகுறி எதனையுமே அவரின் பேச்சுகளில் வியன் கண்டதில்லை என்பதால்.

உண்மையில் பெருமப்படுகிறான் வியன்.

MCO காலத்தில் வீட்டிலேயே இருந்ததால் தன் கையால் மனைவிக்கு சமைத்துப் போட்டிருக்கிறார். (Cho Sweet-kan) 💕 

இவர் சமைத்தவற்றில் இவருக்கு பிடித்ததே இரசம் தானாம். என்ன ஓர் எளிமை!

மீன் சம்பல், கோழிப் பொரியல், பருப்பு சாம்பார், முட்டை சம்பல், நெத்தில் சம்பல், காய்கறி பிரட்டல், Udang goreng என இவர் பட்டியல் நீளுகிறது.








ராஜ் சமைத்த நெத்திலி சம்பல், கேரட் ரசம், காய்கறி பிரட்டல் மூன்றும் அக்கா Mehala subramaniam, Whatsapp வாயிலாக சொல்லிக்  கொடுத்தவையாம். சொன்னதைக் கேட்டு, சமைத்து அக்காவிடம் 👌 வாங்கி விட்டார்.  


என்னடா, வெறும் நெத்திலி சம்பல், கீரைக் கறி என போகிறார் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள், Doughnut -டையும் செய்து அசத்தியிருக்கிறார். 
(யப்பா சாமி நீ வேற லெவல் தான் போ!) 




சரி யாரிடம் கற்றுக் கொண்டீர்கள் என்றால்..

" எல்லா புகழும் என் அன்னைக்கே!" என ஒரே வார்த்தையில் முடித்து விட்டார் பகாங், ஜெராந்துட்டைச் சொந்த ஊராகக் கொண்ட ராஜ்.

பரவாயில்லையே, ஆள் துரு துருவென இருந்தாலும், பல திறமைகளை வைத்துக் கொண்டு தான் silent-டாக வலம் வந்திருக்கிறார்.

மீண்டும் சொல்கிறேன், நிச்சயமாக நான் இதுவரை நம்பியதே இல்லை ராஜ் சமைப்பாரென்று!

ஈப்போ பக்கமா வரும் போது சொல்லி அனுப்புறேன்.... என்ன செய்யனும்னு உங்களுக்கே தெரியும்ல.... 😛

வியன் சொன்னா செஞ்சிருவான் தம்பி!




பார்த்தீர்களா மக்களே,



"சட்டிம் கரண்டியும் எங்க கைக்கு வர வரைக்கும் தான் நாங்க பூனை, வந்துட்டா பாயும் புலி!"

என்று தங்களின் நேர்த்தியான சமையல் மூலம் நிரூபித்திருக்கிறார்கள் நம் சகோதரர்கள்.

வியன் எதிர்ப்பார்ப்பெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

ஏதோ வீராவேசமாக MCO காலத்தில் சமைத்தோம் என்று நின்று விடாதீர்கள்.

இனி வீட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு நாளைக்கு நீ, மறுநாள் நான் என மாறி மாறி சமையுங்கள்.

குடும்ப ஒற்றுமையும் கணவன்-மனைவி அன்னியோன்யமும் வளரும்!

வயிறு நிறைந்த உணர்வில் #வியன்  விடை பெறுகிறான்.

-  முற்றும் !

#MCO, #CMCO #RMCO #PKP #PKPB #PKPP #Covid19 #CoronaVirus #CircuitBreaker #Corona #Quarantine #QuarantineLife #QuarantineCook  

3 comments:

kesavan era said...

சிங்கங்கள் கையில் கரண்டி....சிறப்பான தொகுப்பு...வியனின் விசித்திரமான முயற்சி...அருமையான வார்த்தை ஜாலம்...🥰🥰🥰🥰🥰🥰வாழ்த்துகள் தலைவரே....

Vijayan krishnan said...

மிக்க நன்றி நண்பரே விஜயன் வியனில்.... விஜயன்(க்கு) தெரியாமல் வியன்(இல்) great job my dear friend வியனின் புகழ் ஓங்கட்டும்

Arivananthan Marimuthu said...

மிக்க நன்றி அன்பரே. சமையல் என்பது எனது பொழுதுபோக்கு. இந்த எம்.சி.ஓ காலகட்டத்தில் அதனை மேலும் மெருகூட்டியுள்ளேன். வயிறு நிறந்து இப்பொழுது மனசும் நிறைந்துள்ளது.