அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Friday, 17 July 2020

'கிங்கினி மங்கினி' : பட்டையைக் கிளப்பும் ஜானகி டீச்சர்!

"Hello, this is Mrs Janaki here!"

என்ற ஒருவித husky குரலில், கேட்டவுடனேயே ஈர்க்கச் செய்து விடும், பார்க்க பார்க்க சிரிப்பை வரவழைத்து விடும் அறிமுகத்தோடு அண்மைய காலமாக 'தங்லீஷில்' இணையத்தை கலக்கி வருகிறார் ஜானகி டீச்சர்.

"Every ramu and somu wants to become chef damu!!!!"

“Roasted semolina sooji peenchu pona upma ku ethu tha peru “

"Vennir ku recipe kuda keppinga pola"

இவர் பயன்படுத்தும் வார்த்தைகள் படு பிரபலம். ஒரு படத்தில் ஜட்டி போடாத குட்டிப் பையனைப் பார்த்து நம் சின்னக் கலைவாணர் பத்ம ஸ்ரீ விவேக் சொன்ன 'கிங்கினி மங்கினி' டையலாக் தான் இப்போதைக்கு டிரெண்டிங்க. Thanks to Janaki teacher !



#வியன் பில்டப்பு, கொஞ்சம் ஓவரால்ல இருக்கப்பு! என்பவர்களுக்கு, இன்னுமா அவுங்கள பார்க்கல, போங்கையா நீங்கலாம் waste-டு! என்று சொல்லி விடும் அளவுக்கு, ஜானகி டீச்சரிடம் விழுந்தே விட்டானையா வியன்!


"தாத்தா, யாரு தாத்தா அந்த ஜானகி டீச்சர், சொல்லித் தொலைங்க தாத்தா! என வியனைக் கேட்பதால்,கெஞ்சுவதால், இறங்கி வருகிறேன் .... 😛

சென்னையைச் சேர்ந்த Stand up Comedian அபிஷேக் குமாரின் அட்டகாசமான animoji உருவகம் தான் இந்த 'ஜானகி டீச்சர்' ( "வாயில ஸ்வீட்டை வெச்சிட்டு, அடியில வெடியை வெச்சுட்டியே தாத்தா...!" என்ற விரக்திக் குரல் கேட்கிறது, விடுங்கள். வியன் தானே! )

சரி, ஜானகி டீச்சரிடம் அப்படி என்ன இருக்கிறது?

என்ன இல்லை? இந்த கொரோனா #lockdown காலத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவர்களில் வீட்டுக்கெல்லாம் விஜயம் செய்திருக்கிறாரே? அது போதாதா?

வீட்டில் நடக்கும் சம்பவங்களை கற்பனையாக என்றாலும் படு எதார்த்தமாக, பார்ப்பவர்கள் தங்களுடன் தொடர்புப் படுத்திக் கொள்ளும் அளவுக்கு இயல்பாக content-டைக் கையாள்கிறார் அபிஷேக்.



Online வகுப்பெடுக்கும் ஒரு டீச்சர் அன்றாடம் சந்திக்கும் அனுபவங்களைக் கையில் எடுத்திருக்கிறார் இளைஞர்..



இவர் பொழுதுப் போக்காக செய்யப் போய், அது இந்தளவுக்கு reach அதுவும் குட்டீசுகளின் favorite character-ராக மாறும் என சத்தியமாக இவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
பொடிசுகள் எல்லாம், இவர் பேசும் வசனங்களை மனப்பாடம் செய்து ஆளாளுக்கு குட்டி ஜானகி டீச்சராக மாறி வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர்.

அந்த அளவுக்கு அவரின் content இருக்கிறது; அதை அவர் ஒப்புவிக்கும் விதமும் அதாவது குரல் modulation, அதற்கேற்றால் போல் கண்களை உருட்டுவது (animoji-யில் சிரிப்பை வரவழைக்கும்),  உடல் மொழி, அதிலும் இரண்டு கைகளையும் அடிக்கடி ஆட்டிக் கொண்டே அவர் பேசுவது....

பிள்ளைகளிடத்தில் செம்ம ரீச்சாகி விட்டதால், மனிதர் மிகவும் கவனமாக இருக்கிறார். 

Standup Comedy-யில் எல்லை கடந்து பேசுவதை போல் இங்கே பேசினால் 'டப்பா டான்ஸ் ஆகி விடும்' என்பதை நங்கு உணர்ந்தே இருக்கிறார்.

அதனால், Clean Content தான்! பிஞ்சுள்ளங்களுக்கு தவறான முன்னுதாரணமாகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் நம்ப ஜானகி டீச்சர் @ அபிஷே. ( நெஞ்சில நின்னுட்டடா பையா!)
உலகளவில் தமிழ் பேசும் தேசமெல்லாம் சென்று சேர்ந்திருக்கிறார் ஜானகி. 

அவர் அவ்வப்போது முகநூலில் நேரலையில் வரும்  போது, அவருக்கு Hi சொல்லி, அன்பைப் பறிமாறும் உள்ளங்களைப் பார்த்தாலே தெரியும்.

மலேசியாவிலும் ஜானகி டீச்சருக்கு எக்கச்சக்க ரசிகர்கள். 

கூடிய விரைவில் ரசிகர் மன்றத்தையே ஏற்படுத்தி விடலாம் போலிருக்கிறது ( மன்றம் அமைந்தால் வியன் தான் காரியதரிசி, சொல்லிட்டேன் ஆமா!)

Facbook live-வில் உங்கள் inspiration யாரென ரசிகர் கேட்க,  பின்னால் இருந்த all time காமெடி கிங் நாகேஷ் சாரின் படத்தைக் கைக்  காட்டுகிறார் அபிஷேக்.

ஜானகி டீச்சரின் கணவர் என புதியக் கதாபத்திரத்தையும் உருவாக்கியுள்ள அபிஷேக் அவரின் மகள் கதாபாத்திரத்தை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.


வீட்டில் என்ன செய்வதன்றே தெரியவில்லை எனக் காரணம் கூறி காலத்தைக் கழிப்போர் மத்தியில், இப்படி creative -ஆக யோசித்து, அதன் மூலம் பல்லாயிரக்கணக்காணோரின் உள்ளங்களைக் கவர முடியும் என்பதை இந்த இளைஞர் நிரூபித்துள்ளார்.

'ஜானகி டீச்சர்' வெறும் முகநூலில் வந்துப் போவதோடு நிற்காமல் இன்னும் நிறையை உயரங்களைத் தொட #வியன் வாழ்த்துகிறான்!

1 comment:

saltcaccese said...

Astratic Electretripping | TITanium Art
TITanium Art, featuring 2016 ford fusion energi titanium t. and t fal titanium a. are a. by. T.T., T.T. with a. as. as. as. aftershokz trekz titanium as. as. as. as. ion titanium hair color as. as. as. as. as. as. as. as. as. as. as. as. as. as. as. titanium bohr model as. as.