அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Tuesday, 7 July 2020

Quarantine Cook-குகள் ( பகுதி 4 )

மூன்றாவது பகுதியோடு நிறைவுப் பெறும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் வந்த வரவேற்பு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இன்னும் 2 தொடர்களாவது வரும் அளவுக்கு புகைப்படங்களும் விவரங்களும் #வியன் வசம் 😍 வாருங்கள் போவோம் #MCO சமையல் கட்டுக்கு.... வாசம் அழைக்கிறதே!




தமயந்தி சரவணன்

" மைக்கிறதுனா எனக்கு கொள்ளை கொள்ளை ஆசை. வேலையோ 9-7. வீட்டுக்கு வந்த பிறகு தான் சமைக்கவே நேரம் கிடைக்கும். சோர்வா வேற இருக்கும். பெரும்பாலும் simple dish தான். சில சமயம், tapau saja! இல்லாட்டி, மாமியார் வீட்டுல தான் போய் சாப்பிடுவோம். ஆனா, MCO காலத்துல நிறைய டைம் இருந்ததால, நிறைய செஞ்சு பார்ப்போமேனு ஆசை வந்தது.வித விதமா சமைச்சி தள்ளிட்டேன்!"  என பூரிப்புடன் பேச ஆரம்பித்தார் தமயந்தி

வீட்டில் இவரும்  கணவரும் மட்டும் தான் என்பதால் இவரின் சமையல் முதலில் பரிசோதனைக்குப் போவதே அவரிடம் தான். எல்லாவற்றையும் experiment-டுக்கு அங்கு தான் அனுப்பி வைக்கிறார். கணவரும் ருசி பார்த்து okay சொல்லுகிறார்.  😅

கடவுள் புண்ணியத்தில் இதுவரை புகார் வந்ததில்லையாம். ஒரே ஒரு தடவை தவிர...என இழுத்தார். 

அது எப்போது என்று போகும் வழியில் பார்ப்போம்...

எப்படி சமையல் ஆர்வம் வந்ததென்று கேட்டால், மனுஷி நான்காம் வகுப்புக்கே கூட்டிச் சென்று விட்டார்.

ஆம், அப்போது  முதலே சமைத்துச் சாப்பிட ஆர்வமாம். வீட்டில் அம்மாவுக்கு சமையலில் உதவியாக இருப்பாராம். "நீ நல்லா செய்யுறடி!" என அம்மா அடிக்கடி புகழ்ந்துத் தள்ள ஆர்வமும் கூடியிருக்கிறது. சமைத்து முடிக்கும் வரை அம்மாவுக்கு இவர் தான் வலது கரமாம்.  

MCO சமையல் பற்றி பேசுகையில், "சாப்பிட்ட வரைக்கும் எல்லாருமே நல்லா இருக்குனு தான் சொல்லிருக்காங்க. அதுக்காக நான் சமைச்சது எல்லாமே சூப்பர் டூப்பர் சிக்சர் கப்சா விட மாட்டேன். நான் சமைத்தவற்றில் எனக்கே சில திருப்தி இல்லாமல் இருந்திருக்கின்றன!" என வெளிப்படையாக உண்மையைச் சொன்னார் தமயந்தி... ( ரொம்ப நல்லவனு சொல்லிட்டாங்க....)

கேக் செய்வதை அண்மையில் தான் கற்றுக் கொண்டாராம். செய்த கேக்குகள் எல்லாம் சூப்பராக வந்ததால் திருப்தி. எல்லாமே jadi ஆச்சு என்கிறார். வாழைப்பழ கேக் மட்டும் தான் ஏனோ தெரியவில்லை கொஞ்சம் சொதப்பி விட்டதாம்.

இவரின் favorite  சொதியும் நெத்திலி சம்பலும் எனக் கூறி ஆச்சரியப்படுத்துகிறார். 

மீ கோரேங் மாமாக் முதன் முறையாக செய்து கணவரிடம் சபாஷ் வாங்கி விட்டார். அவர் Not Bad என்றாராம். 

அதே சமயம் பின்னி பெடலெடுத்து விடுவேன் என்றால் #Sambar, #ChickenSambal-லை கைக் காட்டுகிறார். 

இவரின் 1st attempt வரிசையைப் பார்த்தால் ஆடிப் போவீர்கள், அசந்து போவீர்கள் 👇👇👇

#NasiAyam #NasiAyamPenyet  #SotongBakar #ChettinadPrawnCurry #OndeOnde

#PrawnCurry  with #Curd and #CendawanMasakCiliPadi

#NasiLemakPandan + #AyamGorengBerempah 

#NasiHujanPanas + #ChettinadChickenCurry ( கணவர் பாஸ் மார்க் கொடுத்துள்ளார்)

எவ்வளவு நாள் தான் உள்ளூரையே சுற்றி வருவது. கொஞ்சம் தாய்லாந்தையும் சுற்றி வரலாம் என்றெண்ணியவர் #SiakapStimLimau -வில் இறங்கியிருக்கிறார். ரொம்ப நாளாவே செஞ்சு பார்க்கனும்னு நெனச்சேன். செஞ்சிட்டேன்! என்றவர், சூப்பர் taste  என்றார். அதை விட, அவர் கணவர் கொடுத்த certificate இங்கு highlight. " ஏம்மா, Krabi -யில சாப்பிடுற மாதிரியே இருக்குல!" ( பரவாயில்லை, Sporting-தான் !) 

முதன் முறையாக செய்து பார்த்து, அதுவும் pengukus இல்லாமல்.. நன்றாக வரவே அம்மணிக்கு ரொம்ப சந்தோஷம்.


மீன் கூக்குஸ் பண்ணியவர், அடுத்து அந்தப் பக்கம் போகாமல் இருப்பாரா?  #SiakapStimNyonyaStyle -லில் இறங்கி விட்டார். அவரே சொல்லி விட்டார் வெரி நைஸ் என்று. இதுவும்  முதல் முயற்சி தானாம்

கணவரும் சும்மா விடுவதில்லை, அவ்வப்போது கேட்டு வைக்கிறார்... 

அப்படி அவர் கேட்டு தமயந்தி சமைத்தது தான் அவரின் விருப்ப உணவான பிரியாணி நண்டு கறி ( இதிலும் இவர் கைராசிக்காரராம்)

படத்தைப் பாருங்கள் 👉

நமக்கே வாய் ஊறவில்லை? 

மனைவி இப்படி சமைத்துப் போட்டால் எந்தக் கணவன் தான் வாயைக்  கட்ட முடியும்? 😋 



இவருக்கு மிகவும் பிடித்த கீரைக் கறி, மீன் பொறியல், இறால் பொறியலும் மெனுவில் உண்டு.  #NasiTomato & #AyamMasakMerah 3-4 தடவை சாப்பிட்டு விட்டாராம். அதில் இருந்தே தெரிகிறதே taste எப்படி இருந்திருக்குமென்று! 

"Banana Cake கொஞ்சம் சொதப்பிருச்சு. Pengukus எங்கிட்ட இல்ல. சோ சட்டியில வெச்சு தான் செஞ்சேன். சரியா வரல. கீழே தண்ணி கோர்த்துகுச்சு. ரொம்ப தண்ணி கோர்த்தனால சாப்பிட முடியல. கடைசியில் வீட்டுக்கு பின்னாடி உள்ள புறா தான் சாப்பிட்டுச்சு" என சிரிக்கிறார் தமயந்தி.


சொதப்பிய அந்த Banana Cake 👆
" ஒரு தடவை நீ ஜெயிச்சிட்ட , பரவால்ல நான் முழிச்சிட்டேன்!" என்ற படையப்பா வசனம் போல, banana cake-கில் விட்டதை அடுத்து வந்த #SteamedChocolateMoistCake-கில் பிடித்து விட்டார் தமயந்தி.. கேக் ருரியோ ருசியாமே!

சும்மா இருப்பாரா? அடுத்து #SteamedRainbowCake அதாங்க, அவிச்ச வானவில் கேக் வரை சென்று விட்டார். சூப்பர் ருசியால் , பற்றாமல் போய் விட்டதாம். மீண்டும் செய்து பார்க்காமல் விட மாட்டேன் என்கிறார்.

மீனையும் விட்டு வைக்கவில்லை. #IkanBakar -ரிலும் புகுந்து விளையாடிருக்கிறார். கணவர் சொல்லவா வேண்டும். விழுந்தே விட்டாரயா!


Tak Jadi ஆன லிஸ்டில் சேர்ந்த இன்னொன்று....
👈 Mee Hailam 

கணவரின் முகத்திலேயே தெரிந்து விட்டதாம். 

ஒரு நாள்  பூராவும் அவருக்கு வயிற்று வலியாம் ( ஏன்மா, ஏன்? 😆 )



ரொம்பவும் ஆர்வத்துடன் சமைக்கப் போய், கடைசியில் சொதப்பியதால் தமயந்திக்கு சற்று வருத்தம்.  

பரவாயில்லை தங்கையே, 4 சூப்பாரா வந்தால், 1 சொதப்பத் தானே செய்யும்? chill பண்ணுங்க!




மனைவி சமைத்த ஆட்டுக்  கறியை ஒரு கட்டு கட்டுகிறார் கணவர்
MCO காலம் உங்களிடம் இலை மறைக் காயாக மறைந்துள்ள திறமையை உங்களுக்கே மீண்டும் நினைவுப்படுத்தியிருக்கிறது என நினைத்துக் கொள்ளுங்கள். 

வேலைக்குத் திரும்பியதும் பழைய படி சமைக்க முடியாது தான், பரவாயில்லை! 

வாரக் கடைசிகளிலாவது சமைக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் சமையல் இன்னும் மெருகேறும், நம்புங்கள்,  #tamaskitchen👩🏻‍🍳
தரமுயரட்டும், thumbs up வாங்கட்டும்!  👌👌👌



கௌரி ஆறுமுகம்

சிறப்புக் கல்வி ஆசிரியையான கௌரி, இந்த  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலம் தமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதாகச் சொன்னார். 

நல்ல பல படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்திருப்பதாகவும் positive note -டில் பேசினார். 

அவசரத் தேவைக்குப்  பயன்படுத்த , சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதும் அவற்றில் அடங்கும் என்கிறார்.


பல்வேறு சமையல்களைக் கற்றுக்  கொள்ளவும் இக்காலக் கட்டத்தை கௌரி பயன்படுத்திக்  கொண்டிருக்கிறார். 


பள்ளித் திறப்புக்கு முன் சமையல் கட்டை ஒரு வழி பண்ணி விட்டார். அவரின் கைவண்ணம் இதோ...



Sate வரைக்கும் போய் விட்டார்

கலர் கலராய் கேக்குகள், பலகாரங்கள், பொறியல்கள்

கோழி கிச்சாப் என்ன, மீ கோரேங் என்ன, நண்டு கறி என்ன....

சப்பாத்தி முதல் Apam Balik வரை 

வாழை இலையில் பிரியாணி முதல் பீட்சா வரை 

சமையல் மட்டுமல்ல, கைவினைப் பொருட்களும் கௌரிக்கு கை வந்த கலை. #GowriArts என்ற பெயரில் பல கைவினைப் பொருட்களை செய்கிறார். பிறந்தநாள்  உள்ளிட்ட சுப காரியங்களுக்குப் பரிசுக்  கூடைகளை தானே செய்து கொடுக்கிறார். ஏற்கனவே நூல்களைக் கொண்டு காதணிகள், சங்கிலிகளைச் செய்திருக்கிறார். 

Gowri Arts

இப்படி தன்னிடத்தில் பல்வேறு சிறப்புகளைக்  கொண்ட கௌரி வாழ்வில் மேலும் சிறக்க வியன் வாழ்த்துகிறான். 



பிரியாதேவி சுப்பையா 

அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை என்று அடக்கமாகக் கூறினாலும், அவர் சமைத்தவற்றைப் படங்களாக பார்க்கும் போது அப்படித் தெரியவில்லை.  இந்த கோவிட் காலத்தில் நன்கு சமைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்.



சிங்கப்பூரில்
ஜொகூர் Yong Peng-கைச் சேர்ந்த பிரியா சிங்கப்பூரில் emergency nurse-சாக வேலை செய்கிறார். 

இந்த கோவிட் காலத்தில் 12 மணி நேர shift வேலையாம். #Lockdown காரணமாக மலேசியா திரும்ப முடியவில்லை. ஆக, வீட்டில் சமைக்கலாமே என எண்ணம் தோன்றியிருக்கிறது. 

போதாக் குறைக்கு பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டிருந்தன.

வீட்டு சாப்பாடு சாப்பிடவும் ஆசை. எனவே சமைத்துப் பார்த்து விடலாம் என இறங்கியிருக்கிறார்.  

கடை சாப்பாட்டை விட வீட்டு சாப்பாடே  ஓரோக்கியமானது என்கிறார். 

இவரின் சமையலைப் பார்த்த நண்பர்கள், வெகுவாகப் பாராட்டியிருக்கின்றனர். பேசாமல் சமையல்காரராகி விடலாம் என்று கூட பாராட்டுகள் வந்திருக்கின்றன. 

உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர் என்றும் நண்பர்கள் கூறினார்கள் என்று சொல்லி முடிக்கும் போது, முகத்தில் என்ன ஒரு சந்தோஷம். 😎

பசியைத் தூண்டுகிறதா? 😜
முதன் முறையாக ரசமும் வத்திருக்கிறார்


காய்கறி பிரட்டல் பல விதம்...
"ஆரோக்கியமாக உண்ணவும், பணத்தைச் சேமித்து வைக்கவும், ஏதாவதொன்றில் பிசியாக வைத்துக் கொள்ளவும்,  மன அழுத்தம் பக்கமே போகாத அளவுக்கு சிந்தனையைத் தெளிவாக வைத்திருக்கவும், புத்தம் புதிய சமையல்களால் தன்முனைப்புத் திறனை வளர்த்துக் கொள்ளவும், எனக்கு ந்த MCO காலம் உதவியிருக்கிறது!" என முழு திருப்தியுடன் கூறி முடித்தார் பிரியா. 
பிரியாவின் சமையல்களுக்கு கணவர் கவியரசு காத்திருப்பார்!


வேலை நிமித்தம், கணவர், குழந்தை, குடும்பத்தைப் பிரிந்து தூரமாக இருக்கிறார். "சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியதும் எனக்கு இதே போல் சமைத்துப் போடு என இப்போதே கணவர் கட்டளை. நான் காத்திருக்கிறேன்" என்கிறாராம் கணவர்.

குடும்பத்தை விட்டுதூரமாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. பல சிந்தனைகள் வந்து போகும். எனவே, சமையலில் கவனம் செலுத்தி கற்றுக் கொண்டேன் என்கிறார்.  outcome -மும் சூப்பராக இருந்தலில் அவருக்கு மகிழ்ச்சி.

நிலைமை சரியாகி நாடு திரும்பியதும், சமையலில் உங்கள் கைவண்ணத்தைக்  காட்டி, கணவர், குழந்தை, பெற்றோர், மாமனார் மாமியார் என எல்லாரையும் அசத்துங்கள். 👌 



ஔரி விஸ்வலிங்கம் 

பாலர் பள்ளி ஆசிரியையான இவர் வழக்கமான நாட்களிலேயே வித விதமாக சமைத்து, முகநூலில் புகைப்படங்களைப் பதிவேற்றி விடுவார். 

அவரின் சமையல் படங்களுக்கு வியன் ஆரம்பம் முதலே ரசிகன்.

MCO காலத்திலும் நிறைய சமைத்திருக்கிறார். ஆனால், முகநூலில் பதிவேற்றவில்லை. வியன் கேட்டுக் கொண்டதும், பகிர ஒப்புக் கொண்டார்.

முகநூலில் Auri Btz என வலம் வரும் இவர் இம்முறை பிரியாணி, நெய் சோறு, நாசி லெமாக், பல வித கேக்குகள், #BurgerGoreng என ஒரு ரவுண்டு வந்திருக்கிறார். அதென்ன பர்கர் கோரேங் என கேட்டால்....      👇



" சும்மா try பண்ண ரெசிப்பி.முட்டையைப் போட்டு, இந்த burger ரொட்டியை celup பண்ணி, எண்ணெயில பொரிச்சு, cauliflowr, potato லாம் போட்டு சொந்தமா inti சைவமா செஞ்சி அதுக்கு நான் burger goreng-னு பேரு வெச்சேன் என்கிறார் ...

நாசி லெமாவாக இருக்கட்டும், நெய் சோறாகட்டும், பிரியாணியாகட்டும், மேற்கத்திய உணவுகளாகட்டும், எல்லாவற்றிலும் Auri touch இருக்கும். 

இவரின் கேக்குகளும்  அப்படித்தான்.

இவர் சமையலை விட, சமைத்தவற்றை அழகுப்படுத்தும் விதம் இருக்கிறதே! அடடா...! கடைகளில் வாங்கி சாப்பிடுவதைப் போலவே இருக்கும்.

அதுவும் சமைத்தப் பதார்த்தங்களை அழகாகத் தட்டில் வைத்து வீட்டின் மொட்டை மாடியில் பின்புறம் வீடுகள், வானம், பறவைகள் தெரிய, அழகாகப் படம் பிடித்துப் போடுவார். 

அதற்கே ஒரு சபாஷ் போடலாம் இவருக்கு. பார்க்க அவ்வளவு classic க்காக இருக்கும்.

சரி, உங்கள் Favorite என்ன என்று வழக்கமான கேள்வியை வியன் வீசினான்... பதில் வந்தது பாருங்களேன்...

" எந்த சாப்பாட்டையும் வாழை இலையில உட்கார்ந்து சாப்பிடுறது தான் என்னோட most favorite! அவ்வளவு தான் ! என்று ஒரே போடாய் நச்சுனு போட்டார் . 👍


பாரம்பரியம் காக்கப்படுகிறது 😜
அதிலும், அண்மையில் நெய் சோறென்ன, கோழிக் கறியென்ன, ஆட்டுப் பிரட்டலென்ன, காய்கறிக் கூட்டென்ன என சொல்லும் அளவுக்கு சமைத்து, பெரிய வாழை இலையில் பறிமாறி குடும்பமே அமர்ந்து சாப்பிட்ட  காட்சி இருக்கிறதே! 💚

என்ன ஓர் அழகு. குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடும் பழக்கம் மெல்ல குறைந்து வருவதாகக் கூறப்படும் இக்காலத்தில், தரையில் வாழை இலையில் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டு #வியன் மனதை நெகிழ வைத்து விட்டீர்கள். வியனின் பாராட்டை உங்கள் குடும்பத்தாரிடம் சேர்த்து விடுங்கள்.

அது குறித்து ஔரியிடம் கேட்ட போது...


"அது நாங்க கூட்டுக்  குடும்பமா முன்ன இருந்தப்போ, இப்படி தான் சாப்பிடுவோம். ஏன்னா பாட்டி வீடு lot வீடு. பூச்சோங் பத்து 13, மணல் மேடு. தினமும் அப்டி தான் சாப்பிடுவோம். தீபாவளி நல்ல நாள் பெருநாளாகட்டும். 20-25 பேர் வீடே நிறைஞ்சிருக்கும். இப்போ வரைக்கும் அந்த பாரம்பரியத்தை கடைபிடிக்கிறோம். எல்லாரும்  ஒன்னு  கூடிட்டா, வாழை இலை ரெடி! " என கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய போது, வியனுக்கும் பழைய நினைவுகள் வந்து போயின. நன்றி ஔரி 👐 

இவரும் ஆர்டர் எடுத்து செய்துத் தருகிறார். கேக்குகளின் வண்ணங்களைப் பார்க்கும் போதே, வியன் விழுந்து விடுவான்.  கையில் திறமை இருக்கும் போது, கண்டிப்பாக வாய்ப்புகள் வரத்தானே செய்யும்!


இவரின் உறவினர்களுக்கு மிகவும் விருப்பமான #RedVelvetCheeseCake. அவர்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் தேநீருடன் மேசையில் தயாராக இருக்குமாம் இந்த Red Velvet. 

இயற்கை விரும்பியுமான ஔரி, புகைப்படங்களை எடுப்பதையும் பொழுதுப் போக்காகக் கொண்டுள்ளார். அவர் 'கிளிக்' செய்த புகைப்படங்கள் பலவும் அதே classic இரகம் தான். 👍




தொடர்ந்து செய்யுங்கள், வீட்டில் இருந்தே வருமானத்தைப்  பெருக்கிக் கொள்ள நல்லதொரு வாய்ப்பு. பயன்படுத்திக்  கொண்டு மென்மேலும் வளர வாழ்த்துகள் அவுரி! 👌




லொவிஷீனா ராமையா





" சூப்பர் இல்லனே, சுமார் தான்! "

என்று பேசத் தொடங்கியவர் சமைத்தவற்றின் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்! ருசி அறியா விட்டாலும் இதை யாராவது சுமார் என்று சொல்லுவார்களா? 

ரொம்ப தான் அடக்கம் மோய் உனக்கு! 😆




Chinese உணவுகள் கண்களைப்  பறிக்கின்றன அல்லவா?





பெர்னாமா தமிழ்ச் செய்தியின் முன்னாள் நிருபருமான லொவிஷீனாவை, பத்திரிகைத் துறையில் ஈடுபட்ட ஆரம்ப காலத்தில் இருந்தே வியன் அறிவான். சகலகலா வல்லி. 



வெளியில் குறிப்பாக பண்டிகை கால விற்பனைச் சந்தைகளில் இவர் விற்கும் Halus மிட்டாய் வெகு பிரபலம். 

சமைத்தது போக, வீட்டில் ஏதோ தன்னால் இயன்ற அளவு சிறிய அளவில் தோட்டமும் போட்டு காய்கறிகளை வளர்த்திருக்கிறார்.

MCO-வுக்குப் பிறகும் இச்சிறப்புகள் தொடர வேண்டும் என வியன் வாழ்த்துகிறான்....


ந்த MCO காலத்தில் சமையல் கட்டு வெந்து வெந்து, அதுவே நினைத்திருக்கும்.... ஏன்டா இந்த பாடு படுத்துறீங்கனு? 😛 அந்த அளவுக்கு நம் சகோதரிகள் பிரித்து எடுத்து விட்டார்கள்.

Jokes apart, உங்களின் கைராசி வெளிவர அருமையான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. வாய்ப்பும் வசதியும் இருந்தால், அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். சிறிய அளவென்றாலும், உபரி வருமானம் கிடைத்தால் நல்லது தானே?

அதே சமயம், வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டு வீட்டில் உள்ளவர்களையும் தொடர்ந்து அசத்துங்கள்!

#வியன் வயிறும் மனதும் 'நிறைகிறான்'

#QurantineCook #Quarantine #QuarantineLife #Lockdown #MCO #CMCO #RMCO #PKP #PKPB #Corona #CoronaVirus #Covid19 #கொரோனா #கொரோனா_வைரஸ்

1 comment:

Unknown said...

Awesome ladies. Tq for the wonderful article