"யோவ், என்னயா இது ? எல்லாரும் இப்டி பின்றீங்க?"
" பிரிச்சு மேயுறாங்க போங்க!"
ஜூலை 1 முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் HD-யில் வசம் கொண்டுள்ள 'கள்வனைக் கண்டு பிடி' மர்மத் தொடரை விடாமல் பார்ப்பவர்களின் ரியாக்ஷ்ன் இதுவாகத் தான் இருக்கிறது!
ஒரு பக்கம் வானவில்லில் 'தமிழ்லெட்சுமி' பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் விண்மீனில் 'கள்வனைக் கண்டுபிடி' கபடி ஆடுகிறான்.
தமிழ்லெட்சுமியைப் பாதியில் விட மனமில்லாதோர் எல்லாம் ரெக்கார்ட் செய்தாவது 'கள்வனைக் கண்டுபிடி' தொடரைப் பார்த்து விடுகிறார்கள்.
அந்த அளவுக்கு மனம் கவர்ந்தத் தொடராக மாறியிருக்கிறது.
மர்மத் தொடர்களுக்கோ, அமானுஷ்யக் கதைகளுக்கோ வியன் எப்போதுமே விசிறி அல்ல என்பது வியனை அறிந்தோருக்குத் தெரியும்.
என்றாலும் கூட, நம்மூர் ஜாம்பவான்களை வைத்து கார்த்திக் ஷாமளன் என்ற 'ராட்சஷன்' இயக்குவதால் இந்தத் தொடரை bitt-u bitt-டாகவாவது பார்த்து விடலாம் என்றெண்ணி போய் பார்த்தால்....
கதைக்களம், காட்சியமைப்பு, ஒலிக் கலவை, ஒளிப்பதிவு என பின்னி பெடலெடுத்து விட்டார்கள்.
அதிலும், வியன் வியந்துப் போனது கதை மாந்தர்கள். அவர்களுக்கு உயிரோட்டம் தந்து உண்டு இல்லைப் பண்ணி விட்டார்கள்.
விஷானாக வரும் லிங்கேசுக்கு வசனமே தேவையில்லை. முக பாவனைகளாலும் உடல் மொழியாலும் மிரட்டுகிறார். ( எதைக் கொடுத்தாலும் மிளிர்ந்து விடுகிறானே, இவனை என்ன செய்வது?) 😛
பாசினி & மோகனராஜ்
பாஷினி சிவகுமார், ஆர்.மோகன ராஜ் வரும் அந்த சீன் இருக்கிறதே! என்னவோர் உணர்ச்சிக் கொப்பளிப்பு. இருவரும் போட்டிக் போட்டு நடித்திருக்கிறார்கள்.
மோகன், பார்க்கத்தான் baby face, பாய்ந்தால் ?
" நான் சட்டையைக் கழட்டிட்டு நிற்பேன்ம், நீ நிற்பியா?" என கேட்கும் போது...
பெரியவர் கே.எஸ்.மணியம் ( இவரின் கதாபாத்திரம் கூட முன்பு நான் ஒரு படத்தில் பார்த்த அதே வழக்கமான role-லாகத் தான் இருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் மனிதரின் அனுபவம் அந்நினைப்பைத் தகர்த்தெறிந்து விட்டது. கண்ணசைவுகளிலும் குரலிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி விடுகிறார்.) 👌
சமூக வலைத்தலங்களிலும் ஆதரவுப் பெருகி வருவதைக் காண முடிகிறது.
Memes-கள் தெறிக்கின்றன. சில சமயங்களில் வெடிச் சிரிப்புகளை வரவழைத்து விடுகின்றன.
ஏற்கனவே வியன் எழுதியிருந்தான் "சின்னத்திரையையும் சிறைப்பிடிப்பாரா ஷாமளன்?" என்ற தலைப்பில்.
இப்போது வியனே சொல்கிறான். சிறைப்பிடித்து விட்டாய் ஷாமளா!
" பிரிச்சு மேயுறாங்க போங்க!"
ஜூலை 1 முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் HD-யில் வசம் கொண்டுள்ள 'கள்வனைக் கண்டு பிடி' மர்மத் தொடரை விடாமல் பார்ப்பவர்களின் ரியாக்ஷ்ன் இதுவாகத் தான் இருக்கிறது!
ஒரு பக்கம் வானவில்லில் 'தமிழ்லெட்சுமி' பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் விண்மீனில் 'கள்வனைக் கண்டுபிடி' கபடி ஆடுகிறான்.
தமிழ்லெட்சுமியைப் பாதியில் விட மனமில்லாதோர் எல்லாம் ரெக்கார்ட் செய்தாவது 'கள்வனைக் கண்டுபிடி' தொடரைப் பார்த்து விடுகிறார்கள்.
அந்த அளவுக்கு மனம் கவர்ந்தத் தொடராக மாறியிருக்கிறது.
மர்மத் தொடர்களுக்கோ, அமானுஷ்யக் கதைகளுக்கோ வியன் எப்போதுமே விசிறி அல்ல என்பது வியனை அறிந்தோருக்குத் தெரியும்.
என்றாலும் கூட, நம்மூர் ஜாம்பவான்களை வைத்து கார்த்திக் ஷாமளன் என்ற 'ராட்சஷன்' இயக்குவதால் இந்தத் தொடரை bitt-u bitt-டாகவாவது பார்த்து விடலாம் என்றெண்ணி போய் பார்த்தால்....
கதைக்களம், காட்சியமைப்பு, ஒலிக் கலவை, ஒளிப்பதிவு என பின்னி பெடலெடுத்து விட்டார்கள்.
அதிலும், வியன் வியந்துப் போனது கதை மாந்தர்கள். அவர்களுக்கு உயிரோட்டம் தந்து உண்டு இல்லைப் பண்ணி விட்டார்கள்.
விஷானாக வரும் லிங்கேசுக்கு வசனமே தேவையில்லை. முக பாவனைகளாலும் உடல் மொழியாலும் மிரட்டுகிறார். ( எதைக் கொடுத்தாலும் மிளிர்ந்து விடுகிறானே, இவனை என்ன செய்வது?) 😛
பாசினி & மோகனராஜ்
பாஷினி சிவகுமார், ஆர்.மோகன ராஜ் வரும் அந்த சீன் இருக்கிறதே! என்னவோர் உணர்ச்சிக் கொப்பளிப்பு. இருவரும் போட்டிக் போட்டு நடித்திருக்கிறார்கள்.
மோகன், பார்க்கத்தான் baby face, பாய்ந்தால் ?
" நான் சட்டையைக் கழட்டிட்டு நிற்பேன்ம், நீ நிற்பியா?" என கேட்கும் போது...
"நீ நிற்படா, நீ நிற்ப, ஏன் நிற்க மாட்ட?, உன் மூஞ்சியும் மொகரக் கட்டையும் " என வாயில் வந்ததவற்றை எல்லாம் சொல்லும் அளவுக்கு வெறுப்பைச் சம்பாதித்து விடுகிறது அவரின் கேரக்டர். சூப்பர்ப்பா சூப்பர்.
வழக்கமான ஆபிசராக இல்லாமல் சங்கபாலன், ரவின் ராவ் சந்திரன் ( சிறிய சிறிய பாவனைகளிலும் இயல்பைக் காட்டுகிறார்) ராமசந்தரன், சுபாஷினி அசோகன், சாய் கோகிலா என எல்லாருமே அப்ளாஸ் அள்ளுகிறார்கள். கார்த்திக்கிற்கு மொத்த டீமே பலம்!
Memes-கள் தெறிக்கின்றன. சில சமயங்களில் வெடிச் சிரிப்புகளை வரவழைத்து விடுகின்றன.
ஏற்கனவே வியன் எழுதியிருந்தான் "சின்னத்திரையையும் சிறைப்பிடிப்பாரா ஷாமளன்?" என்ற தலைப்பில்.
இப்போது வியனே சொல்கிறான். சிறைப்பிடித்து விட்டாய் ஷாமளா!
யாரேனும் விடு பட்டிருந்தால் மன்னியுங்கள்..
முன்பே சொல்லியது தான்...
" கள்வனைக் கண்டு பிடி, வீட்டில் channel-லை மாற்றினால் உருண்டு விழுந்தாவது முரண்டுப் பிடி !
No comments:
Post a Comment