அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Wednesday, 1 July 2020

Quarantine Cake-குகள்!

ந்த #MCO காலத்தில் தத்தம் கைவண்ணங்களால் முகநூலை அலங்கரித்து நமது கவனத்தை ஈர்த்தவர் பலர். முந்தையப் பதிவுகளில் வித விதமாக சமைத்து அசத்தியவர்களைப் பார்த்தோம்.

இம்முறை MCO தந்த Cake Experts சிலரைப் பார்ப்போம்.....



Lakeishaa Mackender Edward 

ஏறக்குறைய தினசரி கேக்குகளால் தன் பக்கத்தை அலங்கரித்தவர்.

90-களின் மத்தியில் 400 மீட்டர் ஓட்டத்தில்...
ஆர்வ மிகுதியில் போய் பார்த்து விசாரித்தால், அட, நம்ம முன்னாள் தேசிய ஓட்டப்பந்தய வீராங்கணை  குகனேஸ்வரி பழனியப்பனின் மகள்.

14 வயது மாணவி Laikeshaa !

Youtube-பைப் பார்த்து ஆர்வத்தை வளர்த்துக்  கொண்டதாக அம்மா கூறினார். அது கூட வெறும் fun -னா ஒரு  பொழுதுப் போக்காகத் தானாம்.

ஆனால், நாளடைவில் தனது கைவண்ணத்தைப் பார்த்து தானே மிரண்டு போனதில், அதனையே உபரி வருமானத்திற்கான வழியாக்கிக் கொண்டால் என்ன? என இந்த 'வாண்டுக்கு' தோன்றிருக்கின்றது.

அம்மாவின் ஆசி - ஆதரவுடன் உடனே களத்தில் இறங்கி விட்டார்.

டிசைன் டிசைனாக கேக்குள் செய்துத் தள்ளியிருக்கிறார். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, பற்பல தவறுகளுக்குப் பிறகு, கற்றலுக்குப் பிறகு, #OreoCheeseCake செய்வதில் தேர்ந்து விட்டார்.

அந்த confident, அக்கணத்தில் இருந்து ஏறுமுகமானதே தவிர எங்கும் குறையவில்லை. வரிசையாக #BurntCheeseCake #ButterCake #ChocolateCake #CheeseTart #Bread என பிச்சி உதறி விட்டார். MCO காலத்தில் 20 கேக்குகளை விற்று விற்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


Devil Food Cake

Bread

Vanilla Butter Cupcake with Swiss Meringue Buttercream

அம்மாவின் பிறந்தநாளுக்கு மகளே செய்த கேக்

Vanilla Butter Cupcake

Delicious moist butter cake

Burnt Cake

Oreo Cheese Cake
இந்த இளம் வயதில் இதெல்லாம் ஆச்சரியம் தான்.

அதை விட ஆச்சரியம் இவரிடம் ஆர்டர்கள் குவிந்து அவரை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கின்றன.

விளைவு, கேக்குகளின் தரமும் நாளுக்கு நாள் வியக்க வைக்கிறது.


இந்த MCO காலத்தில் திடலில் இறங்க முடியவில்லையே என்ற ஒரு வருத்தம் தான்! என்னடா, வியன் திடீரென கால்பந்தாட்டத்தைப் பற்றி பேசுகிறான் என நினைக்கிறீர்களா?

ஆமாம், உங்களுக்குத் தெரியாது அல்லவா? நம்ம Laikeshaa கால்பந்திலும் கில்லாடி. கீழ் காணும் படங்களைப் பாருங்கள். என்ன லாவகமாக பந்தை உதைக்கிறார், எடுக்கிறார் என்று!

ada style bukan ?  😅👍
பள்ளி அளவிலும் மாவட்ட அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று திறமையை நிரூபித்தவர், 2016 முதல் #AstroKemBola திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அதிலும் குறிப்பாக 2018 நவம்பர் கடைசி முதல் டிசம்பர் வரை
Astro KemBola திட்டத்தின் கீழ் #Barcelona வரை சென்று வந்திருக்கிறார். திறமை இல்லாமல் கிடைக்குமா சுலபத்தில் இப்படியொரு வாய்ப்பு?



Barcelona பயிற்சியின் போது
அதே 2018-ஆம் ஆண்டில் பள்ளி அளவில் புறப்பாட நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியவருக்கான விருதுக்கும் இவர் மெரிட் மூலம் முன்மொழியப்பட்டிருக்கிறார். 👏

திடலில் 'பின்னியவர்' MCO காலத்தில் அதனை மிஸ் பண்ணுவதில் ஆச்சரியமில்லையே!

பரவாயில்லை, கிடைத்த நேரத்தை எப்படி வேண்டுமானாலும் பயனுள்ள வழிகளில் மாற்றிக் கொள்ளலாம் அல்லவா?

அதைத் தான் செய்திருக்கிறார் உங்கள் மகள், குகனேஸ்! அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து தட்டிக்  கொடுக்கும் உங்களை இந்த வியன் பாராட்டுகிறான்.  அவரின் திறமைக்கு நிச்சயம் மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு.

#bakebylakei #cupcakes #food #cake #quarantinecakes #quarantine 



Thevan Nadarajah 


Instagram-மில் stylish இளைஞனாக வலம் வருபவர். Self Grooming அதாவது தனது தோற்றத்தை எப்படி நேர்த்தயாக வைத்துக் கொள்வது என்பதை இவர் பதிவேற்றும் புகைப்படங்களைப் பார்த்தாலே தெரியும். கலையுலகிற்கு வரும் திறமை உண்டு.

ஆனால், இந்த 'ஒல்லிக் குச்சி உடம்புக் காரா' பையனிடம் இன்னொரு திறமையும் இத்தனை நாளாக ஒளிந்துக் கொண்டிருக்கின்றது என்பது இப்போது தான் வெளியே வந்திருக்கிறது பாருங்களேன்.

MCO காலத்தில் வீட்டில் இருந்த போது சொந்தமாக சமைத்து சாப்பிடலாம் என தொடங்கியவர்,  கேக்குகளை செய்துதான் பார்க்கலாமே என்றெண்ணியவர்.... கடைசியில் 'கேக் மன்னன்' ஆகி விட்டார்; சமையலிலும் பின்னி விட்டார்.


" நான் bake பண்ணி Insta -ல போட்ட படங்கள பார்த்து எனக்கு இப்போ ஆர்டர்ஸ் வர ஆரம்பிச்சிடுச்சு அண்ணே!. MCO-ல எனக்கு நான் சமைக்கப் போய் இன்னிக்கு ஆர்டர் எடுக்குற அளவுக்கு வந்துருச்சு!" என கூறி முடித்த போது பையன் குரலில் அத்தனை சந்தோஷம்.

இப்போது தெரிகிறது அண்ணனின் message-களுக்கு தாமதமாக பதில் வரும் போதே நினைத்தேன், ஏதாவது புதிய கேக் ரெசிப்பியுடன் பையன் பிசியாக இருப்பான் என்று 😛



சாதாரணமாக கேக்குகள் என்றாலே விழுந்து விடுவான் வியன் ( ரைமிங் சூப்பர்ல 😛 )

இதில், சாக்லெட் என்ன, பட்டர் என்ன, காப்பி என்ன, ஆரஞ்சு என்ன.... இப்படி வகை வகையாக போனால் என்ன தான் செய்வான்.

ஒரேடியாக விழுந்தே விட்டானயா, விழுந்தே விட்டான்!

ஒரு பக்கம் கேக்குகளை தெறியாய் தெறிக்க விட்டுக் கொண்டிருந்த தேவன், மற்றொரு பக்கம் பல்வகை பலகாரம், பதார்த்தங்கள், உள்ளூர் வெளியூர் சமையல் ரெசிப்பிகள் என பிசியாகி விட்டார். 

( வழக்கமாக clean shave-வாக காணப்படுபவர் மீசை தாடியெல்லாம் வளர்த்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு சமையலில் பிசியாகி விட்டார்) சபாஷ்டா தம்பி !!

அப்படி என்னதான் சமைத்து விட்டான் இந்தப் பையன் என கேட்கிறீர்களா? கீழ் காணும் படங்களைப் பாருங்கள். வியனுக்கு வாயில் எச்சில் ஊறாத குறை தான். வெளித்து வாங்கியிருக்கிறான். 




ரொம்ப சந்தோஷம்டா பையா! நீ கடை திறக்கற, அம்புட்டுதான், DOT!



Letchumee Rajendran


இவர் ஏற்கனவே #QuarantineCook -குகள் பதிவில் வந்தவர் தான். அப்போது சமையலில் பின்னியவர், இந்த MCO  பிற்பாதியில் கேக் செய்து மின்னுகிறார். வரிசை வரிசையாக ஆர்டர்கள் வருவதால் அக்கா ரொம்ப பிசி!




ஏற்கனவே #வியன் கூறியது போல, இந்த MCO காலம் நம்மால் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது. நீங்கள் செய்தவற்றையெல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடர் கட்டுரைகள் வருகின்றன. அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகள்!

#வியன் அகம் மகிழ்ந்தான் !

#MCO #CMCO #RMCO #PKP #PKPB #PKPP #Covid19 #Covid #Corona #CoronaVirus #Quarantine #QuarantineLife #QuarantineCook #QuarantineCooking #KitaJagaKita #SocialDistancing 

2 comments:

Unknown said...

கேக்குகள் கண்ணைப் பறிக்கின்றன...அனைவருக்கும் வாழ்த்துகள்!

kesavan era said...

சிறப்பான பதிவுகள்🥰🥰🥰🥰🥰