இங்லீஷ் பிரிமியர் லீக் பருவம் நாளையோடு முடிவுக்கு வருகிறது!
கொரோனா வைரஸ் பாதிப்பால், ஆட்டங்கள் தொடருமா இல்லையா? லீக் பட்டம் கிடைக்குமா கிடைக்காதா? என்ற கேள்வியெல்லாம் போய், #லிவர்பூல் பட்டத்தை வென்று 30 ஆண்டு கால கனவை நிறைவேற்றியும் விட்டது.
பட்டத்தைத் தற்காக்கத் தவறிய #ManchesterCity இரண்டாம் இடத்தை உறுதிச் செய்து, #ChampionsLeague -கிற்குத் தகுதிப் பெற்று விட்டது.
இப்போது வழக்கம் போல், எஞ்சிய 2 இடங்கள் யாருக்கு என்பது தான்!
இந்த உள்ளே வெளியே போட்டியில் வந்து நிற்பது முன்னாள் வெற்றியாளர்கள் மூவர்
Manchester United, Chelsea, Leicester City
இதில் பேருந்தைத் தவற விடப் போவது யார் ?
எங்கே நமது அணி வெளியே போய் விடுமோ என்ற ஒரு வித அச்சம் ரசிகர்களை ஆட்கொண்டிருந்தாலும், வெளியில் நம்பிக்கையுடன் வலம் வருகிறார்கள்.
எது நடந்தால் உள்ளே, எது நடந்தால் வெளியே என்பதைப் பார்ப்போமா?
Manchester United
கடந்தாண்டு செப்டம்பரில் இருந்து கடந்த வாரம் வரை முதல் 4 இடங்கள் பக்கமே தலைக் காட்டாத United, இப்போது மூன்றாமிடத்தில்!
கடைசி 2 ஆட்டங்களில் வெற்றியை நழுவ விட்டு, சமநிலை கண்டாலும், Chelsea புண்ணியத்தில் ( The Blues-சின் அடுத்தடுத்தத் தோல்விகளால்) 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது United.
United - Chelsea இரு அணிகளுமே சமமாக 63 புள்ளிகளை வைத்திருக்கின்றன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் தான் United மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.
என்றாலும், இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், கோல் வித்தியாசமும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
சரி, United-டுக்கு முதல் 4 இடங்கள் உறுதியாக வேண்டுமென்றால் நாளை என்ன நடக்க வேண்டும்?
அப்படி ஒன்றும் பெரிதாக செய்து விட வேண்டியதில்லை; Leicester-ரிடம் தோல்வி காணாமல் பார்த்துக் கொண்டாலே போதும்.
அதாவது குறைந்தபட்சம் சமநிலைக் கண்டு 1 புள்ளியைப் பெற்று விட வேண்டும். Leicester-ருக்கும் ஒரு புள்ளி கிடைத்தாலும், அதன் மொத்தப் புள்ளிகள் 63-ராக அதிகரிக்குமே தவிர, United-டின் 64 புள்ளிகளைத் தொட முடியாது.
ஆக, Chelsea - Wolves ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி கவலைப்படாமல் United அசால்டாக Champions League தகுதிச் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
ஒருவேளை, United தோல்வி கண்டு, Chelsea-யும் Wolves-சிடம் தோற்று விட்டாலும் கூட, United-டுக்கு நான்காம் இடம் உறுதியாகி அது நுழைந்து விடும் ( காரணம், Chelsea-யின் கோல் வித்தியாசம், United-டை விட பலவீனமாக இருப்பது)
என்றாலும், சுருக்கமாகச் சொன்னால், United-டுக்குத் நாளைத் தேவை 1 புள்ளியே!
"நான்காம் இடம் என்னங்க, நான்காம் இடம்? மூன்றாம் இடத்திற்கே போவோம்! Leicester-கூட தான் ஆட்டம், வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது"
அறிவானந்தன் மாரிமுத்து
" கொஞ்சம் இருக்கு வாய்ப்பு. Leicester கூட ஜெயிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா, draw பண்ணலாம் "
அழகேந்திரன் கிருஷ்ணன்
Chelsea
Frank Lampard-டின் அணி கொஞ்சம் கொஞ்சமாக Leicester-ரை விரட்டிப் பிடித்து 3-வது இடத்தைப் பிடித்திருந்தது. Confirm என்ற உறுதியாக நினைத்திருந்த நிலையில் தான், ஆகக் கடைசி 2 ஆட்டங்களில் கண்ட தோல்வியால் சற்று ஆட்டம் கண்டு, இன்று நான்காம் இடத்தில் உள்ளது.
இப்போது கூட, நிலைமை அதற்குச் சாதகமாகத் தான் உள்ளது. ஆனால், எதிரே வில்லனாக நிற்பது Wolves.
ஒரு காலத்தில் பெரிய அணிகள் எல்லாம் 'துவைத்து' எடுக்கும் அளவுக்கு பலவீனமாகக் கருதப்பட்ட Wolves, இப்பருவ ஐரோப்பா லீக்கில் இருக்கிறது என்பதே பலருக்குத் தெரியாது.
அந்த அளவுக்கு பலம் பெற்று ( அதுவும் Tottenham, Arsenal, Everton அணிகளை எல்லாம் கீழே தள்ளி விட்டு ) திகழ்கிறது.
59 புள்ளிகளுடன் இருக்கும் Wolves-சுக்கும் நாளைய ஆட்டம் முக்கியம். வெற்றிப் பெற்றால் ஆறாம் இடத்தை உறுதிச் செய்து கொண்டு மீண்டுமொரு முறை ஐரோப்பா லீக்கிற்குள் நுழைந்து விடலாம்.
பின்னால் Tottenham-மும் துரத்தி வருவதால், Wolves கண்டிப்பாக வெற்றிப் பெறவே போராடும்.
ஆக, என்னதான் ஆட்டம் நாளை Stamford Bridge-ஜில் நடைபெற்றாலும், Chelsea-யைச் சந்திக்கப் போவது சாதாரண Wolves அல்ல.
Chelsea-க்கு குறைந்தபட்சம் தேவைப்படுவது 1 புள்ளி. ஆனால், United-டிடம் Leicester தோற்க வேண்டும். அப்போது தான் 4-காம் இடம் Chelsea-க்கு உறுதியாகும்.
ஒருவேளை Wolves-சிடம் தோற்றால் கூட Chelsea-க்கு இன்னமும் வாய்ப்பு இருக்கிறது, அதாவது Leicester-ரும் தோற்க வேண்டும். எதற்கு இப்படி குழப்பிக் கொண்டு?
பேசாமல் வென்று விடுங்களேன், மூன்றாவது இடம் கூட கிடைத்து விடும். ரசிகர்களும் நிம்மதி அடைவார்கள்.
"வாய்ப்பு இருக்கு. 3-வது 4-வது இடம் எப்படியும் இருக்கு. Lampard coach-சா வந்து இந்த மாதிரி young players-சை வச்சிக்கிட்டு இந்த அளவுக்கு team-மை கொண்டு வந்ததே பெரிய விஷயம்!"
வீரசேனன் குணசேகரன்
Prem Kumar
Leicester City
பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது. பின்னே, மூன்றாவது இடத்தில் இருந்து சரிந்து இன்று 5-வது இடத்தில் அல்லவா உள்ளது!
எல்லாம் கடைசி 8 ஆட்டங்களில் வெறும் 2-டில் மட்டுமே வெற்றிப் பெற்றதால் வந்தது.
United-டைத் தோற்கடித்தால் Leicester கண்டிப்பாக உள்ளே! ஆனால், அது சாதாரண விஷயம் இல்லை என்பது அதற்கே தெரியும்.
ஒருவேளை சமநிலைக் கண்டால் கூட Leicester-ருக்கு வாய்ப்பு உண்டு - ஆனால், Chelsea, Wolves-சிடம் தோல்வி காண வேண்டும்.
அப்படி நடந்தால் இரு அணிகளுமே தலா 63 புள்ளிகளைக் கொண்டிருக்கும், ஆனால் கோல் வித்தியாசம் Leicester-ருக்கே சாதகமாக இருப்பதால் நாங்காவது இடம் Leicester-ருக்கே!
தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒன்று வெற்றிப் பெற்று ராஜாவாக உள்ளே நுழைவது, அல்லது சமநிலைக் கண்டு, Chelsea-யின் புண்ணியத்திற்காகக் காத்திருப்பது! இந்த இரண்டு தேர்வுகள் தான் உள்ளன.
இந்த உள்ளே வெளியே போட்டி குறித்து சமூக வலைத்தளங்களில் memes-களுக்கு குறைவில்லை. குறிப்பாக United Chelsea அணிகளைக் கிண்டலடித்து....
கடைசி ஆட்டம் என்பதால் நாளை அனைத்தும் ஒரே நேரத்தில் இரவு 11 மணிக்குத் தொடங்கும்.
மறுநாள் அதிகாலைத் தெரிந்து விடும்...
Liverpool, Manchester City-யுடன் Champions League-கிற்குள் நுழையப் போவது யார்?
இரண்டாம் டிவிஷனுக்குக் கீழிறங்கப் போவது யார் என்று!
திங்கட்கிழமை காலை Facebook வந்தால் தெரியும்......
அதுவரை, முழு மனமில்லை என்றாலும் 3 குழுக்களையும் வாழ்த்துகிறான் #வியன்

" Top 4 Confirm-ங்கோ! அம்புட்டு தான்..."
" கொஞ்சம் இருக்கு வாய்ப்பு. Leicester கூட ஜெயிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா, draw பண்ணலாம் "
அழகேந்திரன் கிருஷ்ணன்
" எப்படியும் Champions League போயிருவோம்னு நம்பிக்கை இருக்கு!"
Chelsea
Frank Lampard-டின் அணி கொஞ்சம் கொஞ்சமாக Leicester-ரை விரட்டிப் பிடித்து 3-வது இடத்தைப் பிடித்திருந்தது. Confirm என்ற உறுதியாக நினைத்திருந்த நிலையில் தான், ஆகக் கடைசி 2 ஆட்டங்களில் கண்ட தோல்வியால் சற்று ஆட்டம் கண்டு, இன்று நான்காம் இடத்தில் உள்ளது.
இப்போது கூட, நிலைமை அதற்குச் சாதகமாகத் தான் உள்ளது. ஆனால், எதிரே வில்லனாக நிற்பது Wolves.
ஒரு காலத்தில் பெரிய அணிகள் எல்லாம் 'துவைத்து' எடுக்கும் அளவுக்கு பலவீனமாகக் கருதப்பட்ட Wolves, இப்பருவ ஐரோப்பா லீக்கில் இருக்கிறது என்பதே பலருக்குத் தெரியாது.
அந்த அளவுக்கு பலம் பெற்று ( அதுவும் Tottenham, Arsenal, Everton அணிகளை எல்லாம் கீழே தள்ளி விட்டு ) திகழ்கிறது.
59 புள்ளிகளுடன் இருக்கும் Wolves-சுக்கும் நாளைய ஆட்டம் முக்கியம். வெற்றிப் பெற்றால் ஆறாம் இடத்தை உறுதிச் செய்து கொண்டு மீண்டுமொரு முறை ஐரோப்பா லீக்கிற்குள் நுழைந்து விடலாம்.
பின்னால் Tottenham-மும் துரத்தி வருவதால், Wolves கண்டிப்பாக வெற்றிப் பெறவே போராடும்.
ஆக, என்னதான் ஆட்டம் நாளை Stamford Bridge-ஜில் நடைபெற்றாலும், Chelsea-யைச் சந்திக்கப் போவது சாதாரண Wolves அல்ல.
Chelsea-க்கு குறைந்தபட்சம் தேவைப்படுவது 1 புள்ளி. ஆனால், United-டிடம் Leicester தோற்க வேண்டும். அப்போது தான் 4-காம் இடம் Chelsea-க்கு உறுதியாகும்.
ஒருவேளை Wolves-சிடம் தோற்றால் கூட Chelsea-க்கு இன்னமும் வாய்ப்பு இருக்கிறது, அதாவது Leicester-ரும் தோற்க வேண்டும். எதற்கு இப்படி குழப்பிக் கொண்டு?
பேசாமல் வென்று விடுங்களேன், மூன்றாவது இடம் கூட கிடைத்து விடும். ரசிகர்களும் நிம்மதி அடைவார்கள்.
"வாய்ப்பு இருக்கு. 3-வது 4-வது இடம் எப்படியும் இருக்கு. Lampard coach-சா வந்து இந்த மாதிரி young players-சை வச்சிக்கிட்டு இந்த அளவுக்கு team-மை கொண்டு வந்ததே பெரிய விஷயம்!"
"எப்படினு பார்ப்போம். எதையும் predict பண்ண முடியாது!"
வெற்றி வாய்ப்பு
இன்னமும் எங்கள் பக்கமே. சமநிலை கண்டாலே போதும் என்ற நிலை தான்; Leicester வெற்றிப் பெற்றால் மட்டுமே எங்கள் பாட்டம் திண்டாட்டம். தற்காப்பு
அரணும் வலுவிழந்து உள்ளதால் மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். Chelsea-யுடன்
United-டும் தகுதிப் பெறும் என்றே நினைக்கிறேன்.
வீரசேனன் குணசேகரன்
"நான் கண்டிப்பா
நம்புறேன், மூனாவது இடம் Chelsea-கு தான். Wolves கிட்ட ஜெயிப்போம், சந்தேகமே இல்ல.
Kante வேற வந்துட்டாரு, அப்போ பார்த்துக்கோங்களேன்!"
Elvin Prince Jay
"கஷ்டம் தான்
Top Four வரது. Points-லாம் ரொம்ப ரொம்ப கிட்ட இருக்கு. இருந்தாலும் நாளைக்கு game
ஜெயிச்சே ஆகனும். ஏனா, United - Leicester என்ன ஆகும்னு தெரியாது. இங்க ஜெயிச்சா தான்
உண்டு. எனக்கு என்னமோ FA Cup ஜெயிக்கிற வாய்ப்பு தான் பிரகாசமா இருக்குனு தோணுது"
Prem Kumar
Leicester City
பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது. பின்னே, மூன்றாவது இடத்தில் இருந்து சரிந்து இன்று 5-வது இடத்தில் அல்லவா உள்ளது!
எல்லாம் கடைசி 8 ஆட்டங்களில் வெறும் 2-டில் மட்டுமே வெற்றிப் பெற்றதால் வந்தது.
United-டைத் தோற்கடித்தால் Leicester கண்டிப்பாக உள்ளே! ஆனால், அது சாதாரண விஷயம் இல்லை என்பது அதற்கே தெரியும்.
ஒருவேளை சமநிலைக் கண்டால் கூட Leicester-ருக்கு வாய்ப்பு உண்டு - ஆனால், Chelsea, Wolves-சிடம் தோல்வி காண வேண்டும்.
அப்படி நடந்தால் இரு அணிகளுமே தலா 63 புள்ளிகளைக் கொண்டிருக்கும், ஆனால் கோல் வித்தியாசம் Leicester-ருக்கே சாதகமாக இருப்பதால் நாங்காவது இடம் Leicester-ருக்கே!
தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒன்று வெற்றிப் பெற்று ராஜாவாக உள்ளே நுழைவது, அல்லது சமநிலைக் கண்டு, Chelsea-யின் புண்ணியத்திற்காகக் காத்திருப்பது! இந்த இரண்டு தேர்வுகள் தான் உள்ளன.
இந்த உள்ளே வெளியே போட்டி குறித்து சமூக வலைத்தளங்களில் memes-களுக்கு குறைவில்லை. குறிப்பாக United Chelsea அணிகளைக் கிண்டலடித்து....
கடைசி ஆட்டம் என்பதால் நாளை அனைத்தும் ஒரே நேரத்தில் இரவு 11 மணிக்குத் தொடங்கும்.
மறுநாள் அதிகாலைத் தெரிந்து விடும்...
Liverpool, Manchester City-யுடன் Champions League-கிற்குள் நுழையப் போவது யார்?
இரண்டாம் டிவிஷனுக்குக் கீழிறங்கப் போவது யார் என்று!
திங்கட்கிழமை காலை Facebook வந்தால் தெரியும்......
அதுவரை, முழு மனமில்லை என்றாலும் 3 குழுக்களையும் வாழ்த்துகிறான் #வியன்
No comments:
Post a Comment