'மந்திரக் கை' எனப் பெயரே வைத்து விட்டான் #வியன்!
சும்மா இருக்குமா, அடுத்தடுத்து அதிரடியைத் தொடருகிறது அக்கை...
'நம்ம ஊரு பெருமை' கண்ணன் ராஜமாணிக்கத்தைப் பற்றிய இரண்டாவது பதிவு இது...
இவ்வளவு சீக்கிரமே வரும் என வியனே எதிர்பார்க்கவில்லை.
ஆனால், எழுத வைத்து விட்டார் மனிதர்.
இக்கால கனவுக் கன்னிகள் ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, ஷ்ரேயா என recreation-னில் இதற்கு முன் பட்டையைக் கிளப்பியவர், அதிரடியாக அக்காலக் கனவுக் கன்னியும், பின்னாளில் தமிழகமும், இந்தியாவும் ஏன் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்து நின்ற இரும்புப் பெண்மணியை அல்லவா நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.
'அம்மா' என அழைக்கப்படும் மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை தனது magic கைகளாலும், ஒப்பனைத் திறமையாலும் recreate செய்ய வேண்டும் என கண்ணனுக்கு எண்ணம் வந்ததே பெரிய விஷயம்.
ஆனால், அதன் output அச்சு அசலாக இருக்கும் வண்ணம் செய்து மீண்டும் வியனிடம் சபாஷ் பெறுகிறார் பையன்.
ஆரம்பக் காலத்தில் சினிமாவை ஆண்ட சமயத்தில், துருதுருவென்ற நடிப்பு மட்டுமல்லாமல், தனது நடனத் திறமையாலும் ஒட்டு மொத்த ஊரையும் கவர்ந்தவர் அப்போதைய நம் கலையரசி ஜெயலலிதா.
அப்படி அவர் நாட்டியத்தால் மக்களைக் கவர்ந்த படங்களில், குறிப்பாக தெய்வக் கதாபாத்திரங்களில் அவராடும் ருத்ர தாண்டவம் மெய் சிலிர்க்க வைக்கும்.
அதில் குறிப்பிடத்தக்கது தான், 'ஆதிபராசக்தி' படத்தில் சிவபெருமானின் துணைவியாக அவர் வந்தாடும் 'வருகவே வருகவே...இறைவா என் தலைவா.!' என்ற பாடல் காட்சி.
👉வருகவே வருகவே பாடல் காட்சி 👈
படத்தின் கடைசியில் வரும் அதில், ஆதிபராசக்தியின் அம்சமான அன்னை தாட்சாயிணியாக ஜெயலலிதா சாந்த சொரூபிணியாகவும், தந்தையே எதிர்க்கும் நிலை வரும் போது மகா காளியாகவும் காட்சித் தருவார்.
நடிப்புக்கு ஈடாக அவரின் ஒப்பனை அமைந்திருக்கும்; தெய்வாம்சம் பொருந்திய முகம் அது.
அதை தனது கைவண்ணத்தில் மறு உருவாக்கம் செய்து, கிட்டத்தட்ட அசலைத் தொட்டு விட்டார் கண்ணன்.
ஒப்பனை மட்டுமல்ல உடலமைப்பு என பார்த்து பார்த்து தெரிவு செய்து, மங்கை சாம்பசிவத்தை அன்னை தாட்சாயிணியாக மாற்றி, ஜெயலிதாவுக்கு மரியாதை செலுத்தியுள்ள அதே வேளை, மங்கைக்கும் தனது வாழ்நாளில் மிகப் பெரிய கௌரவத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
கண்ணன் நினைத்திருந்தால், ஜெயலலிதாவின் கடைசிக் கால உண்மைத் தோற்றத்தையோ, அல்லது சினிமாவில் வெற்றி கதாநாயகியாக வலம் வந்த போது இருந்த தோற்றத்தைதோ கையில் எடுத்துக் கொண்டு, இதோ 'அம்மாவை' recreation செய்திருக்கிறோம், பாருங்கள் என கூறிக் கொண்டிருக்கலாம்.
ஆனால், சவாலுக்கே சவால் விடுபவர் அல்ல நம்ம பையன்.
அதனால் தான் அன்னை தாட்சாயிணியை நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார்.
அதே சிவப்பு சேலை, தெய்வ கிரீடம், நெற்றிக் குங்குமம், அன்னையின் ஆபரணங்கள் என ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து ஒப்பனைச் செய்திருக்கிறார்.
அந்த புகைப்பட shoot-டும், அப்படத்தில் வரும் காட்சிகளை ஒத்திருப்பதால், அதன் நம்பகத்தன்மை கூடுகிறது.
மங்கையும், கண்ணன் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், அம்சமாகப் பொருந்திருக்கிறார் தாட்சாயிணி கேரக்டருக்கு.
என்னடா, ஓவராக வர்ணிக்கிறானே வியன் என நினைக்காதீர்கள்.
ஆதிபராசக்தி படத்தின் தீவிர ரசிகனான வியன், தாட்சாயிணி கடைசியில் சிவபெருமான் ( ஜெமினி கணேசன் ) உடன் ஆடும் நடனத்தை இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னமும் பார்த்துப் பார்த்து ரசிப்பவன்.
ஆக, கண்ணனின் இந்த அதிரடியில் வியன் விழுந்ததில் ஆச்சரியம் இல்லை.
கண்ணா, உன்னைப் புகழ இனி வார்த்தைகள் இல்லை.
முந்தையப் பதிவில் சொன்னது தான்....
" தம்பி, நீ இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லப்பா!
உன் திறமைக்கும், பணிவுக்கும் நிச்சயம் சீக்கிரமே உனைத் தேடி சிம்மாசனம் வரும்.
அதை ஒட்டு மொத்த நாடே கண்டு ரசிக்கும் நாள் வெகு தூரமில்லை."
#வியன் வியந்தான் விழுந்தான்......!

2 comments:
Mei silirkum article ..tq sir..very deep emotional write up..amma datchayini bless u
Tv/NtTi - Titanium Tube - Baojititanium
I am not the biggest fan of tv tv tv tv tv tv tv tv tv tv tv tv 라이트닝 바카라 사이트 tv tv tt tv tv t v tv tt tt 예스 벳 tv tt tv ttt tt tv tt ttt tt tv tt ttt tt tv tt tt tt tt tt ttt ttt tt tt ttt tt ttt tt 바카라사이트 tt tt ttt tt tt tt ttt tt tt ttt tt tt 벳 인포 ttt ttt tt tt tt tt tt tt ttt tt tt ttt titanium wire tt tt
Post a Comment