அம்னோ, இன்னமும் அதன் தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.
என்னதான், அவர் 90 நீதிமன்ற வழக்குகளை ( மலேசிய வரலாற்றிலேயே மிக அதிகமாக வழக்குகளைச் சந்தித்த தலைவர்) சந்தித்தாலும், மற்ற தலைவர்கள் குறிப்பாக துணைத் தலைவர் Datuk Seri Mohd Hassan அடிமட்ட அளவில் பிரபலமாக தெரிந்தாலும், Zahid-டை அசைக்க முடியவில்லை.
தேர்தலில் தோல்வி
கண்டு எதிர்கட்சியானதும், விரைவிலேயே அம்னோ அரசாங்கத்திற்குத் திரும்புமெனக் கூறியிருந்தார்.
அதற்கு சில அம்னோ தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கொல்லைப் புற வழியாக போகக் கூடாது, அடுத்தத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று...
Well Done Zahid, Welcome Back
UMNO !
என்னதான், அவர் 90 நீதிமன்ற வழக்குகளை ( மலேசிய வரலாற்றிலேயே மிக அதிகமாக வழக்குகளைச் சந்தித்த தலைவர்) சந்தித்தாலும், மற்ற தலைவர்கள் குறிப்பாக துணைத் தலைவர் Datuk Seri Mohd Hassan அடிமட்ட அளவில் பிரபலமாக தெரிந்தாலும், Zahid-டை அசைக்க முடியவில்லை.
Photo Credit : Hadi Azmi/BenarNews |
அதற்கு சில அம்னோ தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கொல்லைப் புற வழியாக போகக் கூடாது, அடுத்தத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று...
ஆனால், ஒன்றரை
ஆண்டுகளிலேயே அதனை Zahid நிறைவேற்றிக் காட்டி விட்டார்.
நீதிமன்றப் படிக் கட்டுகளில் ஏறும்
நிலை மட்டும் அவருக்கில்லை என்றால், முகிதின் அரசாங்கத்தில் இன்று அவர் தான் துணைப்
பிரதமராக இருந்திருப்பார்.
அம்னோ ஆட்சிக்குத்
திரும்பி, அமைச்சரவையில் இடம் பெற்று, பழைய தெம்புடன் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
இருந்தாலும்,
60 ஆண்டு காலமாக உட்கார்ந்து பழகிப் போன பிரதமர் நாற்காலி நமக்கில்லையே என்ற வருத்தம்
அவர்களிடம் இல்லாமல் இல்லை. ஆனால், அதைக் கேட்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. முகிதின்
- அஸ்மின் அலி அங்கிருந்து பிரிந்து வராமல் இருந்திருந்தால், இன்னமும் அம்னோ எதிர்கட்சி
தான். ஆக, நிதர்சன உண்மையை ஏற்றுக் கொண்டு ஆட்சிக்கு வந்ததே பெரிய விஷயம் என்று இருக்கிறார்கள்.
இந்த சந்தடி சாக்கில்
தான் அண்மைய காலமாக 15-அவது பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்ற பட்டிமன்றம்
தொடங்கியது.
ஏதோ இந்த இடைப்பட்ட
காலத்திற்கு தான் பிரதமர் பதவியை விட்டுக்
கொடுத்தோம் என்றால், பொதுத் தேர்தலுக்கும் அப்படியா? நம்மிடம் தகுதியான வேட்பாளர்களே
இல்லையா? என அங்குமிங்குமாக குரல்கள்.
அம்னோவின் புதியக்
கூட்டாளி, பாஸ் கட்சியும் முகிதினுக்கே பல்லக்குத் தூக்கியது, தாங்கள் Muafakat
Nasional கூட்டணியில் இருக்கிறோம் என்பதை சற்று மறந்து...
இப்படி உள்ளுக்குள்
புகைந்துக் கொண்டிருந்த நிலையில் தான் அந்த Master Stroke அறிவிப்பு வந்தது. அதுவும்
நஜீப் வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட
2 நாட்களுக்குப் பிறகு!
"
Perikatan Nasional தேசியக் கூட்டணியில் அம்னோ
இணையாது. மாறாக, PAS கட்சியுடன் இணைந்து Muafakat Nasional கூட்டணி வலுப்படுத்தப்படும்!"
என்று
#வியன் பார்வையில்
இது Zahid தனது அரசியல் வாழ்வில் அடித்த Master Stroke அடி. அதற்காக அவருக்கு முதலில்
சபாஷ் போடலாம்.
என்ன வியன், அப்படி
என்ன செய்து விட்டார், ஒன்றும் இல்லாத விஷயத்துக்கு இப்படி புகழுகிறீரே என கேட்கிறீர்களா?
அதில் இல்லாத விஷயம்
வேறெதில் இருக்கிறது?
ஆம், அந்த ஒரே
அறிவிப்பில் Putrajaya-வை நோக்கிய அடுத்தப் பந்தயத்தில் I'm The Boss! என்பதைச் சொல்லாமல்
சொல்லி, அம்னோவை முன் சீட்டில் கொண்டு வந்து
அமர்த்தியிருக்கிறார்.
#PerikatanNasional கூட்டணியில் இணைந்தால், பத்தோடு பதினொன்றாக உறுப்புக் கட்சியாக இருக்க முடியுமே
ஒழிய, அம்னோவால் தலைமைப் பொறுப்புக்கு வர முடியாது என்ற ஒரு அச்சம் இருக்கவே செய்கிறது.
காரணம், தற்போதைக்கு,
நாட்டை ஆளும் திறமை முகிதின் யாசினைத் தவிர, உடன் இருக்கும் எவருக்கும் இல்லை என்பது
அவர்களுக்குத் தெரியும்.
ஒன்று, இருப்பவர்கள்
நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியிருக்கிறனர்' மற்றவர்கள் அனுபவம் போதாமல் இருக்கின்றனர்.
இருந்தாலும் இது
தற்காலிக ஏற்பாடு தான்.
தேர்தல் என வந்து
விட்டால், இந்த ஏற்பாடெல்லாம் செல்லாது.
அம்னோ ஏற்கனவே #BarisanNasional என்ற 60 ஆண்டு கால வலுவான கூட்டணியை வைத்திருக்கிறது.
தேர்தலில்
தேரை தாம் தான் செலுத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்கு வந்து நிற்கிறது.
ஆக, Perikatan
Nasional-லை அதிகாரப்பூர்வ கூட்டணியாகப் பதிவுச் செய்து, உடன் வரும் பயணியாக இருப்பதற்கு பதிலாக, #MuafakatNasional என்ற
பேருந்தை இனி தானே செலுத்த முடிவெடுத்திருக்கிறது.
அதனைச் சரியான
நேரத்தில் Zahid செய்திருக்கிறார்.
தவிர,
Muafakat Nasional கூட்டணியில் BERSATU இணைய விரும்புகிறது; அதனை பேசி முடிவெடுப்போம்
என்றும் சொல்லி முடித்திருக்கிறார்.
பிரதமரின் கட்சியை
சேர்த்துக் கொள்வதா இல்லையா என்பதையே இனி நாங்கள் தான் முடிவு செய்யப் போகிறோம் என்ற
சொல்லியிருப்பதன் மூலம், ஒரு பெரிய Power Shift
அதாவது அதிகார நகர்வை அரங்கேற்றியிருக்கிறார்.
அந்த அறிவிப்பு
வந்த கணத்தில் இருந்து அம்னோ தலைவர்களும் தொண்டர்களும் தங்களின் சட்டைக் காலரைத் தூக்கி
நடந்து போகின்றனர்.
நஜீப் வழக்கில்
வந்தத் தீர்ப்பால் சோர்ந்துப் போயிருந்த அம்னோ உறுப்பினர்களை, 2 நாட்களில் நெஞ்சை நிமிர்த்தி
நடக்கச் செய்திருக்கிறார்.
சரி அம்னோவுக்கு
இது ஏற்றம் என்றால், முகிதினுக்கு இது பெருத்த பின்னடைவாக அல்லவா இருக்கும்?
கண்டிப்பாக இல்லை!
முகிதின் போட்ட
கணக்கே வேறு.
மக்கள் மத்தியில்
வெறுப்பை எதிர்கொள்ள நேரிடும் என நன்றாக தெரிந்திருந்தும், தைரியமாக பக்காத்தானை விட்டு
அவர் வெளி வந்த போதே அது புலப்பட்டு விட்டது.
"பக்காத்தானுக்கு
இனியும் செல்வாக்கு இல்லை. வாக்காளர்கள் மத்தியில் குறிப்பாக மலாய்க்காரர்கள் மத்தியில்
அது அடிமட்டத்திற்குப் போய் விட்டது. அம்னோ-பாஸ் கட்சிகள் குறிப்பாக அம்னோவுக்கு மாற்றாக,
மலாய்க்காரர்களின் உரிமைக் காக்கும் கட்சியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதில்
BERSATU தோல்வி கண்டு விட்டது."
இது தான் BERSATU-வை போட்டுக் குழப்பியது!
குறிப்பாக, ஜொகூர்
Tanjong Piai நாடாளுமன்ற இடைத் தேர்தலில் கிடைத்த வரலாறு காணாத படுதோல்வியை அது வாழ்நாள்
முழுவதும் மறக்காது.
எதிரே சீன வேட்பாளர் களமிறங்கியும், 15 ஆயிரம் வாக்குகளில் படுதோல்வி
கண்டது BERSATU-வை ரொம்பவே கலங்கச் செய்து விட்டது.
ஆளுங்கட்சியொன்று இடைத் தேர்தலில்
இவ்வளவு மோசமாக தோற்றது மலேசிய வரலாற்றில் இது தான் முதன் முறை.
Credit nthqibord.com |
பக்காத்தானில்
இருந்தால் இனியும் எதிர்காலம் இல்லை.
அடுத்தப் போதுத் தேர்தலில் ஒற்றை இலக்கத்தில்
கூட சீட்டுகளை வெல்ல முடியாது என்ற நிதர்சன உண்மைக்கு வந்தப் பிறகே, இனி கொள்கையாவது
கோட்பாடாவது, அரசியலில் 'உயிர் வாழ்வதே' முக்கியம் என்ற முடிவுக்கு வந்து, எதிரிகளுடன்
கைக்கோர்த்தார் முகிதின்.
வந்தவருக்கு, பிரதமர்
பதவியுடன், சில முக்கிய அமைச்சுகளும்.
ஜொகூரில் Menteri Besar பதவி கட்சியை விட்டுப்
போனாலும், மத்திய அரசாங்கத்தின் முதல் நிலைப் பதவியே கைவசம் இருப்பதால் கவலை என்ன?
அவர் வந்த நேரம்,
கொரோனா வைரஸ் மோசமாகி, அதனை அரசு கையாண்ட விதத்தால் அவரின் தலைமைத்துவம் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்று தந்து
விட்டது. " உங்களைப் போல் ஒரு பிரதமரை நாங்கள் பார்த்ததில்லை!" என்றளவுக்கு
புகழாரங்கள் தெறிக்கின்றன.
பிரதமர் ஆனதன்
மூலம், தனது அரசியல் வாழ்வில் உச்சத்தை முகிதின் தொட்டு விட்டார்., நாளையே பதவிப் போனாலும்,
இனி அவர் இழக்க ஒன்றுமில்லை.
பக்காத்தானில்
இருந்துக் கொண்டு, அன்வாருக்கு அடுத்த நிலையில் இருப்பதை விட, இங்கு பிரதமராக அவர்
வலம் வருகிறார்.
அங்கிருந்தால்,
அடுத்தப் போதுத் தேர்தலில் 5-6 சீட்டுகள் கூட கிடைக்காது; அதற்கு பேசாமல் Muafakat
Nasional கூட்டணியில் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பது அவர்களின் நம்பிக்கை.
இன்றையத் தேதிக்கு
BERSATU-UMNO-PAS கூட்டணிக்கே தேர்தலில் வெற்றி
என பல கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Muafakat
Nasional கூட்டணியில் அவர்கள் தரப் போவது
20-30 சீட்டுகள் என்றாலும், அவற்றை வாங்கிக் கொண்டு, அதில் ஜெயித்து வந்து விடலாம்
என்பதே கணக்கு..
ஆக, அரசியல் ரீதியில்
முகிதின் எடுத்துள்ள முடிவு அவருக்கு பின்னடைவு அல்ல. #Abah என கொண்டாடப்படும் அவர், தேர்தலுக்குப்
பிறகு ஒரு வேளை பதவியில் இல்லா விட்டாலும் தொடர்ந்து மரியாதையுடன் வலம் வருவார்.
மே 9 பொதுத் தேர்தல்
தோல்விக்குப் பிறகு அம்னோவின் கதை முடிந்தது; இனி எழுந்திருக்கவே முடியாது என்று தான் பேச்சு வந்தது.
ஏன், நம்
Oxford Return, Khairy Jamaluddin கூட, பக்காத்தானை வீழ்த்த குறைந்தது 15 ஆண்டுகளாவது
ஆகும் எனக் கூறியிருந்தார்.
ஆனால், இன்று நிலைமை?
ஆட்சியை அதுவாகவே
விழச் செய்து, முகிதினுக்கு தற்காலிகமாக விட்டுக் கொடுத்து, கடைசியில் நான் தான் கொப்பன்டா நல்ல முத்து பேரன்டா என அறிவித்து விட்டது.
அடுத்தாண்டு அம்னோ
கட்சித் தேர்தல் நடக்க வேண்டும்.
ஏற்கனவே கூறியபடி,
Zahid-டை எதிர்த்து Khairy இம்முறை களமிறங்குவார்.
அல்லது துணைத் தலைவர் Tok Mat-டுக்கு
வழி விட்டு ஒதுங்குவார்.
ஆனால், தற்போதைய
நிலவரப்படி, Zahid-டை வீழ்த்தும் சக்தி எவருக்கும் இல்லை.
தோற்ற கட்சியை
மீட்டு, குறுக்கு வழியாக இருந்தாலும் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து, அம்னோவை
முன் சீட்டில் கொண்டு வந்து விட்டிருக்கிறார்.
அந்த வகையில் அவர் Champion-னே!
#வியன் சொல்லி
முடிப்பது ஒன்று தான்...
1 comment:
Tata vin aalamana amaithi ethoyo nokki nagarkindrethey sar...
Post a Comment