உலகம் கண்ட அதி மின்னல் வேக வீராங்கணை Flojo |
FLOJO என செல்லமாக அழைக்கப்படும் Florence Griffith Joyner அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் அதிவேக ஓட்டக்காரர். 80-ஆம் ஆண்டுகளின் கடைசியில் உலக ஓட்டப்பந்தய அரங்கையே புரட்டிப் போட்டவர். இவர் செய்த உலக சாதனை நேரத்தை இன்று வரை நெருங்கக் கூட ஆளில்லை. 1988 சோல் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கத்தை வென்று ஒலிம்பிக் நட்சத்திரமாக மின்னியவர்.
இன்னும் முறியடிக்கப்படாமல் இருக்கும் Flojo-வின் உலக சாதனை நேரம்
100 மீட்டர் : 10.49 வினாடிகள் ( 1988 ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க தகுதிச் சுற்று)
200 மீட்டர் : 21.34 வினாடிகள் ( 1988 சோல் ஒலிம்பிக்)
சிலர் ஓட்டத்தால் மட்டும் ரசிகர்களைக் கவருவார்கள், இன்னும் சிலர் ஓட்டத்துக்குப் பிறகு வெற்றியை கொண்டாடி கவருவார்கள், ஒரு சிலர் சர்ச்சைகளால் பேசப்படுவார்கள். ஆனால் ஓட்டப் பந்தயத் துறைக்கு ஒரு புதிய Fashion-னை அறிமுகப்படுத்தி அதன் மூலம் புகழ் பெற்றவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். ஒரு காலில் நீளமாகவும், மற்றொரு காலில் நீச்சல் உடை போலவும் அணிந்து ஓட்டத் துறைக்கே புதிய அடையாளத்தை ஏற்படுத்தியவர். பல வண்ணங்களில் நீண்டு வளைந்த நகங்கள் இவரின் Trademark. இந்த கவர்ச்சிப் புயலைப் பார்ப்பதற்கென்றே அரங்கில் ரசிகர்கள் குவிந்து கிடந்த காலம் அது.
'நக' அழகி |
100 மீட்டரில் Flojo செய்த உலக சாதனை நேரத்தைக் காண இங்கே சொடுக்கவும்
200 மீட்டர் உலக சாதனை நேரம்
Flojo-வின் குறிப்பிடத்தக்க வெற்றிகள்...
1984 Los Angeles ஒலிம்பிக் : 200 மீட்டர் வெள்ளி
1988 Seoul ஒலிம்பிக் : 100 மீட்டர் தங்கம்
1988 Seoul ஒலிம்பிக் : 200 மீட்டர் தங்கம்
1988 Seoul ஒலிம்பிக் : 4x100 மீட்டர் தங்கம்
1988 Seoul ஒலிம்பிக் : 4x400 மீட்டர் வெள்ளி
1988 ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், அமெரிக்காவின் மும்முறை நீளம் தாண்டும் வீரரான தனது கணவர் Joyner-ருடன் ஆறு மாதங்கள் அதுவும் விடியற்காலையிலேயே இராணுவத்தைஒத்த பயிற்சிகளை Flojo மேற்கொண்டிருக்கின்றார். உலகமே வியக்கும் அளவுக்கு தான் செய்த சாதனையின் இரகசியத்திற்கு அதுவே காரணமென்றும் ஒரு முறை அவர் கூறியுள்ளார்.
தனது மின்னல் வேக ஓட்டத்தால், வித விதமான ஆடைகளால், நீண்ட நகங்களால் இரசிகர்களின் மனதில் அழகுப் பதுமையாக வலம் வந்த இந்த சிறகு மான், 1998-ஆம் ஆண்டு தனது 38-ஆவது வயதிலேயே மூச்சை நிறுத்தி விட்டு உலகில் இருந்து விடைப் பெற்றுக் கொண்டது. லண்டன் ஒலிம்பிக்கிலாவது Flojo-வின் சாதனைகளை யாராவது முறியடிப்பார்களா என பார்ப்போம்.
" 24 ஆண்டுகளுக்கு முன் 100 மீட்டரில் Flojo செய்த நேரம் 10.49 வினாடிகள். ஆனால் இன்று உலகின் அதி வேக வீராங்கணையின் மிகச் சிறந்த நேரம் எவ்வளவு தெரியுமா? 10.70 வினாடிகள் மட்டுமே ! இப்போது தெரிகிறதா Flojo-வின் சாதனை அளவு "
No comments:
Post a Comment