கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கத் தொடங்கியதும் உலக நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விட்டது. வெளியில் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கு பொருட்டு வீட்டுக்குள்ளேயே இருங்கள் என அரசாங்கங்கள் அறிவித்து 3 மாதங்கள் கடந்து விட்டன.
வழக்கமாக வேலை நாட்களில் வெளியில் இருக்கும் நாம் திடீரென வீட்டிலேயே இருக்குமாறு அறிவிக்கப்பட்டு விட்டதால் திகைத்து தான் போய் விட்டோம். இந்த வரலாறு காணாத காலக் கட்டம் பல்வேறு சம்பவங்களை நமக்கு உணர்த்தியுள்ளது.
வழக்கமாக வேலை நாட்களில் வெளியில் இருக்கும் நாம் திடீரென வீட்டிலேயே இருக்குமாறு அறிவிக்கப்பட்டு விட்டதால் திகைத்து தான் போய் விட்டோம். இந்த வரலாறு காணாத காலக் கட்டம் பல்வேறு சம்பவங்களை நமக்கு உணர்த்தியுள்ளது.
இங்கும் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO-வை மார்ச் 18-ஆம் தேதி அமுல்படுத்தியது. பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். சிலர் விடுப்பில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
வீட்டிலேயே இருப்பதை எப்படி சமாளிப்பது? பொழுது போக வேண்டும் அல்லவா? அப்படி பொழுதுப் போக்குக்கு அதிகமானோர் கையில் எடுத்தது தான் சமையல் கலை.
அதுவும் நம்மூரில் பலர் வகை வகையாக சமைத்துத் தள்ளி வீட்டில் உள்ளவர்களையே திக்குமுக்காட வைத்து விட்டனர். கணவரோ, பிள்ளைகளோ, சகோதரர்களோ கேட்காமலேயே பசியாறை என்ன, மதிய உணவு என்ன, தேநீர் என்ன, இரவு உணவு என்ன, பின்னிரவு உணவு என்ன? ஆஹா....! அவர்கள் பதிவேற்றியப் புகைப்படங்களைப் பார்ப்பதற்கு Facebook-கிலும் Instagram-மிலும் ரசிகர்கள் கூறி விட்டனர்.
அப்படி நான் பார்த்து வியந்த Quarantine Cook-களை தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
அப்படி நான் பார்த்து வியந்த Quarantine Cook-களை தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
வனிதா மாணிக்கம்
" நான் ஒரு
சாப்பாட்டு பிரியை. வித விதமாக சமைத்து சாப்பிட ஆசை எனக்கு. ஆனால் என்ன செய்வது? தனியார்
நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக வேலை செய்வதாலும் , கணவரின் சொந்தத் தொழிலுக்கு உதவிச் செய்வதாலும் மற்றும் பிள்ளைகளின் படிப்பு, டியூஷன் என பிசியாக இருப்பதாலும் பிள்ளைகளுக்கு
வாய்க்கு ருசியாக சமைத்துக் கொடுக்க நேரம் இல்லாமல் இருந்தது. அப்படியே கிடைத்தாலும்
உடல் ஓய்வெடுக்க சொல்லும். பாதி நாட்கள் Grab Food டிலேயே போய் விடும். ஆனால் அதை எல்லாம்
தலைக் கீழாக மாற்று விட்டது இந்த MCO!" என பூரிப்புடன் சொல்கிறார் செல்லமாக போபி
என்றழைக்கப்படும் வனிதா.
வீட்டில் இருந்தாலும்
இருந்தேன், தெரிந்தது தெரியாதது, அறிந்தது அறியாதது என எல்லாவற்றிலும் புகுந்து விளையாட்டின்
விட்டாராம் வனிதா. எப்போதும் கடை சாப்பாடு தானா என சலித்துக் கொண்ட அவர் பிள்ளைகளுக்கு
வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டிருக்கிறார். 
பிரியாணி, மட்டன்
வறுவல், கோழி ரெண்டாங், இறால் ரெண்டாங், சிக்கன் பிளாக் பெப்பர், நண்டு மசாலா, சிக்கன்
ரைஸ், சிக்கன் கட்லட், பூரி, தோசை, இட்டிலி , குழி பணியாரம், உளுந்து வடை, ரோஜாக்,
Char Kuey Teow, Mee Goreng, Pizza, ரொட்டி Cheese , ரொட்டி சானாய், புட்டு, Ice Cream Goreng, Popia, Chinese சாப்பாடு முதற்கொண்டு வெளுத்து வாங்கியிருக்கிறார்.

" உங்களுக்கு இப்படியெல்லாம் கூட சமைக்க வருமா
? " என பிள்ளைகளே ஆச்சரியப்பட்டு போகும் அளவுக்கு வனிதா மெர்சல் காட்டிய சமையல்கள்
இதோ....
அண்டை வீட்டாரும், நண்பர்களும் அடிக்கடி விரும்பி செய்யச் சொல்லிக் கேட்கும் உணவு என்னுடைய பிரியாணி, மட்டன் வறுவல், மீன் குழம்பு மற்றும் கோதுமை கஞ்சி .. இவை தான் என் ssignature சமையல் எங்கிறார் போபி. என்னதான் பிள்ளைகள் மேற்கத்திய உணவுப் பிரியர்களாக இருந்தாலும், கணவருக்கு இவர் வைக்கும் சுறா மீன் குழம்புதான் மிகவும் பிடிக்குமாம்.
இந்த MCO தமக்கு நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருப்பதாகக் கூறிய வனிதா, தான்

சமைத்த உணவுகளின்
புகைப்படங்களை முகநூலில்அதிகம் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதற்கு காரணம்... MCO நேரத்தில்
இல்லாதவர்கள் பசியால் வாடும் போது இருப்பவர்கள்
முகநூலில் சமையல் படங்களைப் பதிவேற்றம் செய்வது நியாயம் இல்லை என்ற கருத்துகள் வெளியாகத் தொடங்கியது தான் என்கிறார். அப்படி போடுவதாக இருந்தால் Facebook Story, Whatsapp Status -டில்
மட்டும் தான் போடுவேன் என்றார்.
இந்த சமையல் கலையை
MCCO-வோடு நிறுத்தி
விடாதீர்கள் வனிதா. உங்கள் கைவண்ணத்தைக் காட்டி உங்கள்
குடும்பத்தாரை தொடர்ந்து அசத்துங்கள்!
அதே சமயம் நேரம் கிடைத்தால் உங்கள் சமையல் குறிப்புகளை முகநூலில் பதிவு செய்யுங்கள், பலர் பயன் பெறலாம்.
விடாதீர்கள் வனிதா. உங்கள் கைவண்ணத்தைக் காட்டி உங்கள்
குடும்பத்தாரை தொடர்ந்து அசத்துங்கள்!
அதே சமயம் நேரம் கிடைத்தால் உங்கள் சமையல் குறிப்புகளை முகநூலில் பதிவு செய்யுங்கள், பலர் பயன் பெறலாம்.
கவிதா நாகப்பன்


ஆகக் கடைசியாக அனைத்துலகப் பள்ளியில் பணி புரிந்த கவிதா இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமக்கையில் வேலையில் இருந்து விலகி முழு நேர 'குடும்ப இஸ்திரி'யாகி விட்டார்.
சமையல் கட்டில் சுட சுட கரிபாப் தயாராகிறது
![]() |
| அம்மா செய்த Karipap-பை சுவைக்கும் அன்பு மகள் சாதனா ஷ்ருதி |
பார்த்து கவிதா, Over Speed
உடம்புக்கு ஆகாது. கொஞ்சம் slow பண்ணுங்க. இன்னும் 6 மாசம் இருக்கு! ஆனாலும் கணவரை
ஜமாய்க்கிறத விட்டுறாதீங்கோ!
-Quarantine Cook-குகள் தொடரும் !

















No comments:
Post a Comment