அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Monday, 29 June 2020

தமிழ்லெட்சுமி எங்க தங்கலெட்சுமி!


"Three Roses போலத் தானே தமிழ்லெட்சுமி!"

கடந்த சில வாரங்களாகவே #வியன் முனுமுனுக்கும் பாடல் அது.

அதுவும் நம்மூர் படைப்பொன்றின் அடையாளமாகி வரும் அம்சா!

வேறு யார்?

திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு Astro வானவில் ஒளியலையின் முன் அனைவரையும் உட்கார வைத்து விடும் நம்ம 'தமிழ்லெட்சுமி தான்!
என்னடா, சின்னத்திரை தொடருக்கெல்லாம் 'ரிவியூவா' என்றால்? இருக்கட்டுமே, என்ன வந்து விடப் போகிறது?

வியன் என்றுமே கடைநிலை ரசிகன்; அவன் ரசிப்பதை புதைக்காமல் பதிவாக்கி வைக்க விரும்புகிறான்.(இது தேவையே இல்லாத விளக்கம் அல்லவா? ) 😅

சரி, தமிழ்லெட்சுமி வந்தாள், நிற்கிறாள், வென்றாளா?

அதை கடைசியில் பார்ப்போம்.....

கதை என்ன என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

கதைமாந்தர்களை நான் பார்க்கிறேன் 💘


Devendran Sarimirgan

வெளிப்படையாகவே சொல்வேன். இத்தொடரில் வியனுக்கு விருப்பமானவன் இவவென்று. மனிதருக்கு உடல் மொழியே பிரதானம். நெருக்கடியான நேரங்களில் கூட நகைச்சுவையை வரவழைத்து விடுகிறார். ஆனால், மனைவிக் கூறியதை  தங்கையிடம் 'போட்டுக் கொடுத்து', இரவில் வாங்கிக் கட்டிக் கொள்ளும் போது, '' நான் வேற மாரிங்க!" என்பது போல முக பாவனையில் variety காட்டினார். சிரிக்க வைத்தவன் சிக்கிக் கொண்டானே! என கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. இந்த ஆளின் சேஷ்டைகளைப் பார்க்கையில் பலருக்கு அவர்களின் வாழ்க்கைச் சூழல் நினைவுக்கு வந்து போயிருக்கும். நீங்க நல்லா வருவீங்கோ தம்பி!




ஹேமாஜி

துரு துருவென துள்ளி வரும் பாசக்காரி. இளம் திறமையாளர்களில் வெகு இயல்பாக நடிப்பை வெளிப்படுத்துபவர். தொகுப்பாளியாக இருந்த போது உட்பட பல சமயங்களில் நான் பார்த்து வியந்திருக்கிறேன்.  காட்சிகளையும் வசனங்களையும் அநாயசமாக அடித்துப் போட்டு போய்க் கொண்டே இருப்பார். இதிலும் அப்படியொரு கதாபாத்திரம் தான். ஆனால், அவ்வப்போது கணவனுடன் மல்லுக் கட்டுகிறார். படுக்கையறை சண்டைக் காட்சியில் நீண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசியிப்பார் என நினைக்கிறேன். ஆனால் அந்த இடத்தில் மட்டும் ஏதோ இயல்பு மீறல் மாதிரியே வியனுக்குப் பட்டது. கொஞ்சம் விட்டால் பெரிய ரவுண்டு வந்து விடுவார்.     


ஜாஸ்மின் மைக்கல்

வழக்குரைஞராக வருபவர், feel cool factor தருபவர். சிரித்த முகத்தோடு சிக்சர் அடிக்கிறார். இயல்பு ஈர்க்கிறது. உற்றத் தோழிகளோடு உரிமையோடு உறவாடும் போது இரசிக்க வைக்கிறார். அளவாக advice செய்கிறார். போகப் போக இவரின் கதாபாத்திரம் கதை சொல்லும் என எதிர்பார்க்கலாம். 


மூன் நிலா




அவ்வப்போது கொஞ்சம் வெகுளித்தனம்; கொஞ்சம் கோபம்; கொஞ்சம் கடுப்பு; கொஞ்சம் ரொமாண்டிக் என நேரில் பார்ப்பதை போன்றே வந்துப் போகிறார். சந்தேகப் பேர்வழி கணவனிடம் சிக்கித் தவிப்பதில் நிறைகிறார். வசன உச்சரிப்பும் உடல் மொழியும் கச்சிதம்.
   




ஸ்ரீ குமரன் முனுசாமி

Mr Urrr.... என்று தான் இவரை சொல்ல வேண்டும். " என்னடா, இவன் எப்ப பார்த்தாலும் மூஞ்சியை இப்படியே உர்ருனு வெச்சிருக்கான், சிரிக்கவே மாட்டானா, கடுப்பா!" என்று பார்ப்போரை கடுப்பேத்தும் கேரக்டர். Possessiveness ரகத்திலும் இது வேறு மாதிரியான வகையறா! அப்படி கடுப்பேத்துவதின் மூலம் நடிப்பில் வெற்றிக் கண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து பார்ப்பவன் என்ற அடிப்படையில், நடிப்பில் குறிப்பாக முக பாவனை மற்றும் உடல் மொழியில் பெரிய முன்னேற்றம். வளர்த்துக்  கொண்டால் மேலும் வளரலாம். 


ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி



வாப்பா... உயர்ந்த மனிதா! நான் உரிமையோடு கூப்பிடும் பாசக்கார பையன். CCTV மூலம் வீட்டில் இருக்கும் மனைவியை கண்காணிக்கும் அளவுக்கு 'கங்காணி'. பேச்சின் மூலமும் முக காட்டத்தின் மூலமும் இல்லாளை உண்டு இல்லை என பண்ணி வருகிறார். சிறப்பானதைக் கொடுக்க முயற்சி செய்கிறார். சில இடங்களில் இயற்கையாக இல்லையோ என வியன் நினைக்கிறான். அதற்கு வசனங்களும் காரணமாக இருக்கலாம். ஹீரோ லுக்கில் இருப்பவர் தொடர்ந்து கற்றுக் கொண்டால் நடிப்புத் துறையில் மிளிர வாய்ப்புண்டு. 



அகல்யா மணியம்



வெண்பாவிலும் ஜாங்கிரியிலும் அவ்வளவாக என்னை ஈர்க்காதவர் இம்முறை Thumbs Up வாங்கி விட்டார். சதா உர்ருனு இருக்கும் காதலனை மேலும் உசுப்பேத்தாமல் பேசும் விதமாகட்டும், Cool செய்வதாகட்டும், கண்களாலும் உடல் மொழியாலும் சபாஷ் பெறுகிறார். நடிப்பில் நல்ல முன்னேற்றம். பல இடங்களில் இயற்கையாகவே தெரிகிறது வசன உச்சரிப்பு. வாழ்த்துகள் அகல்யா! 



மலர்விழி ஷண்முகம்


ஜாம்பவானின் வாரிசு ஆயிற்றே! சும்மாவா? 90-களில் நான் மிகவும் விரும்பிப் பார்த்த உள்ளூர் நடிகைகளில் இவரும் ஒருவர். எந்த இடத்திலும் இவரிடம் 'ஓவர்' என்பதை பார்க்க முடியாது. அத்தனை நியாயம் செய்வார். இவரின் தேர்வு, படக்குழுவினர் அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தைப் புலப்படுத்துகிறது. குறிப்பாக கோயில் காட்சியில், "அடிப் போடி!" என்று நம்ம காந்திமதி அளவுக்கு அநாயசமாக வசனம் பேசுவதை வியன் ரசித்தான். வழக்கமான அம்மாவாக வந்து விட்டுப் போவது வேறு, தடத்தை அழுத்தமாக பதிந்து விட்டுப் போவது வேறு. அதில் இந்த குட்டி ஜாம்பவான் இரண்டாவது ரகம். கனமான கதாபாத்திரங்களில் இனி அடிக்கடி உங்களை பார்க்க வேண்டும்.      



நண்பர் Seelan Manoheran, James-சின் அலுவலகத் தோழியாக வருபவர் உட்பட எல்லாருமே உழைத்திருக்கிறார்கள். சிலர் வியன் பட்டியலில் விடுபட்டிருக்கலாம். ஆனால், எந்தக் குறையும் இல்லாமல் உங்களுக்குக் கொடுத்தவற்றை நிறைவாகச் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். 

என்னடா, எல்லாமே சூப்பரோ சூப்பர் என்ற ரேஞ்சில் பேசுகிறானே வியன் என வியக்க வேண்டாம். நிச்சயம் இருக்கிறது, இல்லாமல் இருக்குமா?

வசனங்கள் பொதுவில் ஈர்க்கின்றன; ரசிக்க வைக்கின்றன; நம்மை மீறி சிரிப்பை வரவழைத்து விடுகின்றன. என்றாலும் ஒரு சில இடங்களில் இயல்பாக இல்லை. ஓரிரண்டு கதாபாத்திரங்கள் ஆரம்பம் முதலே ஒரே பாணியில் பயணிக்கின்றன. என்னதான் அது அந்தந்த கதாபாத்திரத்தின் இயல்பு என்றாலும், ஏற்ற இறக்கம் இல்லாம அதே பாணியால் சலிப்புத் தட்டி விடும். 

மற்றவற்றை நேரில் சொல்கிறேன்! 


Dr விமலா பெருமாள்

எல்லாராலும் எல்லா நேரத்திலும், எல்லா துறைகளிலும் சாதிப்பதென்பது ரொம்பவே கடினம் ( முடியாது என்றில்லை, கடினம் என்கிறேன்) அப்படி பெரியத் திரையில் சாதித்த உங்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்பதை தைரியமாகச் சொல்லலாம். ரசிகர்களை ஆச்சரியப்படுத்தப் போகிறேன் என்றில்லாமல், சாதாரண கதையையும் களமாக்கி கபடி விளையாட முடியும் என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள். நடிகர்கள் தேர்வில் சிரம் எடுத்திருக்கிறீர்கள். சீனியர் ஜூனியர் கலவையாகக் கொடுத்திருக்கிறீர்கள். முயற்சிக்கு வாழ்த்துகள்.

டெனிஸ்

இதே வேகத்தில் போனால் 'வீடு தயாரிப்பு நிறுவனம்' எல்லா வீடுகளிலும் போய் சேர்ந்து விடும் போலிருக்கிறது. வாய்ப்புகள் கிடைக்கும் போது, இது போன்று சிறப்பாகப் பயன்படுத்தி தரமானவற்றைத் தந்தால் ரசிகன் நிச்சயம் thumbs up தருவான். (FINAS வாரிய உறுப்பினராக நியமனம் பெற்றமைக்கு வியன் வாழ்த்துகிறான்)

வரப் போகும் பாகங்கள் கண்டிப்பாக இரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் ( அதிகரிக்க வேண்டும்) ; அதை விட எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யும் என வியன் நம்புகிறான். வியனின் தனிப்பட்ட அனுபவத்திலேயே 'தமிழ்லெட்சுமி'க்கு என்று ஒரு புதிய இரசிகர் வட்டம் உருவாகியிருக்கிறது. அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடப்பாடு உங்களுடையது.


பொதுவில் தமிழ்லெட்சுமி தங்கலெட்சுமியாக வென்றாள்!

வியன் விடைபெறும் முன்,

Title Song-ங்கில் என்னைக் கவிழ்த்து விட்டீர்கள். தானாக அமைந்ததா, அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என தெரியவில்லை. பாட்டை தனியாக ரிலீஸ் செய்யுங்கள்😆

#தமிழ்லெட்சுமி #வீடு #VeeduProduction #Denes #VimalaPerumal

No comments: