அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Friday, 12 June 2020

கொரோனா இப்போதைக்குப் போகாது ; பீதியைக் கிளப்பும் WHO !

டமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உலகளவில் மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. உடனே கொரோனா மறைகிறது என நினைத்தால், அது தவறு!

ம், வரலாறு காணாத அளவுக்கு ஒட்டுமொத்த உலகையே ஒற்றை ஆளாக ஆட்டிப் படைக்கும் கொரோனா 'அரக்கன்' நாமெல்லாம் நினைப்பது போல் இப்போதைக்குப் போக மாட்டான் என உலக சுகாதார நிறுவனம் WHO புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது. 

உலக சுகாதார நிறுவனத் தலைவர்
ன்றையத் தேதிக்கு உலகம் முழுவதும் 72 லட்சம் #Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மரண எண்ணிக்கையோ 4 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.

டிசம்பரில் சீனாவில் தொடங்கி, ஐரோப்பாவையே அதகளப்படுத்திய கொரோனா அங்கிருந்து அமெரிக்காவுக்கு மெல்ல shift ஆகி தற்போது ஆப்ரிக்க மண்ணில் கோரத் தாண்டவம் ஆடுகிறது.

1 லட்சம் தொற்று சம்பவங்களைப் பதிவுச் செய்ய ஆப்ரிக்க கண்டம் கிட்டத்தட்ட 100 நாட்களை எடுத்துக் கொண்டது.

னால், வெறும் 18-டே நாட்களில் 2 லட்சத்தைத் தொட்டு விட்டதாக அதிர்ச்சித் தகவலை WHO வெளியிட்டுள்ளது.

ங்கு பெரும்பாலும் நகரங்களில் பதிவாகி வந்த கொரோனா சம்பவங்கள் தற்சமயம் சிறிய மாகாணப் பகுதிகளுக்கும் பரவி வருகிறதாம். 


கொரோனா பரிசோதனைக் கருவிகள் பற்றாக்குறையே ஆப்ரிக்க நாடுகளில் திடீரென தொற்று சம்பவங்கள் மளமளவென அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. 

ப்ரல் வாக்கில் இத்தாலி, ஸ்பெய்ன், பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளை அல்லோகலப்படுத்திய அரக்கன் மே இறுதி வாக்கில் அசதியில் அயர்ந்து விட்டான் என்று தான் நினைத்தோம்.


னால், ஆகக் கடைசி தகவல்கள் படி அமெரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவில்  அவன் வசதியாகத் 'தஞ்சம்' புகுந்திருக்கிறான்.


குறிப்பாக பிரேசில், அமெரிக்காவுக்கே கடும் tough கொடுத்து வருகிறது.

ந்தக் கால்பந்து தேசத்தில் கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 30 ஆயிரம் சம்பவங்கள் பதிவாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ரம்பத்தில் அலட்டிக் கொள்ளாத இந்தியாவோ இப்போது கடும் பீதியில் உறைந்துப் போயுள்ளது.

ரடங்குத் தளர்த்தப்பட்டதும், மக்களும் பழையபடி 'வேலையை' காட்ட, கொரோனாவும் தன் பங்குக்கு ஆட்டம் காட்டி வருகிறது.

ந்தியாவில் மொத்த தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தொடவிருக்கிறது.

8 ஆயிரத்தைத் தாண்டி விட்ட மரண எண்ணிக்கை ஓரிரு நாட்களில் 10 ஆயிரத்தைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மிழகத்தையும் விட்டு வைக்காமல் கதற விடுகிறது கொரோனா.

AFP Photo
ங்கு சம்பவங்களின் எண்ணிக்கை விரைவிலேயே 40 ஆயிரத்தைத் தொடும் நிலையில் இருக்கிறது.

சென்னை அவதியில் அலறுகிறது.

ங்கு கடந்த ஒரு வாரமாகவே நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் குறையாமல் புதியத் தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

தனால் சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூரில் முழு அளவில் லாக்டவுன் அமுல்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

னாலும், இந்தியாவில் ஒட்டு மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி வருவது சற்று ஆறுதலாக உள்ளது.

ஆக 6 மாதங்களாக நம்முடன் குடித்தனம் நடத்தி விட்ட கொரோனா 'சார்' அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டு பிரிய மாட்டார் என்றே தோன்றுகிறது. அடுத்து வரும் நாட்களில் நிலைமை எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க இயலாத நிலையில் இருக்கிறது WHO.  

ன்ன நடக்கப் போகிறது என்பது ஒரு பக்கம் இருக்க, இது நாள் வரை கடைப்பிடித்த சுயத் தூய்மை, கட்டுப்பாடு, கூடல் இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து செயல்படுத்துவோம்.

வ்வளவுப் பெரிய ரக்கனாக ருந்தாலும், வனுக்கு ழிவு நிச்சயம் !


#வியன் 

1 comment:

Raj said...

இந்த அரக்கனுக்கும் உண்டு..