அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Sunday, 31 May 2020

"என்னமோ இருக்குடா உங்கிட்ட! "

"ன்னமோ ருக்குடாங்கிட்ட! "


ண்மைய காலமாக உள்ளூரில் என் கவனத்தை அதிகம் ஈர்த்த பையன்.  'திருடாதே பாப்பா திருடாதே' படத்தில் பார்த்ததுமே பிடித்து விட்டது. வழக்கமாக ஒரு கதாபாத்திரத்தையோ படத்தையோ எனக்குப் பிடிக்க என்னை நானே convince செய்ய வெகுநாட்கள் ஆகும். அப்படிப்பட்ட எனக்கே அது புதிது தான்.


வெண்பா-வைப் அப்போது நான் பார்த்திருக்கவில்லை. நண்பர்கள் சொல்லக் கேட்டிருந்தேன், அவ்வளவு தான். பார்த்திருந்தால் ஒருவேளை திருடாதே பாப்பா திருடாதே பார்க்கும் போது ஒரு சார்பு நிலை எனக்கு ஏற்பட்டிருக்குமோ என்னவோ! படம் சீரியசா போய்க்கிட்டு இருக்கும் போதே இடை இடையில் சரியான காமெடி டைமிங்கில் சிரிக்க வைத்து விடுகிறான். நான் சிரித்தேன் என்பதை விட தியேட்டரே சிரித்தது. கிருஷ்ணா வரும் போதெல்லாம் அடுத்து நிச்சயம் சிரிக்க வைப்பான் என்ற எதிர்பார்ப்பு அரங்கில் அமர்ந்திருந்தவர்களிடையே இருந்ததை பக்கத்திலும் பின்னாடி  இருந்தவர்களின் முனுமுனுப்பிலேயே காண முடிந்தது. திருடாதே பாப்பா திருடாதே படத்தை 6 முறை தியேட்டரில் பார்த்ததற்கு 'கிருஷ்ணா'வும் முக்கியக் காரணம். என்னடா 6 முறையா என ஆச்சரியப்படுகிறீர்களா? அசலூர்  பாகுபலியை மட்டும் டஜன் கணக்கில் பார்க்க மாட்டான் வியன். தரமிருந்தால் உள்ளூர் பாகுபலிகளையும் விடாமல் பார்த்து வைப்பான்.

சில வாரங்களுக்கு முன்னர் தான் 'வெண்பா' -வை தொலைக்காட்சியில் பார்த்தேன். தொடக்கம் முதலே 'தென்னவன்' மன்னவன் ஆகி விட்டான். தென்னவனாக வந்தவனின் முக பாவணை, உடல் மொழி, வசன உச்சரிப்பு அத்தனையும் அத்தனை இயல்பு. அடடா, வெளுத்துக் கட்டுகிறானே பையன் என என்னைச் சொல்ல வைத்தான் யுவராஜன்.

ப்படியும் அவனிடம் ஒரு பேட்டி எடுத்து விட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை அண்மையில் தான் நிறைவேறியது. அதன் தொகுப்பு இதோ !


டிக்க வராமல் இருந்திருந்தால்...

கண்டிப்பாக Footballer ஆயிருப்பேன். அதான் ஆரம்ப லட்சியமா இருந்துச்சு. கண்டிப்பா  Sports சம்பந்தப்பட்ட ஒரு துறையில இருந்திருப்பேன். அது நடக்காம போக, நடிக்க வந்தேன். இல்லாட்டி பிசினஸ்ல இருந்திருப்பேன். அதுல கொஞ்சம் ஈடுபாடு காட்டிருப்பேன். அப்பாவோட பிஸ்னஸ் செஞ்சிருப்பேன். இல்லனா ஏதாவது சொந்தத் தொழில் செஞ்சிருப்பேன். ஏனா நான் படிச்சது பிசினஸ்தான். 



திரை வாழ்க்கையில் திருப்பம் ? 

வெண்பா குறும்படம் தான் turning point.  அதுக்கு முன்னாடி கலைத்துறை சார்ந்த  நிறைய விஷயங்கள் பண்ணிட்டு வந்தேன். music video கூட செஞ்சிட்டுருந்தேன்.  வெண்பாக்கு எனக்கு கிடைச்ச வாய்ப்பு எப்டினா.... நான் மிமிக்ரிலாம் பண்ணிட்டு இருந்தேன்.


அப்போ ஒரு மூவி ஆடிஷன். கோலிவூட் படம், மலேசியாவுல 70% படப்பிடிப்பு 30% இந்தியாவுல.  Audition-கு போயிருந்தேன். என்னை ஒரு முக்கியமான ரோலுக்கு select பண்ணிருந்தாங்க. அது பரவலா பேசப்பட்டது. அது ஒரு காரணம் எனக்கு வெண்பா கிடைக்க! Career -ல வெண்பா தான் பெரிய turning point. அதுக்குப் பிறகு தான் பெரிய பெரிய பட வாய்ப்புகள் தான் வந்துச்சு. 

வெண்பாவின் தாக்கம்?

வெண்பா வந்து மக்கள் மத்தியில சிறப்பான இடத்தைப் பிடிச்சிருக்கு. இதுவரைக்கும் மலேசியாவுல வந்த படங்கள்லயே  probably the most loved and celebrated film -னு நான் தைரியமா சொல்லுவேன். ஒரு படத்தை பார்த்தா நல்லா இருக்குனு சொல்றதோட விடாம, எனக்கு இது தான் பிடிச்சிருக்குனு அதிக பேரு Social Media-ல போட்டது இந்த படத்துக்கு தானு நெனக்கிறேன்.  இதான் என்னை பொருத்த வரைக்கும் Best Malaysian Film-நு நிறைய பேரு சொல்லிருக்காங்க.  இப்படி பட்ட history making படத்துல நானும் ஒரு பகுதியாக இருந்தத நினைச்சா எனக்கு சந்தோஷமா பெருமையா இருக்கு.  கடைசி வரைக்கும் எல்லாரும் தென்னவன் கேரக்டர ஞாபகம் வச்சிருக்காங்க. வெண்பா முலம் தான் அது சாத்தியம் ஆச்சு.வெண்பா எனக்கும் ரொம்ப ரொம்ப Special.                                                                                                                                                  
ம்மா

கலைத்துறைல எனக்கு ஆர்வம் இருக்குன்றத சின்ன வயசில இருந்தே எங்க அம்மாக்கு தெரியும். டான்ஸ், மிமிக்ரி எதுவா இருந்தாலும் ரொம்ப encourage பண்ணுவாங்க. உன் மகன் நல்லா பண்றானு எல்லாரும் சொல்லும் போது அந்த ஒரு பெருமை  தெரியும்.

எங்கம்மா முகத்த பார்ப்பேன். ரொம்ப சந்தோஷப்படுவாங்க. ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்தே அதை நான் பார்த்திருக்கேன்.  ஒரு stage performance-சா கூட இருக்கட்டும், அம்மா முகத்துல அந்த சந்தோஷத்த பார்க்கலாம்.

குறிப்பா, என்ன first time teatre -ல பார்க்கும் போது அவுங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. வெண்பா பார்க்கும் போது அவுங்க கொஞ்சம் கண் கலங்குற மாதிரி இருந்துச்சு. ரொம்ப நல்லா பண்ணிருக்கனு சொன்னாங்க. 


வெள்ளித் திரையில் முகத்தைப் பார்த்த அந்த தருணம்!


திருடாதே பாப்பா திருடாதே பார்த்தேன். ஆனா அதுக்கு முன்னாடி Big Screen-ல வந்துருச்சு என்னனா, வெண்பா குறும்படம். teatre-ல பிரிமியர் பண்ணாங்க. அதாவது  You Tube-ல ஏத்துறதுக்கு முன்னாடியே தியேட்டர்ல industry-ல உள்ள friends எல்லாம் கூப்பிட்டு One Day Screening மாதிரி வெச்சாங்க. அந்த டைம்ல நான் ஆஸ்திரேலியாவுல இருந்தேன். நான் என்னை முதல் முறை screen-ல பார்க்கலாம்னு நெனச்சது முடியல. ஆனா first time நான் என்னைப்

பார்த்தது என் நண்பனோட மொபைல் phone-ல தான்.  

அந்த படம் ஓடிட்டு இருக்கும் போது கரெக்டா வீடியோ call பண்ணி Screen-ல தெரியுற மாதிரி வெச்சிருந்தான்.  நான் ஆஸ்திரேலியாவுல இருந்துக்கிட்டே screen-ல என்னை நான்  பார்த்தேன். நான் ஒரு விஷயம் செஞ்சா, அதுக்கு எல்லாரும் கைத்தட்டுனாங்க, அதை பார்க்க சந்தோஷமா இருந்துச்சு. கடல் கடந்து வேற ஒரு கண்டத்துல இருந்து என்னை நான் பார்த்தேன். அது ஒரு நல்ல experience.

                                                                                                                                                         
திருடாதே பாப்பா திருடாதே அனுபவம் ?


நான் நடிச்ச மொத படம் ரிலீசாக போகுது, முக்கியமான கேரக்டர் பண்ற ஒரு படம் அது. எனக்கு ரொம்ப freedom கொடுத்தாங்க. சீரியசா போய்கிட்டு இருக்கிற ஒரு கதைல எல்லாருமே ஒரு light moment  எதிர்பார்ப்பாங்க...எங்க கொஞ்சம் காமெடி வரும்? எங்க சிரிப்பு வரும்? எவன் நம்மள entertain பண்ணுவானு? அதுக்காக செதுக்கப்பட்ட  ஒரு கேரக்டர் தான் கிருஷ்ணா. So எனக்கு அதுல பயங்கர freedom கொடுத்தாங்க.  Basic-காவே உனக்குள்ள ஒரு  humour sense இருக்கு, அந்த humour-ர உன்னால carry பண்ண முடியும்னு. அப்டினு சொல்லிட்டு ஷாலினி  - சத்தீஷ் எனக்கு சுதந்திரம் கொடுத்தாங்க. எந்த scene-னா இருந்தாலும் அதை இப்படி பண்ணலாமா?  இப்படி ஒரு betterment  பண்ணலாம்னு நான் கேட்டா, நல்லா இருக்கும் போது இத நீங்க பண்ணுங்கனு ஊக்கம் கொடுப்பாங்க. நிறைய விஷயம் learn பண்ணிக்கிட்டேன். Punctuality-னா என்னனு அவுங்க கிட்ட கத்துக்கிட்டேன். கரெக்டான டைம்ல வொர்க் பண்ணூவாங்க. 




திருடாதே பாப்பா திருடாதே படம் பார்த்து நான் எழுதியிருந்த  விமர்சனத்தின் சிறு பகுதி  



கிடைத்த மிகச் சிறந்த பாராட்டு!

இதுவரைக்கும் எனக்கு கிடைச்ச மிகச் சிறந்த பாராட்டுனா...Industry-ல  இருக்கிறங்களே நிறைய பேரு சொல்லிருக்காங்க. ஒவ்வொரு படம் வரும் போதும், நீ ஒரு natural-லான நடிகனு சொல்லும் போது சந்தோஷமா இருக்கு. குறிப்பா எல்லாருக்கிட்ட இருக்கிற ஒரு தப்பான கண்ணோட்டம் என்னனா...மலேசியாவுல இருக்குற நடிகர்கள் கொஞ்சம் dramatic-காவே நடிப்பாங்கனு! நீ casual-லா natural-லா நடிக்குற, எனக்கு உன் நடிப்பு பிடிச்சிருக்கு. ஒரு பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்குனு சொல்லுவாங்க. இதுவரைக்கும் படம் பார்க்கும் போது இவன் effortless-சா பண்ணுறான் அப்டினு  பெரும்பாலும் எல்லாரும் சொல்றது. நல்லா நடிக்கிறடானு சொல்லும் போது, எல்லாரும் உன்னை தான் பார்க்குறாங்கனு சொல்லும்  போது, ஏதோ சரியா பண்ணுறேனு தோணுது. ( குரலில் மகிழ்ச்சி)  

                                                                                                                                                                யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வுரும்புகிறீர்கள்?


கண்டிப்பா என் friends- தான்...  சின்ன வயசில இருந்து என் கூட இருந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லனும், Industry-ல இருக்குற friends-சும்.  குறிப்பாக நான் வொர்க் பண்ண இயக்குநர்கள். அவங்களுக்கு தான் முக்கியமா நான் நன்றி சொல்லுவேன். இவனுக்கு ஒரு திறமை இருக்கு. இவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம் அப்டினு எனக்கு chance கொடுத்தாங்கள்ல! அந்த வரிசையை பார்த்தீங்கனா...Kavi Nanthan  , Shalini  , Director Loga சாரா இருக்கட்டும், Viknish Lokarag Asokan இருக்கட்டும். தவிர, Short Film நானே டைரக்ட் பண்ணிருக்கேன், என்னோட music video டைரக்டர்ஸா இருக்கட்டும். எல்லாருமே இதுவரைக்கும் யுவாவ இந்த ஒரு விஷயத்துக்கு எடுக்கலாம்னு எனக்கு வாய்ப்பு கொடுத்த produces, directors. இவுங்க எல்லாருக்கும் என்னோட பெரிய நன்றி . குறிப்பாக என்னோட அப்பா அம்மா, அவுங்களோட ஆதரவு இல்லாம என்னால டைரக்ட் பண்ணிருக்க  முடியாது. And of course என்னோட  friends.

துவரை கற்றுக் கொண்டது ?

நமக்கு ஒரு கனவு இருக்கு, நமக்கு ambition இருக்கு. யாரு என்ன பேசுனாலும், அத நம்ம motivate  பண்ற விஷயமா எடுத்துக்கனுமே ஒழிய.... நம்மால முடியாதுனு ஒருத்தங்க சொல்லிட்டா,    ஓ நம்மால முடியாது போல அப்டினு துவண்டு போய்ட கூடாது. நம்மால எது முடியும்னு நமக்கு தான் தெரியும். எனக்கு இந்த talent இருக்கு, நம்மால சாதிக்க முடியும்னு அவுங்ககிட்ட நாம proofe பண்ணி காட்டனும். இப்ப எங்கிட்ட முடியாது சொன்னவங்களுக்கு அதை தான் நான் நிரூபிச்சிக்கிட்டு இருக்கேன்.

என்ன பொருத்த வரைக்கும் great lesson learn  பண்ணிக்கிட்டேன். என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாதுனு! இந்த துறையில இருக்கும் போது , நம்மல நாமே ஒரு இடத்துல தூக்கி வெக்கிறதுக்கு எந்தளவுக்கு போராடனுங்கிறத தெரிஞ்சிக்கிட்டேன்.


ந்த ரோல் கொடுத்தாலும் என்ன விட வேற யாரும் சிறப்பா செய்திட  முடியாதுங்குற அளவுக்கு நான் perform பண்ணனும். அது தான் என்னோட இலக்கு. இப்போ, தென்னவன் கேரக்டர் எல்லாரும் செஞ்சிடலாம். ஆனா இவரு செஞ்சதால தான் அது Best-டா இருக்குனு சொல்றாங்கல்ல.... அதான்! நான் செய்யுற கேரக்டர்.. மத்தவங்களுக்கு dream role -லா இருக்கனும். யுவா செஞ்ச கேரக்டர் மாதிரி கிடைக்கனும்னு மத்தவங்க சொல்லனும்....!

னவு கதாபாத்திரம் ?


அது வந்து... அது வந்து.... ஆஹா, எல்லாத்தையும் இப்போவே சொல்லிட்டா எப்படி? பகுதி 2 வரைக்கும் காத்திருங்கோ!


- தொடரும் !


No comments: