அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Saturday, 16 May 2020

எளிமையால் விரிந்த எல்லை!

லை நிகழ்ச்சிகளோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ, பிரபலங்களின் பேட்டியோ குறித்த நேரத்தில் தொடங்கவில்லை என்றால் வழக்கமாக என்ன நடக்கும்?

பொறுமை இழந்தவர்கள் நிச்சயம் எழுந்துப் போய் விடுவார்கள் அல்லது கோபத்தில் வசைப் பாடுவர். சிலர் கோபத்தை அடக்கிக் கொண்டு ஏதோ ஒப்புக்குக் காத்திருப்பர். அது எவ்வளவுப் பெரிய 'அப்பாடக்கர்' ஆனாலும்!

னால், அண்மையச் சம்பவம் எனக்கு முற்றிலும் வியப்பாக இருந்தது.

லேசியர்கள் முனுமுனுக்கும் பெயராக மாறியுள்ள YouTube பிரபலம் Sugu Pavi அல்லது பவித்ராவின் நேரலைப் பேட்டிக்கு மண்ணின் மைந்தன் மலேசியா MMM ஏற்பாடு செய்திருந்தது.

பவித்ரா
லாய் ஊடகங்கள், செய்தி அலைவரிசைகளுக்கு தொடர் பேட்டியளித்து படு 'பிசி' யான பவித்ராவின் முதல் தமிழ் நேரலை என்பதால் நம் மக்கள் மத்தியில் ஆர்வம் பெருமளவில் காணப்பட்டது. MMM-மின் விளம்பர போஸ்டர்கள் ஏராளமானோரால் பகிரப்பட்டு பலரிடம் விஷயத்தைக் கொண்டுச் சேர்த்தது.

சொன்னபடி வியாழன் இரவு 9 மணிக்கு நேரலை நடத்துநர் ரேவதி 'ஆஜராகி' விட பவித்ராவைக் காணவில்லை. ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறதே தவிர, அனைவரும் காத்திருந்த பவித்ரா வரவில்லை.

கீழே 'கமெண்ட்' அடிப்பவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்களோ அல்லது பாதியிலேயே போய் விடுவார்களோ என எனக்குள்ளேயும் தவிப்பு இருந்தது.

னால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பவித்ரா சமூக வலைத்தலங்களுக்குப் புதியவர் அதிலும் Instagram இப்போது தான் அவருக்கு அறிமுகம். ஆக, நேரலைக்கு வருவதில் சற்று தடுமாற்றம் , தாமதம் ஏற்படுகிறது என ரேவதி விளக்கினார்.


நேரலைக்கு வந்து காத்திருந்தவர்கள் அதனை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு பவித்ராவுக்குக் காத்திருப்போம் என்றனர். 10 நிமிடங்களைத் தாண்டியப் பிறகும், உள்ளே வந்தவர்களின் எண்ணிக்கைக் குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போனது.

ரு வழியாக நேரலைக்கு வந்த பவித்ரா தாமதத்திற்கான காரணத்தை வெகுளியாக விளக்கிய விதத்தை ரசிகர்கள் மிகவும் Cool-லாக எடுத்துக் கொண்டதைக் காண முடிந்தது.

தெல்லாம் ஒரு விஷயமா என நீங்கள் நினைக்கலாம். ஆமாம், எனக்கு இது பல விஷயங்களை உணர்த்தியது. அவர் தொலைக்காட்சி-வானொலி பிரபலமோ, கலைத்துறை கவர்னரோ கிடையாது. அரசியலில் முக்கியப் புள்ளியும் அல்ல.  கணவர் இரு பிள்ளைகள் என மிக மிக சாதாரண, எளிமை வாழ்க்கை வாழும் இல்லத்தரசி.

ரு மாதத்திற்கு முன்பு வரை அவரை யாரென்றே தெரியாது.  இன்று நாடே பேசுகிறது. அவரின் பேட்டியைக் காண மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தாமதம் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

த்தனைப் பேருக்கு இப்படி ஒரு 'அந்தஸ்து' கிடைக்கும்? பவித்ராவுக்கு அது சாத்தியமாகியிருக்கிறது. எப்படி?

மெல்லிய குரல், அதிகாரமில்லா தொனி, எளிமையான மொழி நடை, மலாய் மொழியில் சரளம், வெகுளிச் சிரிப்பு, எளிதான சமையல் குறிப்புகள், சுத்தமான செய்முறை, மிகச் சிறந்த ஒத்துழைப்பாக கணவன், அழகான இரு குழந்தைகள் இவ்வளவு தான்.....

மிக மிக குறுகிய நாட்களிலேயே 4 லட்சம் பேர் இவரின் YouTube Channel -லை Subscribe செய்திருக்கிறார்கள். வழக்கமாக யாரும் செய்யாத விதமாய் சமையல் செய்யும் போது மலாய் மொழியில் அவர் உரையாடுவதால் ஏராளமான மலாய்க்காரர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டார்.

4 லட்சம் subscriber-கள்

வர் பதிவிடும் காணொளிகளின் கீழ் வரும் கமெண்டுகளை படித்தால் நமக்கே புல்லரித்து விடும். அந்தளவுக்கு அவரைப் பாராட்டி வேற்றின சகோதரர்கள் இடும் பதிவுகள் மனதுக்கு இதமாய் இருக்கிறது.

ரேவதியுடனான நேரலை பேட்டியின் போது சமையல் Channel-லைத் தொடங்க எண்ணம் தோன்றியது எப்படி, சந்தித்த சவால்கள், வரவேற்பு என பல்வேறு விஷயங்களை தனக்கே உரித்தான எளிமையுடன் பகிர்ந்து கொண்ட பவித்ரா, எல்லாரும் ஆச்சரியப்படும் வகையிலான ஒரு தகவலையும் கூறி ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தினார்.

தாவது நாட்டின் பிரதமரே தமக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து அட்டை அனுப்பி, நலம் விசாரித்தத் தகவலை அவர் கூறிய போது, ரேவதி அதற்கு கொடுத்த reaction-னே போதும்.

பிரதமர் Tan Sri Muhyiddin Yassin -னின் அலுவலக அதிகாரிகளே தொடர்பு கொண்டு அவர் அனுப்பிய உதவிப் பொருட்கள் கிடைத்தனவா என்று கேட்ட தகவலை பகிர்ந்துக் கொண்டார். அதைத் தவற விட்டவர்களுக்கு இதோ அந்த காணொளி.


முன்னதாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் Datuk Seri Reezal Merican Naina Merican அவர்களும் பவித்ரா மற்றும் அவரின் கணவர் சுகுவுடன் நேரலையில் பேசினார்.


இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருடன்

நீ
ண்ட இடைவெளிக்குப் பிறகு நமது தங்கமொன்று மிளிரத் தொடங்கியுள்ளது. வரும் அங்கீகாரம் அனைத்திற்கும் தகுதியான தங்கமது. நண்டு கதை இடையூறாக இல்லாமல் இன்னும் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். நமது ஆதரவும் ஒத்துழைப்பும் அவருக்கு அவசியம்.

வித்ராவின் சமையல்களில் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த 'சார்டின் புளிச்ச கீரை' காணொளி இதோ:

சார்டின் புளிச்ச கீரை 
விருப்பமும் விடாமுயற்சியும் மனம் தளராமையும் இருந்தால் யாராலும் சாதிக்க முடியும் என்பதே நமது YouTube Sensation பவித்ரா நமக்கு உணர்த்தியுள்ள பாடம்!

#சிந்தித்தவேளை -யின் வாழ்த்துகள்!

#வியன் #சுகு #பவித்ரா #SuguPavi #SuguPavithra

No comments: