Facebook-கில் 'KKM அக்கா' என செல்லமாக வலம் வருபவர் கிருஷ்ணகுமாரி. அறிந்தோருக்கு அவர் ஓர் இரும்புப் பெண்மணி. பேச்சிலும் செயலிலும் அதிரடி நிச்சயம். அதனாலேயே பலருக்கு அவர் முன்னுதாரணம். குணத்திலும் அவர் தனி ரகம் தான். உபசரிப்பிலோ அவரை மிஞ்ச ஆளில்லை. அவரின் அன்பைப் பெற்று விட்டால் வீட்டுக்கே வரவழைத்து வயிறாற சாப்பாடு போட்டு அனுப்புவார்.
அவரின் சமையலை சாப்பிட்டவர்களுக்குத் தெரியும் அதனருமை. அந்தளவுக்கு நம்மூர் ரசம் முதல் அசலூர் கசம் வரை எல்லா சமையலும் அவருக்கு அத்துப்படி!
ஒவ்வொரு நாளும் அவர் என்ன சமைத்துப் போடப் போகிறார் என ஆர்வத்தில் காத்திருக்கும் facebook நட்பு வட்டம் அதிகம்.
ரவா பிரியாணி + ஆட்டிறைச்சி உப்புக் கறி |
பசியாறை , மதிய உணவு, தேநீர் நேரம், இரவு உணவு என பம்பரமாய் சுழன்று அசரடித்து வருகிறார்.
பல வித பதார்த்தங்கள், பார்ப்போர் பரவசப்படும் வண்ணக் கலவைகள்.
அவர் பதிவேற்றும், பகிரும் புகைப்படங்களுக்கு வரும் கமெண்டுகளே சொல்லி விடும் சமையலில் அவர் கைராசிக்காரர் என்று.
பாராட்டுகள் போலி அல்ல, உண்மை !
பசியாறையே 'பறந்தால்' மற்ற நேரங்களுக்கு எப்படி இருக்கும்?
இதோ Rasiah அக்காவின் கைவண்ணங்கள்....
நாம் இறால் பிரியாணி என்றால் அவர் ரவா பிரியாணி என இன்னொரு விதத்திற்கு shift ஆகி விடுவார்.
நாம் ஆட்டிறைச்சி பிரட்டல் என்றால் அவர் ஆட்டிறைச்சி உப்புக் கறிக்குப் போய் விடுவார்.
நாம் பூரி என்றால் அவர் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சப்பாதிக்குப் போய் நிற்பார்.
இப்படி வாரா வாரம் சமையலில் அசரடித்து விடுபவர் அதோடு நின்று விட்டால் எப்படி?
கற்றுக் கொடுத்தால் மற்றவரும் பயன் பெறுவர் அல்லவா?
அதற்கு முன்னோட்டமாகத் தான் அண்மையில் நேரலைக்கு ஏற்பாடு செய்து பிள்ளையார் சுழிப் போட்டு விட்டார் என் தமிழ் வண்ணங்கள்
முகநூல நிறுவனர் செந்தில் நாதன்
அந்த நேரலையில் பலர் அறவே கேட்டிறாத ரவை பிரியாணியை செய்து அசத்தினார்.
அதற்கு 'கொம்போ'வாக ஆட்சிறைச்சி உப்புக் கறியை செய்துக் கொடுத்தார்.
நம்மவர் சமையல் மட்டுமல்ல, எல்லா சமையலிலும் அத்துப்படி என்றே தொடக்கத்திலேயே கூறி விட்டேன். ஆனால், மலாய்க்காரர்களின் விருப்ப உணவுகளில் ஒன்றான Wajik-கிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை.
பெருநாட்களுக்கு அவரிடேம் ஆர்டர் கொடுத்து வாங்குபவர்கள் அதிகம்.

அக்காவின் special Wajik
பாட்டியின் சூப்பர் சமையலை ருசிக்கும் செல்லப் பேரன்கள் |
No comments:
Post a Comment