தலைநகரை அப்படி நாம் பார்த்திருக்க மாட்டோம்!
எப்படி ? அப்படித்தான்.... ஆம் மெல்ல வருகிறேன் கதைக்கு...!
தினமும் காலையிலேயே சாலைகளில் வாகனங்கள் வரிசைப் பிடிக்க, அவற்றின் இயந்திர சத்தம் காதைப் பிளக்க,
மக்கள் நடமாட்டம் பரபரக்கக் காணப்படுவது தான் நமது மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்.
காலையில் எழும் பரபரப்பு மாலையில் மக்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் போது குறையத் தொடங்கும். குறையுமே ஒழிய, மறையாது!
ஆனால், கொரோனா வைரஸ் கிருமிப் பரவலைத் தடுக்க மார்ச் மாத மத்தியில் அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, MCO -வை கொண்டு வந்த போது நிலைமையே தலைக்கீழானது.
இதுவா நாம் பார்த்துப் பழகிப் போன கோலாலம்பூர் என அசந்துப் போகும் அளவுக்கு நேரெதிர் மாற்றம்.
சாலைகளில் வாகனங்கள் இல்லை; நெரிசல் இல்லை; மோட்டார் சத்தம் இல்லை; மக்கள் நடமாட்டமே இல்லை!
ஆம், கோலாலம்பூர் கொஞ்சம் இளைப்பாறியது!
அக்காட்சியை அக்கணமே கேமராவில் கொஞ்சிட எண்ணம் தோன்றியிருக்கிறது ஓர் இளைஞருக்கு...
நெகிரி செம்பிலான், போர்டிக்சனைச் சேர்ந்த சிவக்குமார் Aerial Photography அதாவது வான்வழி புகைப்படம் எடுப்பதில் வல்லவர்.
Drone கேமரா மூலம் இருந்த இடத்திலேயே படமெடுப்பது இவரின் பொழுதுப் போக்கு.
இயற்கை, வானுயர் கட்டடங்கள், என கண்களைக் குளிர்விக்கும் காட்சிகள் பல ஏற்கனவே அவரின் கேமராவில் சிக்கியிருக்கின்றன.
MCO காலத்தில் மனிதர் சும்மா இருப்பாரா? 'ஓய்வெடுத்த' கோலாலாம்பூரை நம் கண் முன்னே தத்ரூபமாக கொண்டு வந்து விட்டார்.
நிசப்தமான KL-லை கனக்கச்சிதமாக படம் பிடித்து பரவசப்படுத்தியிருக்கிறார்.
ஆனால், யாருக்கும் எவ்வித சேதமும் வராத வகையில் நேர்த்தியாக வேலையை முடித்திருக்கிறார்.
தனது கைவண்ணங்களை சமூக வலைத்தலங்களில் அவர் பகிர, இணையத்தளவாசிகள் அப்படங்களைக் கண்டு வியந்தனர். Share மட்டுமே பத்தாயிரத்தைத் தாண்டியது.
தொழில்முறை புகைப்படக் கலைஞர் அல்ல. ஆனால், அவரின் கைவண்ணம் கண்டு, நம் மனம் உண்மையை ஏற்க மறுக்கும். அத்தனை நேர்த்தி!
அவரின் MCO காலத்து கைவண்ணம் இதோ....
Unique அதாவது தனித்தன்மை அவரின் கைவண்ணத்தில் வெளிப்படுகிறதல்லவா?
புகைப்படங்களை எடுப்பது ஒரு பொழுதுப் போக்கு தான் என்றாலும், ஆர்வம் அதிகரித்து விட்டால், அது வேற லெவல் தான். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் சிவக்குமார்.
Drone மூலம் அவர் எடுத்தப் புகைப்படங்களுக்கு பெருமளவில் பாராட்டுகள் குவிந்தாலும் புகார் செய்தவர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனால், விதிமுறைகள் எதனையும் மீறாத நான் ஏன் பயப்பட வேண்டும் என்கிறார் சிவா தில்லாக.
சுற்றுப்பயணி, மலையேறி, நெடுந்தூர ஓட்டக்காரர், சைக்கிளோட்டக்காரர் என All Rounder அதாவது அனைத்திலும் வலம் வருகிறார் மனிதர்.
திறமைகள் நம்மிடையே கொட்டிக் கிடக்கின்றன. நாம் தான் அருகில் இருந்தாலும் அறிவதில்லை.
இந்த #MCO பற்றி எதிர்காலம் பேசும் போது நிச்சயம் சிவக்குமாரின் கை வண்ணமும் கண்டிப்பாக பேசப்படும்....
சிவக்குமாரின் புகைப்படச் சோலையைக் காண இங்கே சொடுக்கவும் !
#MCO #CMCO #PKP #PKPB #Covid19 #CoronaVirus
#Malaysia #Drone #AerielPhotography #Viyan #வியன்
எப்படி ? அப்படித்தான்.... ஆம் மெல்ல வருகிறேன் கதைக்கு...!
தினமும் காலையிலேயே சாலைகளில் வாகனங்கள் வரிசைப் பிடிக்க, அவற்றின் இயந்திர சத்தம் காதைப் பிளக்க,
மக்கள் நடமாட்டம் பரபரக்கக் காணப்படுவது தான் நமது மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்.
காலையில் எழும் பரபரப்பு மாலையில் மக்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் போது குறையத் தொடங்கும். குறையுமே ஒழிய, மறையாது!
ஆனால், கொரோனா வைரஸ் கிருமிப் பரவலைத் தடுக்க மார்ச் மாத மத்தியில் அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, MCO -வை கொண்டு வந்த போது நிலைமையே தலைக்கீழானது.
இதுவா நாம் பார்த்துப் பழகிப் போன கோலாலம்பூர் என அசந்துப் போகும் அளவுக்கு நேரெதிர் மாற்றம்.
சாலைகளில் வாகனங்கள் இல்லை; நெரிசல் இல்லை; மோட்டார் சத்தம் இல்லை; மக்கள் நடமாட்டமே இல்லை!
ஆம், கோலாலம்பூர் கொஞ்சம் இளைப்பாறியது!
அக்காட்சியை அக்கணமே கேமராவில் கொஞ்சிட எண்ணம் தோன்றியிருக்கிறது ஓர் இளைஞருக்கு...
Drone கேமரா மூலம் இருந்த இடத்திலேயே படமெடுப்பது இவரின் பொழுதுப் போக்கு.
இயற்கை, வானுயர் கட்டடங்கள், என கண்களைக் குளிர்விக்கும் காட்சிகள் பல ஏற்கனவே அவரின் கேமராவில் சிக்கியிருக்கின்றன.
MCO காலத்தில் மனிதர் சும்மா இருப்பாரா? 'ஓய்வெடுத்த' கோலாலாம்பூரை நம் கண் முன்னே தத்ரூபமாக கொண்டு வந்து விட்டார்.
நிசப்தமான KL-லை கனக்கச்சிதமாக படம் பிடித்து பரவசப்படுத்தியிருக்கிறார்.
ஆனால், யாருக்கும் எவ்வித சேதமும் வராத வகையில் நேர்த்தியாக வேலையை முடித்திருக்கிறார்.
தனது கைவண்ணங்களை சமூக வலைத்தலங்களில் அவர் பகிர, இணையத்தளவாசிகள் அப்படங்களைக் கண்டு வியந்தனர். Share மட்டுமே பத்தாயிரத்தைத் தாண்டியது.
தொழில்முறை புகைப்படக் கலைஞர் அல்ல. ஆனால், அவரின் கைவண்ணம் கண்டு, நம் மனம் உண்மையை ஏற்க மறுக்கும். அத்தனை நேர்த்தி!
அவரின் MCO காலத்து கைவண்ணம் இதோ....
AKLEH நெடுஞ்சாலை அள்ளுகிறதா ? |
விலாயா பள்ளிவாசல் |
ஆளில்லா பத்து மலை |
கம்போங் பாரு |
கூட்டரசு நெடுஞ்சாலை |
Saloma Link
கோலாலம்பூர் கோபுரம் |
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கம் |
வீடியோவில் வித்தியாசம் தெரிகிறதா? |
Unique அதாவது தனித்தன்மை அவரின் கைவண்ணத்தில் வெளிப்படுகிறதல்லவா?
புகைப்படங்களை எடுப்பது ஒரு பொழுதுப் போக்கு தான் என்றாலும், ஆர்வம் அதிகரித்து விட்டால், அது வேற லெவல் தான். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் சிவக்குமார்.
சுற்றுப்பயணி, மலையேறி, நெடுந்தூர ஓட்டக்காரர், சைக்கிளோட்டக்காரர் என All Rounder அதாவது அனைத்திலும் வலம் வருகிறார் மனிதர்.
திறமைகள் நம்மிடையே கொட்டிக் கிடக்கின்றன. நாம் தான் அருகில் இருந்தாலும் அறிவதில்லை.
இந்த #MCO பற்றி எதிர்காலம் பேசும் போது நிச்சயம் சிவக்குமாரின் கை வண்ணமும் கண்டிப்பாக பேசப்படும்....
சிவக்குமாரின் புகைப்படச் சோலையைக் காண இங்கே சொடுக்கவும் !
#MCO #CMCO #PKP #PKPB #Covid19 #CoronaVirus
#Malaysia #Drone #AerielPhotography #Viyan #வியன்
No comments:
Post a Comment