அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Saturday, 30 May 2020

பெருந்தலைவர் 'இஞ்சே' கபார் பாபா!

யாத பதவி ஆசை, நாள்தோறும் நாற்காலி சண்டை, கண்ணிமைக்கும் நேரத்தில் கட்சித் தாவல், பறந்து போன கட்சிக் கொள்கைகள், படார் படாரென பல்டி என நமது அண்மைய கால அரசியலும், அரசியல்வாதிகளின் 'அட்டூழியங்களும்' மனதைச் சோர்வடையவும் வெறுப்படையவும் வைக்கின்றன. 2018 பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்கள் குறிப்பாக இளையோர் மத்தியில் பரவலாக ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு இது போன்ற 'வரலாற்றுச் சிறப்புமிக்க' சம்பங்களால் வந்த வழியே போய் விடும் போலிருக்கிறது.
ந்த நேரத்தில், பலர் மறந்து போன நம் பெருந்தலைவர் கபார் பாபாவை நினைவுக் கூற விரும்புகிறேன். பள்ளி ஆசிரியர் முதல் நாட்டின் துணைப் பிரதமர் என்ற இரண்டாவது மிகப் பெரியப் பதவியை பெயரளவில் என்றில்லாமல் உண்மையிலேயே அலங்கரித்த உத்தமர். தேசியவாதியான கபாரின் அனுபவத்துக்கு, தேசத் தந்தை துங்கு அப்துல் ரகுமான், துன் அப்துல் ரசாக் ஆகியோருக்கு அடுத்து, நாட்டின் சக்தி வாய்ந்தப் பதவியை அவர் அலங்கரிப்பார் என எல்லாராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர்.

னால், நாம் கண்ட அரசியல்வாதிகளுக்கு நேரெதிர் மாறாக ஆட்சி அதிகாரத்தையும், பதவி சுகத்தையும் கண்டு மயங்காதவர் கபார். எத்தனையோ முறை உயர் பதவிகள் தேடி வந்தும் அவற்றை நிராகரித்து அரசியலில் கடை நிலை ஊழியனாகவே இருக்க விரும்பியவர். ஒரு கட்டத்தில் துங்கு 'மருட்டல்' விடுத்தப் பிறகே மலாக்கா முதல் அமைச்சர் பதவியை ஏற்க ஒப்புக் கொண்டார்.
த்திய அமைச்சரவையிலும் வற்புறுத்தலின் பேரிலேயே பங்கெடுத்தவர், பிறகு அவராக ஒதுங்கிக் கொண்டார். இன்று போகச் சொன்னாலும் முடியாது என வீம்பு காட்டுபவர்களுக்கு மத்தியில் தானாகவே ஒதுங்கியவர். ஆனால், விதி, அவரே விலகிச் சென்றாலும், அவர் சார்ந்திருந்த கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும், நாட்டுக்கும் அவரின் சேவை தொடர்ந்து தேவைப்பட்டது.

துங்குவுடன் கபார் பாபா

காதீர் அரசுக்கும் மலாய் ஆட்சியாளர் மன்றத்துக்கும் முதன் முறையாக வெளிப்படையாகவே மோதல் வெடித்த போதும் சரி, பின்னர் மலேசிய சீனர் சங்கம் MCA-வில் ஏற்பட்ட தலைமைத்துப் போராட்டத்தின் போதும் சரி, அதன் பின்னர் மகாதீருக்கும் அப்போதையத் துணைப் பிரதமர் மூசா ஹீத்தாமுக்கும் இடையில் வெடித்த மோதலின் போதும் சரி, கபார் வலுக்கட்டாயமாக மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டார். அம்மூன்று சம்பவங்களிலும் தனது அரசியல் சாணக்கியதால் நிலைமையைச் சரி செய்தவர் கபார். குறிப்பாக, MCA-வில் பஞ்சாயத்து செய்து வைத்து கட்சியைப் பிளவுறாமல் தடுத்த கபாருக்கு நன்றி விசுவாசமாக, MCA தலைவர்கள் ஆண்டு தோறும் அவரின் பிறந்தநாளுக்கு கேக்குடன் சென்று நல்ம் விசாரிப்பர்.
ளிமையின் வடிவமாய் திகழ்ந்த கபார், 1993-ஆம் ஆண்டு வழக்கம் போலவே மகா தீரரின் அரசியல் விளையாட்டுக்குப் பலியாகி வீழ்ந்தவர். தான் வளர்த்த 'தங்க மீனை' தமக்கு அருகில் கொண்டு வரும் முயற்சியில் ஓசையே இல்லாமல் மகாதீரால் ஓரங்கட்டப்பட்டவர் தான் கபார்.

னால், அப்போதும், நிதானம் தவறாமல் தான் வகித்த அனைத்துப் பதவிகளையும் துறந்து விட்டு, யாரையும் வசைப்பாடாமல் ஒதுங்கியவர்... மறுநாளே ஓய்வெடுக்க வெளிநாடு புறப்பட்டார். ஒரு பிளாஸ்டிக் பையுடன் சுபாங் அனைத்துலக விமான நிலையத்தில் யாரோ எவரோ போல் அவர் நின்ற காட்சிகள் இன்றும் என் கண் முன்னே வந்து போகின்றன. ( மகாதீர் மீது எனக்கு முதன் முறையாக கோபம் வந்தது அப்போது தான் ) 
ர் அரசியல் மாமேதையிடம் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் ஒருங்கே கொண்ட கபார் பாபா, தனது கடைசி அரசுப் பதவியான துணைப் பிரதமர் வரையில் வெறும் இஞ்சே (Encik)- வாகவே அழைக்கப்படுவதை விரும்பியவர். தனது பதவிக் காலத்தில் தம்மைத் தேடி வந்த அனைத்துப் பட்டங்களையும் புன்னகையுடன் நிராகரித்தவர். அரசியல்வாதி என்பவன் மக்களுக்கு சேவை செய்பவன் என்பதை தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் நிரூபித்துக் காட்டிய கபாப், பதவி விலகிய ஈராண்டுகள் கழித்தே நாட்டின் உயரிய 'துன்' விருதை ஏற்றுக் கொள்ள இணங்கினார்.
துன் கபார் பாபா இன்று உயிரோடு இருந்திருந்தால் நடப்பவற்றை கண்டு நிச்சயம் வெம்பியிருப்பார். அரசியல் களத்தில் அரிதாய் பூக்கும் குறிஞ்சி மலர் கபார் பாபா. அவரின் கீர்த்தி ஓங்குக!

#சிந்தித்தவேளை #வியன் தலைவணங்குகிறது 🙏

No comments: