அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Friday, 14 October 2016

மகத்தான கலைஞன் பாலன்ராஜ்




‘அவதாரம்’ இசைத் தொகுப்பு வெளியீட்டில் சந்தித்த போது நான் நினைக்கவில்லை - அடுத்து புது அவதாரமே எடுக்கப் போகிறாய் என்று. அதுவும் ‘ஹனுமான்’ நாட்டிய நாடகம் மூலம்….

‘ஹனுமான்’-னை வேறொரு களத்தில் எங்கள் முன் படைத்தவர் நண்பர் Ravi Shanker. பின்னணி இசையின் மூலம் அப்படைப்புக்கு உயிரூட்டியப் பெருமை என் மண்ணின் மைந்தன்Composer BalanRaj உம்மையும், உமது நண்பர் M.Jagathesh-சயுமே சாரும்.

இசையின் நுணுக்கத்தைப் பற்றி பேசும் நிலையில் நானில்லை. ஆனால் இசை இரசிகன் என்ற முறையில் கொஞ்சமாவது தகுதி உண்டு என்ற நம்பிக்கையில் கூறுகிறேன்….

மண்டபத்தின் வெளியே காத்திருந்த போதே ‘ஹனுமான்’ theme பாடல் என் மனதைக் கொள்ளைக் கொண்டது. எதிர்பார்ப்பை எகிறவும் செய்தது.

தொடக்கம் முதல் கடைசி வரை அந்த எதிர்ப்பார்ப்பு கூடியதே தவிர குறையவில்லை. அந்த அளவுக்கு எந்தவோர் இடத்திலும் தொய்வு ஏற்படா வண்ணம், வீரத்திற்கு வீரம், கம்பீரத்திற்கு கம்பீரம், சோகத்திற்கு சோகம், மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி என இசையில் புகுந்து விளையாடியிருக்கிறீர்கள்.

நீங்கள் இருவரும் போட்ட உழைப்புக்கான அங்கீகாரத்தை மேடையிலேயே அறுவடை செய்து விட்டீர்கள்.

மற்றொரு நண்பர் Phoenix Dassan -னையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். பாடல் வரிகளைக் கேட்கும் போதே எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, ஆய்வு செய்து அவரும் உழைத்திருக்கிறார் என தெரிகிறது.

அடிப்படையில் செய்தியாளரும் பொறியியலாளரும் சேர்ந்து வித்தியாசமான கூட்டணி அமைத்து களம் கண்டு, அதில் மாபெரும் வெற்றிப் பெற்றிருக்கிறீர்கள்.

உங்கள் ‘கட்டுமானம்’ செங்குத்தாக நிற்கும் - நிற்க வேண்டுமென மனதார பாராட்டி விடைப் பெறுகிறேன்.

ஆனால், கடைசியில் மண்டபத்தை விட்டு வெளியேறிய நான் CD-யை வாங்க மறந்தேனே… பிறகு எங்கேயாவது பார்த்தால் எனக்கொன்றை எடுத்து வையுங்கள்.

-மோகனதாஸ் முனியாண்டி#சிந்தித்தவேளை

Monday, 3 October 2016


இரும்புப் பெண்ணே எழுந்து வா....!


உன் தலைவன் படுத்துக் கொண்டே ஜெயித்தான்,
உனக்கும் அதே வலிமை உண்டு,
ஆனால் நோயில் படுக்கும் வயதல்ல உனக்கு!
வாரம் நகர்ந்து விட்டது, ஆனால்
உன் இரத்தத்தின் இரத்தங்கள் மருத்துவமனையை விட்டு நகருவதாக இல்லை!
கூடாது தான், இருந்தாலும்
நாளுக்கு நாள் அச்சம் அதிகரிக்கிறது...
சீக்கிரமே எழுந்து வா....!

அரசியலில் ஆயிரம் இருக்கலாம், ஆனால்
அதற்கு இது நேரமல்ல!

30 ஆண்டுகளாக ஒற்றை பெண்ணாக ஆண் அரசியல்வாதிகளைச் சமாளித்து வருகிறாயே...
உன் போல் துணிச்சல் இங்கு யாருக்குண்டு?

தமிழகத்தில் பழுத்த பழம் முதல் இளம் மொட்டு வரை உனை கண்டு அஞ்சுகிறதே...
அடக்கினாயே அவர்களை இரும்புக் கரம் கொண்டு!
சீக்கிரமே எழுந்து வா...!

உச்சநீதிமன்றம் சென்று போராடினாயே,
காவிரி இனி உனை நம்பி!
கொடுங்கோலன் ராஜபக்க்ஷேவை குற்றவாளி கூண்டில் ஏற்ற தீர்மானம் நிறைவேற்றினாயே,
அவன் எண்ண வேண்டாமா கம்பி?
தமிழ் ஈழமே தீர்வு என்றாயே,
ஈடேற வேண்டாமா அவ்வெண்ணம்?

இன்று,
தமிழகத்திற்கு நீர் தேவை,
தமிழர்களுக்கு நீ தேவை!
உனது அதிரடி நிர்வாகம் ரொம்பவே தேவை!
பிறவி குணமான பிடிவாதம் அதை விட தேவை!
இரும்புப் பெண்ணே எழுந்து வா...

சீக்கிரமே எழுந்து வா....!