ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணி |
தலைப்பை கண்டதுமே கண்டு பிடித்து விட முடிகிறது தானே! உங்கள் கணிப்பின் படி உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஒலிம்பிக் அடைவுநிலை பற்றிய சிறிய அலசல் தான் இது.
ஆகக் கடைசி புள்ளி விவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி. 134 கோடி மக்களுடன் முதலிடத்தில் உள்ள சீனாவைக் காட்டிலும் வெறும் 12 கோடி வித்தியாசத்தில் இரண்டாமிடத்தில் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் உலகத்தில் வாழும் மனிதர்களில் 17 விழுக்காட்டினர் இந்தியாவில் வசிப்பவர்கள். அப்படியிருக்க, நடந்து முடிந்த லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வாங்கிய பதங்கங்கள் எத்தனை தெரியுமா?
தங்கம் 0, வெள்ளி 2, வெண்கலம் 4. பங்கேற்ற 204 நாடுகளில் பதக்கப்பட்டியலில் இடம் பிடித்த 85 நாடுகளில் இந்தியாவுக்கு 55-ஆவது இடம். ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் மட்டும் 8 தங்கப் பதங்ககளை வாங்கிய இந்தியாவுக்கா இந்த நிலைமை என்று பழையவர்கள் ஆச்சரியப்படக் கூடும்.
இறுதி பதக்கப் பட்டியல் |
காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நன்றாக செய்யும் இந்திய விளையாட்டாளர்கள் பெரும்பாலும் ஒலிம்பிக்கில் பிரகாசிக்கத் தவறி விடுகின்றனர். நிச்சயமாக இந்தியர்களின் திறமை குறித்தோ, ஆர்வம் குறித்தோ யாரும் கேள்வி எழுப்பப் போவதில்லை. தொழில் நுட்பத் துறையில் அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகளே வியக்கும் அளவுக்கு கெட்டிக் காரர்களை தன்னகத்தே கொண்ட இந்தியாவுக்கு திறமைசாலிகளுக்கா பஞ்சம்? கண்டிப்பாக இல்லை!
ஆனால் எங்கேயோ தவறு நடக்கிறது. அது விளையாட்டுத் துறை மேம்பாட்டிலா? அல்லது போதிய வசதி இல்லாத்தாலா? அல்லது வேறு எதனாலோ? உரிய Post-Mortem செய்து ஆக்ககரமான நடவடிக்கைகளை எடுத்தால் நிச்சயம் முன்னேற்றம் தெரியும். இல்லையென்றால் போகிற போக்கில் குட்டித் தீவுகள் எல்லாம் இந்தியாவை முந்திச் சென்று விடும்.
மற்ற சில முக்கிய நாடுகளுடனான ஒப்பீடு
Rank | நாடு | ஜனத்தொகை | தங்கம் | ||
---|---|---|---|---|---|
1 | சீனா | 134 கோடி | 38 | ||
2 | இந்தியா | 121 கோடி | 0 | ||
3 | அமெரிக்கா | 31 கோடி | 46 | ||
9 | ரஷ்யா | 14 கோடி | 24 | ||
10 | ஜப்பான் | 12 கோடி | 7 | ||
இந்த வேளையில், இம்முறை இந்தியா வென்ற பதக்கங்களில் குறிப்பிடத்தக்கது பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இளம் தாரகை Saina Nehwal வென்ற வெண்கலம். 2012 காமன்வெல்த் போட்டியிலேயே தங்கம் வென்று பரபரப்பை ஏற்படுத்திய Saina சீன வீராங்கணைகளிடம் போராடி தோற்றது பெருமைக்குரிய விஷ்யமே!
இனி வரும் பெரிய போட்டிகளில் இந்தியா சாதிக்கும் என எதிர்பார்ப்போம்.!
Saina Nehwal |
No comments:
Post a Comment