'எல்லாப் புகழும் இறைவனுக்கே' ! என்ற வாசகத்தை கேட்டவுடனேயே நமக்கெல்லம் நினைவுக்கு வருவது.... A.R.Rahman. இந்திய இசையுலகம் கண்ட மாபெரும் இசை சிற்பி!
காலம் போன வேகமே தெரியவில்லை. இந்த AR.Rahman என்ற புயல் வீசத் தொடங்கி இன்றோடு 20 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்று இருக்கும் இளைஞர்களில் பெரும்பாலோர்...இல்லை இல்லை, ஏறக்குறைய அனைவருமே இவரின் இசையின் தாக்கத்தில் வளர்ந்தவர்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.
1992-ஆம் ஆண்டில் தென்னத்தில் பெரும் புயலாக கிளம்பிய இந்த இசையரசனின் சீற்றம் இந்த 20 ஆண்டுகளில் மாநிலம், நாடு, கண்டம் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து இன்று உலகளவில் விரிந்து வியாபித்து கொண்டிருக்கின்றது.
இதே ஆகஸ்ட் 15-ஆம் தேதி மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த போது ரஹ்மான் வெறும் 25 வயது இளைஞன். அப்படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே!
'இளைஞன் தானே !, அப்படி என்ன பெரிதாக செய்து விடப் போகிறான் ' என ஏளனம் பேசியவர்களின் வாயை ஒட்டு மொத்தமாக அடைக்கும் அளவுக்கு அப்படத்தின் இசையின் மூலம் சாதித்து காட்டி விட்டார் ரஹ்மான். அந்த முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய தேசிய விருதை வாங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்
80-களில் இசைஞானியின் மெல்லிசைக்கு கட்டுப்பட்ட தமிழ் திரையுலகிற்கு ஒரு புதிய அதுவும் நவீன இசை சுவாசம் கிடைத்தது போன்றதோர் உணர்வு! நவீனமா, அடிதடி இசையா, மனதை வருடும் மெல்லிசையா, சோகமா, சுதந்திரத் தாகமா, இல்லை நாட்டுப் புறமா? கூப்பிடுங்கள் ரஹ்மானை என பணத்தைப் பற்றி கவலைப் படாது தயாரிப்பாளர்கள் காத்து கிடந்த காலம் அது.
ஜெண்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என அடுத்தடுத்து அவர் குவித்த வெற்றிகளை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
புயலென புறப்பட்டு தமிழ் நாட்டை கடந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் கடைசியில் ஹிந்தி என மும்பையையும் விட்டு வைக்காத ரஹ்மான், ஒரு கட்டத்தில் இந்தியாவையே தாண்டி எல்லை கடந்த இசை வெள்ளமாகிவிட்டார்.
திரையிசையை தாண்டி தனது திறமையை நாடே போற்றும் விதமாக 1996-ஆம் ஆண்டு 'வந்தே மாதரம்' பாடலுக்கு புத்துயிர் கொடுத்து இந்தியர்களை மெய் சிலிர்க்க வைத்தார். ரஹ்மானின் 'வந்தே மாதரம்' இசை இந்தியாவுக்கு வெளியே உள்ள இந்திய வம்சாவளியினரையும் புல்லரிக்க வைத்ததென்றால் மிகையில்லை.
உலகமே கொண்டாடிய Slumdog Millionare படத்தில் Jai Ho பாடலுக்காக எட்டாத கனியாக கருதப் பட்ட ஆஸ்கார் விருதுகளை 2009-ஆம் ஆண்டு அள்ளிக் கொண்டு வந்தாரே.... அந்த தருணத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அதுவும் ஆஸ்கார் மேடையில் வழங்கிய ஏற்புரையை ' எல்லா புகழும் இறைவனுக்கே' என தமிழில் முடித்தாரே... அந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து ஆனந்த கண்ணீர் விடாதவர்கள் தமிழர்களாகவே இருக்க முடியாது. விருது வாங்கச் சென்றவர் அம்மாபெரும் சபையில் தமிழுக்கு மகுடம் சூட்டியதை என்னவென்று சொல்வது?
காலம் போன வேகமே தெரியவில்லை. இந்த AR.Rahman என்ற புயல் வீசத் தொடங்கி இன்றோடு 20 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்று இருக்கும் இளைஞர்களில் பெரும்பாலோர்...இல்லை இல்லை, ஏறக்குறைய அனைவருமே இவரின் இசையின் தாக்கத்தில் வளர்ந்தவர்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.
1992-ஆம் ஆண்டில் தென்னத்தில் பெரும் புயலாக கிளம்பிய இந்த இசையரசனின் சீற்றம் இந்த 20 ஆண்டுகளில் மாநிலம், நாடு, கண்டம் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து இன்று உலகளவில் விரிந்து வியாபித்து கொண்டிருக்கின்றது.
மணிரத்னத்துடன் ரஹ்மான் |
இதே ஆகஸ்ட் 15-ஆம் தேதி மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த போது ரஹ்மான் வெறும் 25 வயது இளைஞன். அப்படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே!
'இளைஞன் தானே !, அப்படி என்ன பெரிதாக செய்து விடப் போகிறான் ' என ஏளனம் பேசியவர்களின் வாயை ஒட்டு மொத்தமாக அடைக்கும் அளவுக்கு அப்படத்தின் இசையின் மூலம் சாதித்து காட்டி விட்டார் ரஹ்மான். அந்த முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய தேசிய விருதை வாங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்
80-களில் இசைஞானியின் மெல்லிசைக்கு கட்டுப்பட்ட தமிழ் திரையுலகிற்கு ஒரு புதிய அதுவும் நவீன இசை சுவாசம் கிடைத்தது போன்றதோர் உணர்வு! நவீனமா, அடிதடி இசையா, மனதை வருடும் மெல்லிசையா, சோகமா, சுதந்திரத் தாகமா, இல்லை நாட்டுப் புறமா? கூப்பிடுங்கள் ரஹ்மானை என பணத்தைப் பற்றி கவலைப் படாது தயாரிப்பாளர்கள் காத்து கிடந்த காலம் அது.
ஜெண்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என அடுத்தடுத்து அவர் குவித்த வெற்றிகளை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
புயலென புறப்பட்டு தமிழ் நாட்டை கடந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் கடைசியில் ஹிந்தி என மும்பையையும் விட்டு வைக்காத ரஹ்மான், ஒரு கட்டத்தில் இந்தியாவையே தாண்டி எல்லை கடந்த இசை வெள்ளமாகிவிட்டார்.
வந்தே மாதரம் |
ஆஸ்கார் விருது வென்ற களிப்பில் |
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக ' செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடலுக்கு ரஹ்மான் அமைத்த இசை, தமிழ் மொழியின் மாண்பை தமிழ் படிக்காதவர்களிடத்திலும் கொண்டு போய் சேர்த்தது. 2012 காமன்வெல்த் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலை உருவாக்கி, அதனை போட்டி தொடக்க விழாவில் பாடும் அரிய வாய்ப்பை பெற்ற ரஹ்மான் , Jai Ho இசைப் பயணத்துடன் உலக வலம் வந்து கொண்டிருக்கின்றார். போகும் இடமெல்லாம் தமிழுக்கும் பெருமை சேர்த்து வரும் இந்த இசைப்புயல் தமிழ் இசைத் துறைக்கு கிடைத்த பொக்கிஷம். இன்னும் 20 ஆண்டுகளை கடந்தாலும் ரஹ்மானின் இசை நம்மையெல்லாம் கட்டிப் போடத் தான் செய்யும்......
A.R.Rahman மூலம் பெருமைத் தேடிக் கொண்ட விருதுகள்....
Oscar : 2
Grammy: 2
BAFTA : 1
Golden Globe 1
Indian National Award : 4
Filmfare Awards ( North) : 15
Filmfare Awards ( South) : 13
Tamil Nadu State Film Awards : 6
Guinness World Records in 2010 as the original composer of "Maa Tujhe Salaam", from the album Vande Mataram – the song performed in the most number of languages worldwide (265).
தமிழ் கூறு நல்லுலகம் இருக்கும் வரை மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா வரிசையில் இசைப்புயலும் போற்றப்படுவார் என்பது திண்ணம்!
VIDEO Tribute to Rahman: http://www.youtube.com/watch?v=dwkGNYTFSA8
No comments:
Post a Comment