LEE CHONG WEI |
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் மலேசியாவின் கனவு நாளை இரவு நனவாகலாம்! அந்த சரித்திரப்பூர்வ தங்கத்தை பூப்பந்து போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் Datuk Lee Chong Wei பெற்றுத் தரக்கூடும்.
ஆனால், அதற்கு ஒரே தடைக்கல்லாக இருக்கப் போவது வேறு யாருமல்ல, Chong Wei-யின் பரம வைரியான சீனாவின் Lin Dan தான். இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் Chong Wei, மற்றொரு சீன போட்டியாளரை தோற்கடித்த நிலையில், Lin Dan தென் கொரிய வீரரை வீழ்த்தி இறுதியாட்டத்திற்குள் நுழைந்தார்.
LIN DAN |
இதே 4 ஆண்டுகளுக்கு முன்பு, Beiing ஒலிம்பிக் போட்டியின் இறுதியாட்டத்தில் நேருக்கு நேர் மோதிய அவ்விருவரும் நாளை மீண்டுமொருமுறை சவாலில் இறங்கவிருப்பது பூப்பந்து ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. Beijing-ங்கில் தங்கத்தை நழுவ விட்ட Chong Wei, நாளை அதற்கு வட்டியும் முதலுமாக வஞ்சம் தீர்ப்பாரா ? அல்லது மற்றொரு வெள்ளிப் பதக்கத்துடன் தனது கடைசி ஒலிம்பிக்கில் இருந்து விடைபெறுவாரா ? என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Chong Wei வென்றாலும், தோற்றாலும் மலேசிய அணி வெறுங்கையுடன் நாடு திரும்பாது என்பது மட்டும் உறுதி!
கூடுதல் தகவல்:
ஒலிம்பிக்கில் மலேசியா இதுவரை 2 வெள்ளிப் பதக்கங்களையும், 2 வெண்கலப் பதக்கங்களையும் மட்டுமே வென்றிருக்கின்றது. அவை:
1992 Barcelona : வெண்கலம் ( Razif- Jalani Sidek - ஆண்கள் பூப்பந்து இரட்டையர்)
1996 Atlanta : வெண்கலம் ( Rashid Sidek - ஆண்கள் பூப்பந்து ஒற்றையர் )
1996 Atlanta : வெள்ளி ( Cheah Soon Kit - Yap Kim Hock - ஆண்கள் பூப்பந்து இரட்டையர் )
2008 Beijing : வெள்ளி ( Datuk Lee Chong Wei - ஆண்கள் பூப்பந்து ஒற்றையர் )
No comments:
Post a Comment