Pandalela Rinong Pamg |
ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு பெண் முதன் முறையாக மலேசியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.இன்று அதிகாலை நடைபெற்ற பெண்களுக்கான முக்குளிப்புப் போட்டியின் ( Diving ) 10 மீட்டர் platform பிரிவில் தேசிய வீராங்கணை Pandalela Rinong வெண்கலப் பதக்கம் வென்று அப்பெருமையைச் தட்டிச் சென்றார். ஏற்கனவே 2012 காமன்வெல்த் போட்டியில் இதே பிரிவில் தங்கம் வென்றவரான இந்த சரவாக்கியப் பெண், உலக முக்குளிப்புத் தொடரிலும் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் மலேசியா பெற்றுள்ள இரண்டாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக பூப்பந்து போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் Datuk Lee Chong Wei வெள்ளிப் பதக்கம் வென்றார். Pandalela-வின் வெண்கலம் வாயிலாக, ஒலிம்பிக்கில் முதல் முறையாக பூப்பந்து இல்லாத போட்டியொன்றின் மூலமாக மலேசியா பதக்கம் வென்றுள்ளது.
மலேசியாவின் ஒலிம்பிக் பதக்க வரலாறு:
Bronze | Razif Sidek & Jalani Sidek | 1992 Barcelona | பூப்பந்து | ஆண்கள் இரட்டையர் |
Silver | Cheah Soon Kit & Yap Kim Hock | 1996 Atlanta | பூப்பந்து | ஆண்கள் இரட்டையர் |
Bronze | Rashid Sidek | 1996 Atlanta | பூப்பந்து | ஆண்கள் ஒற்றையர் |
Silver | Lee Chong Wei | 2008 Beijing | பூப்பந்து | ஆண்கள் ஒற்றையர் |
Silver | Lee Chong Wei | 2012 London | பூப்பந்து | ஆண்கள் ஒற்றையர் |
Bronze | Pandelela Rinong Pamg | 2012 London | முக்குளிப்பு | பெண்கள் 10m platform |
No comments:
Post a Comment