செல்வோம் வா.......உலக இசை விருது விழாவில் இசையமைப்புக்கான பிரிவில் வெள்ளிப் பதக்கம் (Oustanding Achievement) வென்ற பாடல் !
நம்மூர் பாடல். நம் மண்ணின் மைந்தன் Jaya Easwar இசையமைத்தப் பாடல்.
சொல்லும் போதே பெருமைத் தொற்றிக் கொள்கிறது;
அருமை என மனதைப் பற்றிக் கொள்கிறது!
கேளுங்கள் அண்ணா என அனுப்பி வைத்தார்....
கேட்டேன் ....கேட்கிறேன்.....இன்னமும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்!
நிறுத்த முடியவில்லை, அதனால் வருத்தமெதுவுமில்லை !
ஒருவரின் தேடலே பாடல்.
என்னையும் அந்த பயணத்தினுள் கொண்டுச் சென்ற விதம் தனி மாடல்.
எளிமையான வரிகள், அத்தனையும் அர்த்தம் பொதிந்த விழிகள்!
பாட்டிலும் ஓவியம் தீட்டிய பாடலாசிரியர் Oviya Oommapathy -க்கு ஒரு சலாம் .
இனி வரும் உன் கவிதைக்கு பூசலாமே தங்க முலாம் !
ஈஷ்வர், நீ பாட்டுக்கு உயிர் கொடுக்கவில்லை,
அந்த பயணத்திற்கே உயிரூட்டியிருக்கின்றாய்!
அதிரடி இல்லை ; ஆர்ப்பாட்டம் இல்லை; இரைச்சல் இல்லை; இயல்பு மீறல் இல்லை;
இருப்பது எல்லாம் இசை மட்டுமே..... கேட்பவரின் காதுகளுக்கு மெல்லிசைக் கிட்டுமே!
தேவையறிந்து இசை கொடுத்து, தேர்ச்சிப் பெற்று விட்டாய்!
பாடியவரும் அலட்டிக் கொள்ளாமல் மெருகேற்றி விட்டார்.
பாடியவரும் அலட்டிக் கொள்ளாமல் மெருகேற்றி விட்டார்.
தேர்ச்சியை அங்கீகரித்தது உலகின் மிகச் சிறந்த 100 விழாக்களில் ஒன்று.
அந்த ஆஸ்கார் குழுவே உனை ஆராதிக்கிறது எழுந்து நின்று!
உனக்கும் உன்னிசைக்கும் நானும் இரசிகன் என்பதே எனக்குப் பெருமை தான்!
பக்கம் பக்கமாக வாழ்த்த ஆசை , ஆனால் இது வெறும் தொடக்கம் தான்!
இன்னும் உச்சத்தை நீ எட்ட வேண்டும்
மிச்சத்தை அங்கெல்லாம் நான் வந்து வாழ்த்த வேண்டும்!
மிச்சத்தை அங்கெல்லாம் நான் வந்து வாழ்த்த வேண்டும்!
மண்ணின் மைந்தனுக்கு #சிந்தித்தவேளை தலை வணங்குகிறது.
செல்வோம் வா !
விழியோடு உறவாட
மறந்தேன்
வலியோடு தனியாகக்
கிடந்தேன்
அழகான பயணத்தில்
தொலைந்தேன்
காற்றோடு கதைப்
பேச முயன்றேன்!
மண்வாசம் மறந்து
நான் இருந்தேன்
மனம் போகும் வழியில்
நான் நடந்தேன்
கண் இருந்தும் குருடாகக்
கிடந்தேன்
எழில் கொண்ட பயணத்தில்
தெளிந்தேன்
நீயும் நானும் காற்றைப் போல கோர்த்துக் கொள்வோம் வா
கண்கள் மூடி நீண்ட
தூரம் பேசி செல்வோம் வா!
ஓ…..ஓ…….ஓ……..ஓ…….ஓ……ஓஓஓ……….
நதியோரம் அழைத்தேனே
விளையாட துடித்தேனே
பனிமேலே விழுந்தேனே…
உன்னை நானும் பார்க்கும் போது
கதிரோடு கலந்தேனே
குயில் பாடி எழுந்தேனே
மலர் கண்டு மலர்ந்தேனே
உன்னில் நானும்
சேரும் போது
உள்ளுக்குள்ளே நான்
புது இன்பம் கொண்டேனே
புற்கள் மோதியே
விழுந்தேன் உயிரே
கண்ணுக்குளே தான்
பல காட்சி கண்டேனே
ஆற்றின் ஓரம் தான்
அமர்ந்தேன், அழகே….!
No comments:
Post a Comment